Friday, January 28, 2011

ப்ளாக்கில் தான் சாருவை பிழிகிறார்கள் என்றால் வெகுஜன பத்திரிக்கையிலுமா...

எல்லா தமிழ் ப்ளாக்கரும் இனைய குப்பையை உற்பத்தி செய்பவர்கள் என்று சமணன் கடந்த வார விகடனில் ஒரு சிறுகதை எழுதி இருக்கிறார். அது குறித்து யாரவது எழுதுவார்கள் என்று எதிர்பார்த்தேன். யாரும் கவனிக்க வில்லையா...சாதாரண விஷயத்துக்கெல்லாம் முஷ்டி மடக்குபவர்கள் இங்கு அதிகம் என்று கேள்விப்பட்டேன். எருமை மாடுமேல தானே மழை என்று ஒதுங்கி கொண்டார்களா..? தெரியவில்லை. (ஊதார சங்கை ஊதிட்டேன்)

அதுமட்டுமில்ல, புத்தக விழாவில் நடக்கும் எல்லா கேலி கூத்துகளையும் சேர்த்தே தான் கிழி கிழியென்று கிழித்திருந்தார். கண்டிப்பாக இவரும் ஒரு காலத்தில் ப்ளாக்கராக இருந்திருப்பார். ஒட்டு பிடிக்கும் கலாச்சாரத்தில் இவருக்கு உடன்பாடு இல்லாமல் வெளியேறி இருக்கலாம். ப்ளாக்கர் "ரசிகனிடம்" அதற்கான தந்திரங்கள் ஏராளம். கேட்டால் சொல்லிதந்திருப்பாரே... அதுக்குள்ளே same side கோல் போட்டுடீங்களே சமணன் சார்..!

ப்ளாக்கில் தான் சாருவை பிழிகிறார்கள் என்றால் வெகுஜன பத்திரிக்கையிலுமா... ஒருவேளை இது "எதிர்கட்சிகளின் சதியோ" என்று யோசித்தேன்..ஆனால் அடுத்த ரிவிட்டு அங்கேயும் விழுந்திருக்கிறது. சமணன் நல்லவரா..கெட்டவரா...நல்லி குப்புசமியையும் விட்டுவைக்கவில்லை. அவ்வளவு ஏன் புத்தக காட்சி கேண்டீன் வடையை கூட விட்டு வைக்கலையே...முதல்ல தயவு செய்து அந்த கதையே படிங்க சாமி..

13 comments:

 1. அந்த கதைன்னா, எந்த கதை ., எங்களுக்கு சொல்லுங்க அந்த கதையை , பிறகு
  வோட்டு வாங்கும் கலையை சொல்லித்தருகிறேன்...

  உங்களுக்கும் வோட்டு போட்டுவிட்டேன், போதுமா

  ReplyDelete
 2. கதையை தெரிஞ்சிக்கிட்டு, அந்த கதையை படிச்சா சுவாரசியம் இருக்காது..வாங்கி படிங்க...நீங்க நாலு பதிவு போடற அளவுக்கு சரக்கு இருக்கு. அதுமட்டுமில்ல அதை வச்சு இன்னும் இரண்டு பதிவு நான் போட்ட்ருவன்ல..

  ReplyDelete
 3. அண்ணே அத படிச்சுட்டோம் ... அவர் பிளாக்கர் தான் .. இல்லை என்றால் இவ்வளவு நக்கலும் நையாண்டியுமாக எழுத முடியுமா...? கலக்கல் பதிவு சாரி கதை. கா.பா சொல்லி படித்து விழுந்து விழுந்து சிரித்தேன்... பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 4. காலம் மாறிப்போச்சு.
  இன்ரநெற் பார்ப்பவர்கள் இப்போ வார இதழ்கள் படிப்பதில்லை.
  வார இதழ்கள் படிப்பவர்கள் இன்ரநெற் பார்ப்பதில்லை.
  இடைநடுவில் சிலர் உள்ளனர்.

  ReplyDelete
 5. onnum puriyala :(

  ReplyDelete
 6. முன்னைப்போல எவரும் வார பத்திரிக்கை குப்பைகளை படிப்பதில்லை என்பதே உண்மை. மற்றபடி சமணன் தன கருத்துக்களை கதையாக எழுதியிருக்கலாம் அவ்வளவே.இதற்காக பதிவர்கள் வம்படிக்க வேண்டும் என்பது இல்லையே. விடுங்கள் .

  ReplyDelete
 7. நன்றி மதுரை சரவணன்...அவர் ப்ளாகர் என்பதில் சந்தோசம், வலைப்பதிவின் பெயரை சொல்லலையே அண்ணாச்சி..

  ReplyDelete
 8. உங்களுக்கு எங்க மேல ஏன் இவ்ளோ கோவம் ?? எங்களையும் அந்த கதைய படிக்க சொல்லி மாட்டிவிடுரிங்க

  ReplyDelete
 9. கோபம் இல்லை அமைச்சரே...ஒரு வேதனை தான் நம் வீட்டை பற்றி ஒருவர் விமர்சிக்கும் போது யாரும் வாய் திறக்காமல் இருக்கிறார்களே
  என்று நினைத்தேன்

  ReplyDelete
 10. --------------------
  கண்டிப்பாக இவரும் ஒரு காலத்தில் ப்ளாக்கராக
  இருந்திருப்பார்.
  -----------------------

  நல்ல கண்டுபிடிப்பு!

  ReplyDelete
 11. என்ன பேருங்க இது....என்னமோ போங்க...என்னை கலாய்சிடீங்க

  ReplyDelete
 12. நன்றி தமிழ் தோட்டம்

  ReplyDelete

உங்களின் வரவிற்கான முத்திரையை வைத்துவிட்டு போங்கள். உங்களின் ஒரு சில நிமிடத்தை இங்கு செலவளிததற்க்கு நன்றி. மீண்டும் நேரம் கிடைக்கும் போது வாங்க.

கவனம் தேவை - மோடி வருகை - ஏனிந்த பதற்றம்

பிரதமர் மோடி விசிட் யாருக்கு அச்சுறுத்தல்...! ஏனிந்த பதற்றம்...! காட்சி ஊடகங்களில் நேற்று கலந்துகட்டி அடித்துக்கொண்டிருந்தார்கள். ப...