Thursday, January 20, 2011

கலைஞர், சீமான், சோ - விற்கு ஒரு கேள்வி..

கலைஞர் அய்யாவுக்கு ஒரு கேள்வி..

நாளுக்கு நாள் வன்முறை தலை விரித்தாடுகிறது. காவல் துறையை தன் கட்டுபாட்டில் வைத்திருக்கும் கலைஞருக்கு கூட்டணி கவலையும் 2G ஸ்பெக்ட்ரம் கவலையுமே பெரும்பாடாக இருக்கிறது. பொதுவாகவே தி. மு. க ஆட்சியில் ரவுடிகளின் அட்டகாஷம் தாங்க முடியாத எல்லைக்கு போகும். அதுவும் அட்சி முடிவில் சொல்ல தேவையில்லை. ஒரு வேலை அடுத்த ஆட்சி வந்தால் எதுவும் செய்ய முடியாது என்றோ என்னவோ ரவுடிகளின் பல பழிவாங்கும் அவலங்கள் அரங்கேறுகின்றன..

நேற்றைய தினமலர் செய்தியில் சென்னையில் மட்டும் கடந்த 17 தினங்களில் 13 கொலைகள் நடந்திருகிறது. இன்றைய செய்தியில் காஞ்சிபுரத்தில் 5 கொலைகள் நடந்திருப்பதாக செய்தி வந்திருக்கிறது...தமிழ் நாடு முழுவதும் கணக்கெடுத்தால் எவ்வளவோ.. அதுமட்டுமில்லாமல் எத்தனையோ கொள்ளை சம்பவங்கள் வேறு. கலைஞர் அய்யா குடியிருக்க வீடு கொடுக்கறேன் என்கிறீர்கள் சரி..குடியிருக்க மக்கள் உயிரோடும் உடைமயோடும் இருக்க வேண்டாமா... அதற்கான நடவடிக்கையும் உங்கள் வீடு வழங்கும் திட்டம் போல் 2010-2016-ல் தானா...

சீமானுக்கு ஒரு கேள்வி..

எங்கோ தொலை தூரத்தில் ஒரு வெளிச்ச புள்ளி தெரிவதை தமிழன் கண்கள் உணர்கின்றன... சீமான் தலைமையிலாவது தமிழினம் தலை நிமிர வேண்டும் என்பதே சராசரி (என் போன்ற) தமிழரின் பெருங்கனவு. மீனவனை அடித்தால் சிங்கள மாணவனை அடிப்பேன் என்றதற்காக சிறை சென்று மீண்ட தாங்கள், இப்போது ஒரு தமிழக மீனவனை சுட்டு கொன்றிருக்கிறார்கள், போதாகுறைக்கு நேற்றும் கூட வேதாரண்யம் மீனவர்கள் அடித்து, வலையை கிழித்து துரத்தியதை செய்தியில் பார்த்தேன். ஒரு எதிர்ப்பு குரல் கூட தங்களிடம் இருந்து வரவில்லையே எங்கே அய்யா போனீர்...? நீரும் சாயம் வெளுத்த நரியாக போய்விடாதீர்..

திரு. சோ அவர்களுக்கு ஒரு கேள்வி..

துக்ளக் 41 ஆண்டு விழாவில் ஆளுங்கட்சி அவலங்களை கிழி கிழியென்று வெளுத்து வாங்கினார்கள் ஆசிரியர் திரு. சோவும், குருமூர்த்தி அவர்களும். வாசர்களும் தங்கள் பங்கிற்கு கேள்விகனைகளை தொடுத்தார்கள். ஒரு தெளிவான திடமான தமிழர் கூட்டத்தை அங்கு பார்க்க முடிந்தது..(கண்டிப்பாக அங்கு கூடியிருந்தவர் அனைவரும் பிரமினர் மட்டுமல்ல..) அவர்கள் எல்லோரும் தவறாமல் சரியான நபர்களுக்கு ஒட்டு போட்டால் சரிதான். தலைமை தேர்தல்
ஆணையருக்கு இருக்கும் அதிகாரத்திற்கு எவ்வளோ பெரிய மாற்றங்களை தேர்தலில் கொண்டு வரமுடியும் என்று தோன்றுகிறது..குறைந்தபட்சம் கிரிமினல் வழக்குகளில் தொடர்புள்ள எவரையும் அனுமதி மறுப்பது, குறைந்தபட்ச கல்வி தகுதி போன்ற விஷயங்களிலாவது. என் கேள்வி - இந்நாட்டின் ஓட்டுரிமை பெற்ற குடிமகன் என்ற வகையில் வேட்பாளர்களின் இந்த குறைந்த பட்ச தகுதியோடுதான் தேர்ந்தெடுக்க வேண்டுமென்று பொதுநல வழக்கு தாக்கல் செய்ய முடியுமா...அரசு தங்களின் பணிக்காக பணியாளர்களுக்கு குறைந்தபட்ச தகுதியை நிர்ணயிக்கும் பொழுது அரசை நியமிக்கும் நாங்கள் ஏன் அவர்களுக்கு குறைந்தபட்ச தகுதியை நிர்ணயிக்க கூடாது...?

6 comments:

  1. சீமானின் சாயம் இப்பொழுதாவது வெளுத்தது என்பதை தெரிந்து கொண்டீரே நன்றி இதுவும் தேர்தல் வரை தான் சீமானின் ஆவேசம் பொருத்து இருந்து பாரும்

    ReplyDelete
  2. நன்றி கானல்...
    தங்களின் பெயரை போலவே..தமிழர்களின் கனவும் வெறும் கானல் நீராகவே போய்விடுமோ..

    ReplyDelete
  3. மீனவன் செத்தால் ஏன் சீமான் மட்டும்தான்
    கொதிக்க வேண்டுமா ????நீர் என்ன செய்துக்கொண்டு
    இருக்கிறீர் ,இப்படி பதிவு போட்டு நீரும் ஒரு
    மொக்கை என்று காண்பிப்பதற்கா ??????

    ReplyDelete
  4. இந்த நாற்றமெடுத்த அரசியல் எனக்கும் புரியவும் இல்லை. அது எனக்கு தேவையும் இல்லை.
    மொக்கை பதிவராகவே இருப்பதில் எனகொன்றும் வருத்தமில்லை.

    ReplyDelete
  5. appuram ethukkuaga arasiyala pathi pathivu eluthureenga durai..

    ReplyDelete
  6. முகவரி இல்லாத அல்லது முகவரி வெளிபடுத்த விரும்பாத நண்பரே நாற்றமெடுத்த அரசியல் புரியவில்லை என்று சொன்னேனே தவிர அரசியல்
    தெரியாது என்று சொல்லவில்லை.

    ஈட்டலும், காத்தலும், காத்து வகுத்தலும் என்பதற்கு உமக்கு விளக்கம் தெரிந்தால் சொல்லும் பார்ப்போம்

    ReplyDelete

உங்களின் வரவிற்கான முத்திரையை வைத்துவிட்டு போங்கள். உங்களின் ஒரு சில நிமிடத்தை இங்கு செலவளிததற்க்கு நன்றி. மீண்டும் நேரம் கிடைக்கும் போது வாங்க.

மம்தாவை பிரதமர் வேட்பாளராக....!

மிக நீண்ட நாட்களுக்கு பிறகு இன்று பதிவிட தோன்றியது. முதல் காரணம் தமிழகத்தை பிடித்திருந்த இருள் விலகுகிறது. கூடிய விரைவில் இந்தியாவை பீடித்தி...