Tuesday, November 7, 2017

கவனம் தேவை - மோடி வருகை - ஏனிந்த பதற்றம்

பிரதமர் மோடி விசிட் யாருக்கு அச்சுறுத்தல்...! ஏனிந்த பதற்றம்...!
காட்சி ஊடகங்களில் நேற்று கலந்துகட்டி அடித்துக்கொண்டிருந்தார்கள். பிரதமர் மோடி பயணத்தை யாராலும் மேம்போக்காக எடுத்துக்கொள்ள முடியவில்லை. காரணம் மிக எளிது.

1. சரிந்து வரும் ப ஜ காவின் செல்வாக்கு
2. தங்களுக்கு ஒரு பஞ்ச கல்யாணியாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பில் சவாரி செய்தவர்கள் இது ஒரு நொண்டி குதிரை என்பதை மிக தாமதாக புரிந்து கொண்டது.
3. சமீபத்திய உளவுத்துறை அறிக்கை சொன்ன செய்தி
4. கமலின் வருகை, ரஜினியின் அமைதி
5. தொடர்ந்து வரும் மக்களின் எதிர்ப்பு.

வலிமையான ஆளும் கட்சியாக இருந்தும் தமிழகத்தில் தங்களின் இருப்பை வலிமையை நிலை நிறுத்தி கொள்ள முடியாமல் தவிப்பது, எந்த ஒரு வழியும் புலப்படாமல் இருப்பது, தமிழக தலைமையில் இருக்கும் குழப்பங்கள், மக்களை விட்டு விலகியே இருப்பது போன்ற காரணங்களால் அதிரடியான ஒரு செயல் தம்மிடம் இருந்தோ அல்லது டெல்லியிடமிருந்தோ வந்தாலொழிய நாம் பேசுபொருளாக கூட இருக்க மாட்டோம் என்பதை உணர்ந்தே கடைசி நிமிடத்தில் பிரதமரின் பயண திட்டத்தில் கலைஞர் சந்திப்பு இடம் பெற்றிருக்கலாம்.

தங்களின் கருத்தையொத்த தங்களின் கொள்கைகளுக்கு மிக நெருக்கமான கட்சியென்று சொல்லிக்கொள்பவர்கள் அந்த கட்சியின் ஆக பெரும் ஆளுமையாக இருந்த அம்மாவை கூட சிகிச்சையில் இருந்த பொழுது பார்க்க வராதவர், கலைஞரை, அதுவும் ஸ்டாலின் அவர்களின் சமீபத்திய கடுமையான ப ஜ கா எதிர்ப்பு நிலைப்பாட்டையும் கருத்தில் கொள்ளாமல் சந்திக்கிறார் என்பது நெருடலான ஒரு விஷயம் தான். ஆனால் எதை எதிர்பார்த்தார்களோ  அது நடந்து விட்டது. பிரதமரின் பயண திட்டம் ஒரு வகையில் அவர்களுக்கு வெற்றி தான். தமிழகம் மட்டுமில்லாமல் தேசிய ஊடகங்களிலும் இது பேசுபொருளாக இருந்தது என்பது வெற்றியல்லாமல் வேறு என்ன.

தி மு காவின் நிலைப்பாடு என்ன என்பது அடுத்தடுத்தது வரும் நாட்களின் அரசியல் நகர்வுகளில் இருந்து தெரியவரும். ப ஜ காவுடன் கூட்டு என்பது தற்கொலை தான் என்பதை புரியாதவர் அல்ல தளபதி. இருந்தாலும் கடைசி நிமிட கூட்டல் கழித்தல் கணக்குகள் எந்த பக்கமும் வெற்றியை பறிக்கவும் செய்யும் வாரி கொடுக்கவும் செய்யும். மக்கள் செல்வாக்கு இருந்தும், வலிமையான கூட்டணி இருந்தும், மக்களின் விருப்பத்திற்கு மாறான கூட்டணங்கள் எப்போதும் வெற்றி பெற்றதில்லை என்பதற்கு பல உதாரணங்கள் உண்டு. தி மு க மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் பதற்றம் ஒரு வகையில் நியாயமானது. அவர்களிடம் இருந்து விலகி போவது என்பது மிகப்பெரிய வீழ்ச்சியாக கூட முடிந்து விடும். கவனம் தேவை.

Monday, November 6, 2017

பிரதமர் மோடி விசிட் யாருக்கு அச்சுறுத்தல்...! ஏனிந்த பதற்றம்...!

காட்சி ஊடகங்களில் நேற்று கலந்துகட்டி அடித்துக்கொண்டிருந்தார்கள். பிரதமர் மோடி பயணத்தை யாராலும் மேம்போக்காக எடுத்துக்கொள்ள முடியவில்லை. காரணம் மிக எளிது.

1. சரிந்து வரும் ப ஜ காவின் செல்வாக்கு
2. தங்களுக்கு ஒரு பஞ்ச கல்யாணியாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பில் சவாரி செய்தவர்கள் இது ஒரு நொண்டி குதிரை என்பதை மிக தாமதாக புரிந்து கொண்டது.
3. சமீபத்திய உளவுத்துறை அறிக்கை சொன்ன செய்தி
4. கமலின் வருகை, ரஜினியின் அமைதி
5. தொடர்ந்து வரும் மக்களின் எதிர்ப்பு.


வலிமையான ஆளும் கட்சியாக இருந்தும் தமிழகத்தில் தங்களின் இருப்பை வலிமையை நிலை நிறுத்தி கொள்ள முடியாமல் தவிப்பது, எந்த ஒரு வழியும் புலப்படாமல் இருப்பது, தமிழக தலைமையில் இருக்கும் குழப்பங்கள், மக்களை விட்டு விலகியே இருப்பது போன்ற காரணங்களால் அதிரடியான ஒரு செயல் தம்மிடம் இருந்தோ அல்லது டெல்லியிடமிருந்தோ வந்தாலொழிய நாம் பேசுபொருளாக கூட இருக்க மாட்டோம் என்பதை உணர்ந்தே கடைசி நிமிடத்தில் பிரதமரின் பயண திட்டத்தில் கலைஞர் சந்திப்பு இடம் பெற்றிருக்கலாம்.


தங்களின் கருத்தையொத்த தங்களின் கொள்கைகளுக்கு மிக நெருக்கமான கட்சியென்று சொல்லிக்கொள்பவர்கள் அந்த கட்சியின் ஆக பெரும் ஆளுமையாக இருந்த அம்மாவை கூட சிகிச்சையில் இருந்த பொழுது பார்க்க வராதவர், கலைஞரை, அதுவும் ஸ்டாலின் அவர்களின் சமீபத்திய கடுமையான ப ஜ கா எதிர்ப்பு நிலைப்பாட்டையும் கருத்தில் கொள்ளாமல் சந்திக்கிறார் என்பது நெருடலான ஒரு விஷயம் தான். ஆனால் எதை எதிர்பார்த்தார்களோ  அது நடந்து விட்டது. பிரதமரின் பயண திட்டம் ஒரு வகையில் அவர்களுக்கு வெற்றி தான். தமிழகம் மட்டுமில்லாமல் தேசிய ஊடகங்களிலும் இது பேசுபொருளாக இருந்தது என்பது வெற்றியல்லாமல் வேறு என்ன.


தி மு காவின் நிலைப்பாடு என்ன என்பது அடுத்தடுத்தது வரும் நாட்களின் அரசியல் நகர்வுகளில் இருந்து தெரியவரும். ப ஜ காவுடன் கூட்டு என்பது தற்கொலை தான் என்பதை புரியாதவர் அல்ல தளபதி. இருந்தாலும் கடைசி நிமிட கூட்டல் கழித்தல் கணக்குகள் எந்த பக்கமும் வெற்றியை பறிக்கவும் செய்யும் வாரி கொடுக்கவும் செய்யும். மக்கள் செல்வாக்கு இருந்தும், வலிமையான கூட்டணி இருந்தும், மக்களின் விருப்பத்திற்கு மாறான கூட்டணங்கள் எப்போதும் வெற்றி பெற்றதில்லை என்பதற்கு பல உதாரணங்கள் உண்டு. தி மு க மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் பதற்றம் ஒரு வகையில் நியாயமானது. அவர்களிடம் இருந்து விலகி போவது என்பது மிகப்பெரிய வீழ்ச்சியாக கூட முடிந்து விடும். கவனம் தேவை.

Sunday, November 5, 2017

அரசியலில் கமலின் ஆளுமை...!


கமலுக்கு எதிராக வைக்க கூடிய முழக்கங்கள் எல்லாம் அவருக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கை அதிகரித்து கொண்டே இருப்பதை ஆளுபவர்கள் புரிந்து கொண்டார்களா என்று தெரியவில்லை.


மெர்சலுக்கு அவர்கள் ஆற்றிய எதிர்வினையும் அதன் விளைவால் தேசிய அளவில் நடிகர் விஜய்க்கு மட்டுமில்லாமல் GST க்கு எதிரான கட்சிகளையும் மக்களையும் ஒரு புள்ளியில் இணைத்தது.




கமல் மாதிரியான பரந்துபட்ட ஒரு ப(டி)டைப்பாளியை, வலிமையான வாத திறமையுள்ள ஒரு ஆளுமையை வெல்லும் ஒரு வலிமையான எதிர்வாதிகள் அங்கு குறைவு. குறிப்பாக தமிழகத்தில் அப்படியான ஒரு ஆளுமையான வாத திறமை தேடினாலும் கிடைக்காது.



கமல் சொன்னதை அவர்கள் உண்மை என்று நிரூபித்து கொண்டே அதை இல்லையென்று நிரூபிக்க முனைவது வேடிக்கையாக இருக்கிறது. கமல் என்ன சொன்னார்  என்றோ அவருக்கு எதிராக என்ன சொன்னார்கள் என்றோ கூட நான் குறிப்பிடாமல் தான் என் கருத்தை பதிவு செய்கிறேன். கருத்து சுதந்திரம் என்ன நிலையில் இருக்கிறது என்பதற்கு நேற்றே ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. கூடிய விரைவில் இந்த நிலைகள் எல்லாம் மாறும் என்று நம்புவோம்.




கமல் விரைவில் வெளிப்படையான அரசியலுக்கு வருவது அவருக்கும் தமிழகத்திற்கும் நலம் பயக்கும்.
அவரின் அரசியல் வருகை என்பது வழ வழ கொழ கொழ என்றில்லாமல் அதிரடியாகவும் தெளிவான தமிழ் தமிழகத்தை முன்னிலை படுத்தும் படியான கொள்கைகளோடும் இருக்குமானால் இவரால் ஓட்டை பிரிக்க மட்டுமே முடியும் ஆட்சியை பிடிக்க முடியாது என்பவர்களுக்கு சம்மட்டி அடியாக இருக்கும். ஒரு வெற்றிடம் இருக்கிறது என்று கட்சிகளும், ஒரு மாற்றம் தேவை என்ற மனநிலையில் மக்களும் இருக்கின்ற இன்றைய நிலையில் அவரின் வருகை ஒரு மாற்றத்தை கொடுக்குமா... இல்லை ஓட்டை பிரித்து மீண்டும் கழகங்களின் கை பலம் பெறுமா..? பொறுத்திருந்து பார்ப்போம்.



























பின்குறிப்பு : உன்னால் முடியும் தம்பி புகைப்படத்தை உபயோகித்தது யதேட்சையானதல்ல


பட்டினத்தாரின் மிக அருமையான எளிய பாடல்

எத்தனையோ பாடல்களை பதிவுகளை படிக்கிறோம் கேட்கிறோம். ஆனால், பட்டினத்தாரின் இந்த பாடல் படித்ததும் பகிர தோன்றியது. "நாம் பெற்ற இன்பம் பெறுக இந்த வையகம்" தமிழுக்கும் தமிழனுக்கு மட்டுமே கிடைக்கும் இத்தகைய பெறற்கரிய இன்பம்.
இதோ அந்த பாடல்.
இது வரைக்கும் செய்ததெல்லாம் போகட்டும். இப்பொழுதேனும் இறைவனை நினையுங்கள். நம் எல்லாம் பிழையும் அவன் பொருத்தருள்வான்.  பட்டினத்தாரின் மிக அருமையான எளிய பாடல்.


கல்லாப் பிழையும் கருதாப் பிழையும் கசிந்து உருகி
நில்லாப் பிழையும் நினையாப் பிழையும் நின் அஞ்செழுத்தைச்
சொல்லாப் பிழையும் துதியாப் பிழையும் தொழாப் பிழையும்
எல்லாப் பிழையும் பொருத்து அருள்வாய் கச்சி ஏகம்பனே.

Thursday, November 2, 2017

நாம் சைவமா அசைவமா - அறிவியல் விளக்கம்

மாமிசம் மனித உணவா?*
இயற்கை கோட்பாடுகளின் படி மனிதன் சைவமா?அசைவமா?
இயற்கையில் இரண்டு விதமான அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
...
1. சைவம் சாப்பிடும் ஜீவராசிகள் .
2. அசைவம் சாப்பிடும் ஜீவராசிகள் .


இவ்விரு ஜீவராசிகளையும் சற்றே ஆராய்ந்து பார்த்தால் மனிதன் சைவமா?அல்லது அசைவமா? என சுலபமாக தெரிந்து கொள்ளலாம். சைவ ஜீவராசிகளுக்கு உதாரணமாக மாடு, குதிரை, கழுதை, யானை, மான் போன்றவற்றை எடுத்துக் கொள்வோம். அசைவ ஜீவராசிகளுக்கு உதாரணமாக சிங்கம், புலி, நாய் போன்றவற்றை எடுத்துக் கொள்வோம். இனி ஆராய்ச்சி செய்வோம்.
*1. இரு ஜீவராசிகளுக்கும் பற்களின் அமைப்பு* .
சைவ ஜீவராசிகளுக்கு பற்கள் மனிதனை போல் தட்டையாக அமைந்துள்ளன.
அசைவ இனங்களுக்கு கூர்மையாக பற்கள் உள்ளன.
*2. எவ்வாறு தண்ணீர் அருந்துகின்றன.*
சைவ ஜீவராசிகள் அனைத்தும் மனிதனைப் போல் தண்ணீரை உறிஞ்சி தான் குடிக்கின்றன.
அசைவ ஜீவராசிகள் தண்ணீரை நக்கிக் குடிக்கின்றன.
*3. கால் விரல்கள்:-*
சைவ ஜீவராசிகளுக்கு விரல்கள் மனிதனைப் போல் சிறியதாகவும், பாதம் தட்டையாகவும் இருக்கும்.
அசைவ ஜீவராசிகளுக்கு விரல்கள் நீளமாகவும், கூர்மையான நகங்களுடனும் இருக்கும்.
*4. குடல் அமைப்பு:*
சைவ ஜீவராசிகளுக்கு மனிதனைப் போன்றே 15 அடி வரை நீளமான குடலாக உள்ளது.
காரணம், சைவ சாப்பாட்டில் நச்சுத்தன்மை குறைவாகவும், சத்துக்கள் அதிகமாகவும் இருப்பதால் உணவானது குடலில் சற்று அதிக நேரம் இருப்பதற்கான ஏற்பாடு எனவும்,
அசைவ ஜீவராசிகளுக்கு அசைவ உணவில் நச்சுதன்மை அதிகம் உள்ளதால் மிக குறைவான நேரத்தில் குடலை விட்டு வெளியேறுவதற்கு ஏற்றாற்போல் 5 அடிகள் மட்டுமே குடலின் நீளமாக உள்ளது.
*5. சமநிலையான உடல் உஷ்ணம்:-*
சைவ ஜீவராசிகளுக்கு மனிதனைப் போன்றே உடலில் வெப்பம் அதிகமானால் தாகத்தை உண்டாக்கி அதிக தண்ணீர் பருக வைத்து வியர்வை என்ற செயலின் மூலமாக உடலை குளிர்விக்கிறது. அல்லது சமநிலையில் வைக்கிறது. ஆனால் , அசைவ ஜீவராசிகளுக்கு இந்த ஏற்பாடு இல்லை. ஆதலால் தனது நாக்கினை தொங்க விட்டுக் கொண்டு அது தன்னை குளிர்விக்கிறது.
*6. மலத்தின் தன்மை*
சைவ ஜீவராசிகளுக்கு மனிதனைப் (சைவம் சாப்பிடும் மனிதன்) போன்றே மலம் கழிப்பதில் சிரமம் இருக்காது. மலம் துர்நாற்றம் வீசாது. அசைவ ஜீவராசிகளுக்கு (அசைவம் சாப்பிடும் மனிதன் உட்பட) மலம் கழிப்பதில் சிரமமும், மலம் அதிக துர்நாற்றத்துடனும் இருக்கும்.இதுவரை உடற்கூறு அளவில் ஆராய்ந்தோம்.
இனி மனநிலையில் ஆராயலாம்.
*1. வாழும் முறை
சைவ ஜீவராசிகள் ஒற்றுமையாக அதாவது கூட்டம் கூட்டமாக வாழும். மனிதனும் அவ்வாறே வாழ ஆசைப்படுகிறான். ஆனால் , அசைவ ஜீவராசிகள் தனித்தனியாக வாழும் இயல்புடையது. தன் எல்லைக்குள் தன் இனத்தைச் சார்ந்த இன்னொரு விலங்கினை அனுமதிக்காது.(இன்றைய மனிதனின் நிலையும் இதுதான்.)
*2. இயல்பு
சைவ ஜீவராசிகளின் இயல்பான குணம் சாந்தமாகவும், அமைதியாகவும் இருக்கும்.
அசைவ ஜீவராசிகள் வேகமாகவும், ஆக்ரோசமாகவும் இருக்கும்.
*3. ஆக்கப்பூர்வமான வேலைகள்
சைவ ஜீவராசிகளை ஆக்கபூர்வமான வேலைகளில் (உழுதல், வண்டி இழுத்தல்) ஈடுபடுத்த முடியும். அசைவ ஜீவராசிகளால் இவ்வாறான செயல்கள் எதுவும் செய்ய இயலாது.
*மன இறுக்கம்:-*
அசைவ உணவு சாப்பிடுபவர்கள் அதிக மன இறுக்கத்திற்கு உள்ளாவது ஏன்?
ஒவ்வாருவரின் உடலிலும் அபாயகரமான சமயங்களில் தப்பித்துக் கொள்வதற்காக (உடலிற்கு அதிக இயக்க சக்தியை தர ) சக்தி வாய்ந்த ஹார்மோன்கள் அட்ரீனல் சுரப்பியிலிருந்து சுரந்து இரத்தத்தில் கலக்கும்.
உதாரணமாக,
ஒரு நாய் நம்மை துரத்தினால் சாதாரண வேகத்தை விட பல மடங்கு வேகத்தில் நாம் ஒட உதவுவது இந்த அட்ரீனல் சுரப்பி சுரக்கும் நீராகும். இந்த நீரானது ஒவ்வொரு விலங்கும் வெட்டப்படும் போது அதிக அளவில் சுரந்து அதன் இரத்தத்திலும், சதைகளிலும் கலந்து இருக்கும். இவற்றை உட்கொள்ளும் மனிதன் தன் சாதாரண வேலைகளிலும் கூட ஏதோ அபாயத்தில் உள்ளது போன்ற உணர்வைப் பெறுகிறான். இதுவே மன இறுக்கமாக உருவெடுக்கிறது. மனிதன் தன் ஆறாவது அறிவை சற்றும் பயன்படுத்தாது தனக்கு அதிக சக்தியும், பலமும் வேண்டியே தான் அசைவம் சாப்பிடுவதாக எண்ணுகிறான். ஆனால், ஆச்சரியம் என்னவென்றால், சைவத்தில் தான் அதிக சக்தியும், பலமும் உள்ளது. (சைவம் சாப்பிடும் யானைக்கு பலத்தில் என்ன குறை? ) உதாரணமாக சோயா பீன்ஸில் 40% சுத்தமான புரோட்டீன் உள்ளது. இது மாமிசத்தில் உள்ளதைவிட இருமடங்கும், முட்டையில் உள்ளதைவிட நான்கு மடங்கும் அதிகமாகும்
மேற்கண்ட இந்த ஆராய்ச்சியின் மூலம் நாம் அறிய வேண்டியது.
இயற்கையின் அமைப்பு படி மனிதன் உட்கொள்ள வேண்டியது சைவமே என அறிகிறோம்.
எனவே, மனிதன் ஆரோக்கியமாகவும், அமைதியாகவும், நிம்மதியாகவும், பொறுமையாகவும், பலசாலியாகவும், ஒற்றுமையுடனும், கோபம் இல்லாமலும், மன இறுக்கம் இல்லாமலும், மலச்சிக்கல் இல்லாமலும், நோய் இல்லாமலும் வாழ ஆசைப்படுவது எனில் சைவமே உட்கொள்வது சாலச் சிறந்தது.

 

Wednesday, November 1, 2017

ஏன்டா..! அங்கும் இங்கும் தேடி செத்து தொலைகிறீர்கள்...



ஆண்டவனாகிய ஈசனை அங்கும் இங்கும் ஓடி ஓடி தேடுகின்றீர்கள். அவன் உங்கள் உள்ளே கலந்து சோதியாக உலாவுவதைக் காணாது, பற்பல இடங்களுக்கும் ஓடி ஓடி தேடியும் அலைந்தும் காண முடியாமல் உங்கள் ஆயுள் நாட்கள் கழிந்து போய் கொண்டிருக்கிறது.
அவனை ஞான நாட்டத்துடன் நாடி அச்சோதியாகிய ஈசன் நம் உடலிலேயே உட்கலந்து நிற்பதை அறியாது , மாண்டு போகும் மனிதர்கள் எண்ணற்ற கோடி.
பெறற்கரிய இம் மானிடப் பிறவியை பெற்ற... இவர்கள் என்றுதான் சோதியாக இறைவன் தம்முள்ளே கலந்து நிற்பதை உணர்ந்து கொள்வார்களோ?
சிவவாக்கியரின் என்ன ஒரு எளிய அற்புதமான பாடல்.
சிவாயநம...!!

ஓடி ஓடி ஓடி ஓடி உட்கலந்த சோதியை
நாடி நாடி நாடி நாடி நாட்களும் கழிந்து போய்
வாடி வாடி வாடி வாடி மாண்டு போன மாந்தர்கள்
கோடி கோடி கோடி கோடி எண்ணிறந்த கோடியே..!
----------------------
அது மட்டுமா..? பிறக்கும் போதே சிவா சிவா என்ற மந்திர சொல்லுடன் பிறந்த சிவவாக்கியர் இன்னும் சொல்வதை கேளுங்கள். வெறும் கல்லை சுற்றி வந்து, மாலை சாற்றி  மந்திர ஒத்துவதினால் மட்டும் அவனின் அன்பை பெற்று விட முடியாது.அவனின் இருப்பை தன்னுள் உணர்வதே சிறப்பு. உன்னுள் இருந்து அவன் பேச கேட்பதே பேரின்பம்.

சமையல் செய்யும் பாத்திரமா அதன் சுவையை அறியமுடியும் ....? என்று கேட்கிறார். இதோ அந்த எளிய இனிமையான பாடல்

“நட்ட கல்லைச் சுற்றி வந்து நாலு புஷ்பம் சாற்றியே;
சுற்றி வந்து முணு, முணுக்க சொல்லும் மந்திரம் ஏதடா!
சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ!
நட்டகல்லும் பேசுமோ; நாதன் உள்ளிருக்கையில்"









சித்தனோ, புத்தனோ அதை எளிதில் கண்டார்களா என்ன..?


கட்டுரையின் தன்மை கருதி மீண்டும் பதிவிடுகிறேன்.


(2009) நேற்று நண்பரின் அழைப்பின் பேரில் ஓர் ஆன்மீக வகுப்பிற்கு சென்றிருந்தேன்.
வடலூர் மகான் இராமலிங்க அடிகளாரின் வழி வந்த அடிகளார் கூட்டம் அது.
ஒரு ஐம்பது, ஐம்பத்தைந்து வயது மதிக்கத்தக்க ஒரு பெண்மணி தான் கூட்டத்தை வழி நடத்தினார்கள்.


அவர் பெயர் குரு அன்னை நாகம்மை. மிக மிக எளிமையான தோற்றம். இயல்பான பேச்சு. நடைமுறை வாழ்வில் குரு என்று சொல்லிக்கொண்டு அலைகின்ற பல நபர்களை நான் கண்டிருக்கிறேன்.






















எப்போதும் ஒரு கூட்டம் அவரை ஒட்டிக்கொண்டு மற்றவர்களை அண்டவிடாமல் பார்த்துகொண்டிருக்கும். ஆனால் இங்கு எந்த ஒரு குருவுக்கு உண்டான பகட்டான ஆடம்பரமோ, ஆர்பாட்டமோ இல்லாமல் மிக எளிமையாக எல்லோரோடும் உரையாடி கொண்டிருந்தார்.




இறைவனை காணலாம் என்ற கொள்கையை முன்னிறுத்தி நெருப்பு தத்துவத்தில் தங்கள் உடலையே தங்கமாக புடம் போடும் தீட்சையை குரு அன்னை வழங்கி கொண்டிருந்தார். அப்போது தீட்சை குறித்து தன்னிடம் கேள்வி எழுப்பிய ஒருவரை குறித்து அம்மா சொன்னது...என்னை பெரிதும் யோசிக்க வைத்தது. அதனாலேய இந்த பதிவு.





அந்த கேள்வி இது தான்...





எத்தனையோ சித்தர்கள் வந்து போய்விட்டார்கள்..எத்தனையோ குருமார்கள் வந்து போய்விட்டார்கள்... அவர்கள் எல்லோரும் தீட்சை பெற்றவர்களா..என்ன..? நாம் ஏன் தீட்சை எடுக்க வேண்டும்..? தீட்சை எடுக்காமலேயே அவர்கள் எல்லாம் ஞானத்தை பெறவில்லையா...?



குரு அன்னை ஒரு நிமிடம் தடுமாறித்தான் போனார். அம்புகளாய் துளைத்த கேள்விக்கு அவர் என்ன பதில் சொல்வார் என்று ஆவலோடு காத்திருந்தோம்...அப்போது அன்னை கேள்வி கேட்டவரை நோக்கி நீ ஒரு பிச்சைகாரனப்பா.. அதனால் தான் என்றார்.
இப்போது கேள்வி கேட்டவர் திகைத்து போனார். தொடர்ந்த அன்னை...இருபது முப்பது வருடங்களாக அரும்பாடுபட்டு சொத்து சேர்த்து வைத்திருக்கிறாயே அது யாருக்காக...என்றார்.





அது அது என் வாரிசுகளுக்காக என்றார் அவர்...





சரி நீ சேர்த்ததை எல்லாம் அப்படியே விட்டு விட்டு போய்விடுவாயா..இல்லை முறைப்படி
யார் யார்க்கு என்ன சேரவேண்டும் என்று பிரித்து கொடுத்துவிட்டு செல்வாயா.. என்றார் அன்னை.

கண்டிப்பாக உயில் எழுதி வைத்துவிடுவேன் என்றார்..



நீ எழுதி வைக்கும் உயில் போன்றது தான் இந்த தீட்சையும். யாரார்க்கு கிடைக்க வேண்டுமோ
அவர்களுக்கு மட்டுமே இது கிடைக்கும். கோடான கோடி ஆண்டுகளாக காட்டிலும் மலையிலும் திரிந்து கடுமையான தபசிலிருந்து தாங்கள் கண்டு கொண்ட அற்புத புதையலை, ஆன்மிக ரகசியத்தை எல்லோர்க்கும் கடை விரித்து விட முடியாது... அதற்கென்று சில நியமங்களை சித்தர்கள் அருளி சென்று இருக்கிறார்கள்..பல ஜென்மங்களாக தேடி தெரிந்துகொண்ட ஞான கருவூலத்தை படி படியாகத்தான் உன்னுள் செலுத்த முடியும்.



யாரும் சித்தனகலாம்..எல்லோரும் புத்தனகலாம்...ஆனால் எந்த ஒரு சித்தனோ, புத்தனோ அதை எளிதில் கண்டார்களா என்ன..? உன் வாரிசு எப்படி உன்னை போல் கஷ்டப்படகூடாது என்று நீ சொத்து சேர்த்து வைக்கிறாயோ... அதைப்போலத்தான் காட்டிலும் மலையிலும் திரிந்து கடுமையான தபசிலிருந்து தாங்கள் கண்டு கொண்ட அற்புத புதையலை, ஆன்மிக ரகசியத்தை அதற்கென்று சில நியமன்களோடு சித்தர்கள் அருளி சென்று இருக்கிறார்கள்..


பல ஜென்மங்களாக தேடி தெரிந்துகொண்ட ஞான கருவூலத்தை பூமியில் உதிக்கும் உயிர்கள் அனைத்தும் பெறவேண்டும் என்றும், மானிட பிறவியின் நோக்கமே அது தான் என்பதால் தான் தங்களின் நம்பிக்கைக்கு உரிய சீடர்களிடம் அந்த பணியை தொடர்ந்து செய்ய பணிக்கிறார்கள்... என்றார்.
ஆன்மிக தேடுதலோடு மலை மலையாக, கோவில் கோவிலாக ஒரு பிச்சைகாரனாய் ஏறி இறங்கும் எத்தனையோ அன்பர்களை வழிநடத்தி மெய்யான மெய்பொருளை அவருள் கண்டுகொள்ள செய்வது தான் ஒரு குருவின் பணி என்று முடித்தார்.






உண்மை தானே

மம்தாவை பிரதமர் வேட்பாளராக....!

மிக நீண்ட நாட்களுக்கு பிறகு இன்று பதிவிட தோன்றியது. முதல் காரணம் தமிழகத்தை பிடித்திருந்த இருள் விலகுகிறது. கூடிய விரைவில் இந்தியாவை பீடித்தி...