Tuesday, February 15, 2011

தமிழ் இணையதள நிர்வாகிகளுக்கு ஒரு வேண்டுகோள்..!

அண்மைய காலமாக வெளிவரும் பதிவுகளில் சில குறிப்பாக வாசகர் பரிந்துரையில் பதிவர்களின் ஓட்டுகளின் அடிப்படையில் இடம்பெறும் பதிவுகள் ஒன்றுக்கும் உதவாத குப்பைகள் தான். பல உதாரணங்களை என்னால் காட்ட முடியும். பரிந்துரைக்க வேண்டிய பதிவு என்பதற்கு நீங்கள் என்ன அளவுகோல் வைத்திருகிறீர்கள்.

1 . பயனுள்ள தகவல் என்றடிபடையிலா..?
2 . தெரிந்துகொள்ள வேண்டிய நாட்டு நடப்பு என்ற வகையிலா..?
3 . நகைசுவை பகுதி என்ற முறையிலா..?
4 . மனதை தொடும் உரைநடைக்ககவா..?

எந்த தகுதியும் இல்லாத பதிவுகள் முன்னே நிற்க, பல நல்ல விஷயங்கள் படிப்பதற்கு கிடைப்பதில்லை. நல்ல பதிவு என்பது பிரபல பதிவரிடம் இருந்து தான் வரவேண்டும் என்பதில்லை. உங்களின் உணர்வுகளை தொடும் எந்த பதிவும் நல்ல பதிவு தான். அவற்றை புதிய பதிவர்களாலும் தரமுடியும். முன்னுரிமை என்பது அன்றைய நிகழ்வுகளின் அடிப்படையில் அமைய வேண்டும். குறைந்தபட்சம் நடிகைகளின் அந்தரங்ககளை நோண்டும் பதிவுகளை தவிருங்கள்.

பிரபல பதிவர்களாகிவிட வேண்டும் என்ற ஆக்கமும் வேகமும் இருக்க வேண்டியது தான். அதற்காக பிரபல பதிவர்களை கலாய்ப்பது, அரசியல் தலைவர்களை குறைந்தபட்சம் மரியாதை கூட இல்லாமல் விமர்சனம் செய்வது, சம்பந்தமே இல்லாத தலைப்புகளை கொடுத்து ஒன்றுக்கும் உதவாத பதிவுகளை தருவது, பிரபல பதிவராவது எப்படி என்று குறுக்கு வழிகளை புதிய பதிவர்களுக்கும் அறிமுகபடுத்தி அவர்களின் எழுத்தார்வத்தை முளையிலேய அளித்து அவர்களையும் உப்புமா பதிவர்களக்கிவிடுவது போன்றவை தொடருமானால் விரைவில் தமிழ்மணம், Indi, தமிழ் பெஸ்ட் போன்ற இணையதளங்கள் வெறும் குப்பை தொட்டியாகதான் காட்சி தரும். வெறும் ஓட்டு போடுவதற்காக மட்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ள ப்ளாக்குகள் எத்தனை என்று கணகெடுத்து பாருங்கள். உண்மை புரியும்.

மிகபெரும் வரவேற்ப்பை பெரும் என்று மாங்கு மாங்கென்று எழுதிய பதிவிற்கு ஒரு பின்னூட்டம் கூட வருவதில்லை. நடிகைகளின் பெயரில் வரும் பதிவுகள் ஓட்டுகளை அள்ளுகின்றன. அவர்களின் உள்ளாடைகளை பற்றிய ஒரு பதிவை கூட வளைத்து வளைத்து ஓட்டை போட்டு பிரபலமாக்கிவிட்டார்கள் இந்த பதிவர்கள். கர்மம்.. கர்மம்.. என்ன கொடுமை சார்...இது..? தமிழ் இணையதளம் வெறும் குப்பை கூடமாக மாறிவிடக்கூடாது சார். இணையதளத்தை உபயோகபடுத்துபவர்களால் ஒரு நாட்டின் அரசாங்கமே மாறிகொண்டிருக்கும் நிலையில் வெறும் உப்புமா பதிவுகளுக்கு ஆதரவு கொடுத்து ஒரு சில நல்ல பதிவுகளை புறக்கணிக்காதிர்கள்.

ஓட்டுகளுக்காக மட்டும் ஒரு இரண்டு அல்லது மூன்று ப்ளாக்குகளை தயாரித்து கொள்ளுங்கள். உங்கள் பதிவிற்கு நீங்களே ஓட்டும், பின்னூட்டமும் இட்டு கொள்ளுங்கள் என்று ஒரு பிரபல பதிவர் எனக்கு ஆலோசனை சொன்னார். இப்படிதான் பெரும்பாலும் நடக்கிறது என்றும் ஒரு சில ஆதாரங்களை காட்டினார். வெட்ககேடு சார்..இதென்ன சாகித்ய அகடமி விருதுக்கான தேர்ந்தெடுக்கப்படும் பதிவுகளா என்ன...? எதற்கு இத்தனை பித்தலாட்டம்..?

வாசகர் பரிந்துரை என்பதை மாற்றி இனிமேல் நிர்வாகிகளின் பரிந்துரை என்று இருக்கவேண்டும். உங்களால் தேர்ந்தெடுக்கப்படும் பதிவுகள் தரமானதாக இருக்கும் என்று நம்புகிறோம். அதே போல் ஒரு சில பிரபல பதிவர்கள் தங்களுக்குள் ஒரு வட்டத்தை ஏற்படுத்திக்கொண்டு வெளிவர மறுக்கிறார்கள். நல்ல பதிவுகளை உங்களை போன்றவர்கள் பாரபட்சமில்லாமல் படித்து புதிய பதிவர்களை உற்சாகபடுத்தவேண்டும் என்று அன்புடன் வேண்டுகிறேன்.

Friday, February 11, 2011

காதலிகளுக்கும் காதலிகளை "பெற்றவர்களுக்கும்"

காதல் தினத்தன்று இந்த பதிவு வருவது மிக யதேச்சையானது தான். ஆனால் மிக பொருத்தமானதும் கூட. நீங்கள் ஒரு இளம்பெண்குழந்தைக்கு தந்தையா...? நீங்கள் ஒரு காதலரா..? மேற்கொண்டு படியுங்கள். நீங்கள் படிக்க வேண்டும் என்பது என் விருப்பம்.

என் குடும்ப நண்பர் ஒருவரின் வாழ்க்கையில் சமீபத்தில் நடந்த ஒரு சம்பவம் இந்த பதிவை எழுத தூண்டியது. பெற்றோர்களே ஜாக்கிரதை என்றும், பெண்குழந்தைகளே உஷார் என்றும் காத்த தோன்றினாலும் என்ன செய்ய இது இங்கே தினம் தினம் அரங்கேறும் ஒரு சோகம். காலத்தின் மறுக்க முடியாத யதார்த்தம். நாகரீக மோகத்திற்கு நாம் கொடுத்துகொண்டிருக்கும் விலை.

18 வயது பெண் குழந்தை. பார்த்து பார்த்து பெற்றோராலும், உறவினர்களாலும் கொண்டடி வளர்க்கப்பட்ட குழந்தை இன்று ஒரு வாலிபனோடு ஓடி போய்விட்டாள். பெற்றவர்களை விட, உறவுகளை விட, படிப்பை விட அவளுக்கு காதல் பெரிதாகி போன காரணம் என்ன என்று புரியாமல் நடைபிணமாக போய்விட்டனர் பெற்றோர்கள். அவர்களுக்கு தெரியாது இத்தனைக்கும் காரணம் அவர்களின் வளர்ப்பும் தானென்று. எத்தனை சமாதானம் சொன்னாலும், காரண காரியங்களை அடுக்கினாலும் நடந்தது நடந்தது தான். அவள் திரும்பி வர போவததுமில்லை. வர விரும்பவுமில்லை. ஆனால் அவர்களின் இந்த அனுபவம் கோடான கோடி பெற்றோருக்கு தெரிய வேண்டும்...இளம்பெண்கள் யதார்த்தத்தை புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்க்காகவே இந்த பதிவு.

இந்த அப்பனுகளே இப்படித்தாண்ட..எப்ப பார்த்தாலும் நை நை நைன்னு...!!
பெரிசு தொல்லை தாங்கலை...!!
உனக்கென்ன தெரியும் இதைபத்தியெல்லாம்...

இது ஒவ்வொரு வீட்டிலும் தினம் தினம் கேட்கும் வார்தைகள் தான். கல்லூரி போகும் பெண்ணோ, பையனோ இருந்தால் கண்டிப்பாக ஏதோ ஒரு ரூபத்தில் இந்த வசனங்கள் கேட்கும். தேவையற்ற கட்டுப்படும் சரி வரம்பு மீறிய சுதந்திரமும் சரி தவறான வளர்ப்பு தான். அளவுக்கதிகமான செல்லம், கேட்கும் போதெல்லாம் செலவிற்கு பணம் இவையெல்லாம் உங்கள் மகனோ மகளோ தவறான வழிக்கு தள்ளபடுவதர்க்கு போதுமான சூழ்நிலைகளை நீங்களே ஏற்படுத்திகொடுப்பதற்க்கு சமம்.

அவள் பிறந்ததிலிருந்தே செல்லமாக வளர்க்கப்பட்டவள். பெற்றவர்கள் ஒன்றும் டாட்ட பிர்லா இல்லையென்றாலும் அவள் கேட்டதெல்லாம் கிடைத்தது. தங்களை வருத்தி கொண்டாவது பெற்றோர்கள் அவளின் ஆசையை பூர்த்தி செய்தார்கள். உறவினர்களும் அப்படியே. அவள் ஒரு தேவதையாக வளர்ந்தாள். கல்லூரியில் எத்தனையோ கனவுகளுடன் அடியெடுத்து வைத்த அன்றைய தினம் அவளின் தகப்பனுக்கு அப்படியொரு பூரிப்பு. ஆனால் ஒரு கேடுகெட்ட கிழம், அவளின் பாட்டியின் வார்த்தையில் வந்தது அவளுக்கான சனி.

அவளின் அழகும், பேச்சும் எல்லோருக்கும் பிடிக்கும், அவளை கொத்திக்கொண்டு போக எத்தனையோ சொந்தங்கள் தயாராக இருந்தன. தன் மகள் வயிற்று பேரனுக்கு தான் அவளை மணமுடித்து தரவேண்டும் என்று பாட்டி உறுதியுடன் இருந்தாள். கல்விகனவுகளோடு இருந்தவள் நெஞ்சில் காதல் கனவுகளை நஞ்சென விதைத்தால் பாட்டி. ஒரு வேலைக்கும் செல்லாமல் ஊதாரித்தனமாக சுற்றி கொண்டு எல்லா கெட்ட பழக்கங்களுக்கும் ஆளான அவனை இவளால் தான் திருத்த முடியும் என்று அந்த பிஞ்சு மனதில் வஞ்சகமாக வாளை சுழற்றினாள். தன்னால் தான் ஒரு இளைஞன் வாழ்வு வளம் பெறுமா...?

யோசித்தாள்...யோசித்தாள்...அவளது வயது அப்படி.
திரைப்படங்கள் அவளை நம்ப வைத்தன...அவள் காதலில் விழுந்தாள்.
நட்புகள் அவளை உசுபேற்றின..? அவள் கதாநயகியானாள்..
ஊருக்கு பொறுக்கியானவன் அவளுக்கு நண்பனான்..!! அவள் காதலியானாள்

தாயிற்கும் தகப்பனுக்கும் விஷயம் தெரிந்ததும் வானுக்கும் பூமிக்கும் குதித்தார்கள். தன் தாய் தான் எல்லாவற்றிக்கும் காரணம் என்றறிந்து பெற்றவளின் உறவை முறித்தான் தகப்பன். அது அவன் முதல் தவறு. கல்லூரிக்கு தானே கொண்டுபோய் விட்டு கூட்டி வர தொடங்கினான் அது இரண்டாவது தவறு. செலவிற்கு அஞ்சு பைசா கூட தரக்கூடாது என்று கட்டைளையிட்டான். மூன்றாவது தவறு. ஆசை ஆசையாய், பார்த்து பார்த்து மகள் கொஞ்சமும் எதிர்பார்க்காத ஒன்றை செய்து விட்டாளே என்ற கவலையில் தண்ணி அடிக்க தொடங்கினான். அது அவனின் பெரும் தவறு.

எந்த மாதிரியான சூழ்நிலையில் பெற்றவர்களுக்கு மகளின் காதல் தெரியவந்தது என்பதை நான் விளக்க விரும்பவில்லை. காரணம் என் நண்பரின் மரியாதை கருதி தான். அவர் நல்லவர். நடுத்தர வர்க்கத்தின் கடினமான உழைப்பாளி, தன் குடும்பத்தின் மேல் உயிரையே வைத்திருந்த ஒரு சராசரி யதார்த்த மனிதர். அவரின் அறிவிற்கும், வளர்ப்பிற்கும் அவர் செய்தது சரி, அவரால் அவ்வளவு தான் சிந்திக்க முடியும். ஆனால் காலம் வேறொரு முடிவை எடுத்திருந்தது அவருக்கு தெரியாமலே போனது.

பெற்றவளின் உறவை முறித்ததால் அவள் வழி உறவுகள் எதிரியாயின. என்ன பொல்லாத தப்பு பண்ணிட்டாள், முறைபையன் தானே..வேற எவனுக்கு கட்டி கொடுத்தாரான்னு பார்த்தறேன். தகப்பனை வீழ்த்த சூழ்ச்சிகள் அரங்கேறின.. முதல் தவறின் பயன்.

காலையும் மாலையும் தந்தை உடன் வருவது திடீரென அவளுக்கு சுமையாயின. நான் இனி தவறு செய்யமாட்டேன் என்னை நம்புங்கள் என்று மகள் கதறியதை தகப்பன் பொருபடுத்தவில்லை. கல்லூரி முடித்து உன்னை நல்லவன் ஒருவனுக்கு மணமுடித்து கொடுப்பது எனது கடமை. இனி என்னோடு தான் நீ வரவேண்டும் என்று சொல்லிவிட்டான். தன் மேல் ஒரு துரும்பு பட்டால் கூட தங்க முடியாத அப்பா, தனக்காக எதையும் செய்யும் அப்பா இன்று தன் மேல் நம்பிக்கை இல்லாமல் கூடவே வருவது அவளுக்கு எதிர்ப்புணர்ச்சியை தூண்டியது. அப்பன் வில்லனாகி போனான். அவனின் இரண்டாவது தவறின் பயன்.

இன்றைய இளைஞர்களுக்கு குறிப்பாக காதலர்களுக்கு பெற்றவர்களை ஏமாற்றவது என்பது ஒன்றும் பெரிய விசயமில்லை. அதை வெகு விமரிசையாக சினிமாக்கள் சொல்லி தந்து விடுகின்றன. அதுவும் தொலைக்காட்சி வழி ஒரு பைசா செலவில்லாமல் வீட்டிற்குள்ளேய..அவள் பொய் சொல்லி கல்லூரி விட்டு வெளிய வந்தாள். காத்திருந்த காதலனுடன் ஊர் சுற்றினாள். தன்னை நம்பாத தகப்பனுக்கு அவளை பொறுத்தவரை இது ஒரு நல்ல பாடம். பாட்டியின் தயவில் அவனிடம் காசு புழங்கியது. அவள் அவனுக்காக செலவழித்தான். அவள் வாழ்க்கையையும். இது தகப்பன் செய்த மூன்றாம் தவறின் விளைவு.

இதுவரை தன் வாழ்வில் முன்மாதிரியான ஒரு தந்தை இன்று எதிரியானார். அவர் ஒன்றும் மது வாசனை அறிந்திராத நல்லவர் இல்லை. எப்போதாவது காதும் காதும் வைத்த மாதிரி குடித்துவிட்டு பிள்ளைகள் உறங்கிய பின் வீட்டிற்கு வருவார். அவர் மனைவிக்கு மட்டுமே தெரிந்த ரகசியம் அவர் மது அருந்துவது. இன்று எல்லாம் மாறிபோயவிட்டது. பகலில் கூட அவர் தண்ணி அடித்துவிட்டு வருவார். ஒரு பத்திரிகை செய்தியோ, தொலைக்கட்சியில் வரும் ஒரு காதல் வசனமோ கூட அவரை உணர்ச்சி வசப்பட வைத்தது. தன் மகள் தன்னை விட்டு பிரிந்து விடுவாளோ, அவளின் எதிர்காலம் இருண்டு என்னாகுமோ.. என்ற கவலையில் கிட்டத்தட்ட மன நோயாளியானர். இந்த மாதிரியான சமயங்களில் எல்லாம் மதுவே அவருக்கு பக்க துணையாக இருந்தது. தன்னை மறந்துவிட குடிப்பார். தன்னை நினைத்தும் குடிப்பார்.

அக்கம் பக்கம் இதுவே பேச்சாகி போக, அவர் எதன் பொருட்டு குடிக்கிறார் என்பது மறந்து அந்த 18 வயது பெண் குழந்தை அப்பனை வெறுக்க தொடங்கியது. அவள் காதலனும் ஒரு குடிகாரன் தான் ஆனால் அவனை மன்னித்து விட தயாரானாள். தன் பொருட்டு அவன் திருந்திவிடுவான் என்று நினைத்தாள். அவனை நம்பினாள். ஆனால் அப்பனை அவள் மன்னிக்க தயாரில்லை. இது மனித மனத்தின் வினோதம். வாழ்வின் சுவராசியமும் இது தான். பிடித்தமானவர்கள் எது செய்தாலும் இனிக்கும்.

ஒரு சாரயக்கடை திண்ணையில் தான் அந்த தேவைதையின் வாழ்க்கையில் புயலை கிளப்பிய செய்தியொன்று அவள் அப்பனின் காதுகளை வந்தடைந்தது. அது அவனோடு எங்கயோ வண்டியில் சென்றதை பார்த்தாய் ஒரு செய்தி. ஊரார் பேசும் அளவிற்கு அவளின் நடத்தை ஆகிவிட்டதே என்ற ஆத்திரத்துடன் தன்னிலை மறந்து குடித்தான். அவள் ரத்தத்தையும் குடித்து விடும் வெறியுடன் வீடு நோக்கி நடந்தான். அவனின் வேகம் கண்டு, கோபம் உணர்ந்து வீட்டிற்கு செய்தி பறந்தது. அவள் அசரவில்லை. தாயார் துடித்தாள். அவளுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. கணவனை தடுக்கவும் முடியவில்லை. அவன் அடித்து துவைத்தான். கொன்று விட துடித்தான். அக்கம்பக்கம் தடுத்தது. உறவுகள் அவனை ஆசுவாசபடுத்த வந்தது. வார்த்தைகள் இரைந்தன...நாற்றத்தில் உணவெடுக்கும் காகங்கள் கூட கதை பொத்திக்கொண்டு பறந்தன..வார்த்தைகள் நாறின. காட்சிகள் மாறின. கொல்லைபுறமாக கட்டிய துணியோடு அவள் அவன் வீடு நோக்கி பறந்தாள். அப்பனை காரி உமிழ்ந்தாள்.

போதை தெளிந்ததும் விஷயமறிந்து கதறி துடித்தான். எது நடக்க கூடாது என்று அல்லும் பகலும் தன்னை வருத்தினானோ அது நடந்துவிட்டது. அதுவும் தன்னாலேயே முடிந்து விட்டது தெரிந்து நடைபிணம் ஆனான்.

இது நடந்து ஒரு மாதத்திற்கு பின் தான் நான் அவரை சந்தித்து விஷயமறிந்தேன். இதை நாலு பேருக்கு கொண்டு சேர்க்க வேண்டும் என்று விரும்பினேன். அதற்க்க்காகதான் இந்த பதிவு. அது மட்டுமல்ல ஒரு தகப்பனாக அவர் மனநிலையை என்னால் புரிந்து கொள்ளமுடிந்தது. நான் ஒரு 3 வயது பெண் குழந்தையின் தகப்பன் என்ற முறையில் இன்னும் ஒரு சில விசயத்தை காதலர்களோடு பகிர்ந்து கொள்ள விருப்பம்.



சார் உங்களுக்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறது...உங்கள் மனைவி உங்களிடம் தான் முதலில் காட்ட சொன்னார் என்று அந்த வெள்ளுடை நர்ஸ் ஒரு ரோஜா குவியலாக கொண்டு வந்து காட்டியபொழுது மணி இரவு பதினொன்று இருபது... அந்த முதல் நிமிடம் என்னும் ஏற்படுத்திய பரவசம் எந்த வார்த்தைகளாலும் கொண்டு நிறைத்து விட முடியாது. வள்ளுவனும் வார்த்தையின்றி திணறும் இடம் அது.



முதல் சிரிப்பு, முதல் வார்த்தை, அந்த பால்மண வாசம், கோடி கொடுத்தாலும் கிடைத்துவிடாத அந்த எச்சிலின் சுவை, சொல்ல ஆயிரம் அனுபவங்கள். அந்த செல்ல குழந்தையின் மல ஜாலங்கள் கூட முகம் சுளிக்க வைத்ததில்லை. பார்த்து பார்த்து அந்த குழந்தையை நாங்கள் வளர்கிறோம். நான் மட்டுமல்ல எல்லா பெற்றோரும் தான். கல்லூரி படிக்கும் போது, ஏன் கல்யாணத்திற்கு முன்பு வரை கூட சில விஷயங்களில் என் பெற்றோரை நான் கடிந்திருக்கிறேன். ஆனால் என்றைக்கு நான் ஒரு தகப்பன் ஆனேனோ, எந்த குழந்தைக்காக என் உயிரை தியாகம் செய்யவும் தயங்க மாட்டேனோ...அப்படித்தானே என் தகப்பனும், தாயும் தன் உதிரம் கொட்டி என்னை வளர்த்திருப்பார்கள். நானாவது ஒரு கௌரவமான வேளையில், நல்ல சம்பளத்தில் இருக்கிறேன். என் தாயும் தகப்பனும் மழையிலும், வெயிலிலும் வியாபாரம் செய்தல்லவா என்னை இந்த நிலைக்கு கொண்டு வந்தார்கள் என்று நினைத்த நாள் முதல் என் தகப்பன் எனக்கு தெய்வமாகி போனான். அவர்களை இன்று நினைக்காத நாளில்லை.

காதலிகளே..காதலர்களே.. காதலின் வெற்றி எது..? திருமணமா...? இல்லை. காதலின் வெற்றி என்பது கௌரமான வாழ்க்கை. அதுவும் பெற்றவர்களுடன், உறவுகளுடன், சமூகத்துடன் இணைந்த ஒரு இனிமையான அனுபவம். காதலின் வெற்றி வெறும் உடற்சேர்க்கை மட்டுமல்ல. உங்கள் காதலியை பெற்றவர்களுக்கும் கௌரவத்தை, ஒரு சமூக அந்தஸ்தை கொடுப்பது தான். அவர்களின் இருபது வருட கனவு அந்த பெண் குழந்தை, அதை தட்டி பறிக்கையில் ஏற்படும் பதட்டம் ஒரு சில வேண்டாத சம்பவங்களை ஏற்படுத்திவிடும். அவர்களை புரிந்து கொள்ளுங்கள். உங்களை பக்குவமாய் புரிய வையுங்கள். எல்லாம் சுபமாகும்.

அன்புடன்
எல்லா பெண் குழந்தைகளும் நலமுடன் வாழ மனாதர பிரார்த்திக்கும் ஒரு தகப்பன்.

சச்சினுக்காக உலக கோப்பை தவறு..

உலக கோப்பையை வென்று சச்சினுக்கு அற்பணிப்போம் என கேப்டன் தோணி முதல் ஹர்பஜன் வரை எல்லோரும் மாய்ந்து மாய்ந்து பேட்டி கொடுக்கிறார்கள். இது தவறு, ஒரு நாட்டிற்காக விளையாடும் போது தனி மனிதர் முக்கியமில்லை அது நாட்டு மக்களுக்காக அர்ப்பணிக்க பட வேண்டும் என முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் வாஹ் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்.

இந்தியாவை பொறுத்தவரை மக்கள் வேறு சச்சின் வேறு அல்ல. சச்சின் கிரிகெட்டின் கடவளாகதான் வர்ணிக்கபடுகிறார். பார்க்கபடுகிறார். சச்சினுக்காக கோப்பையை வெல்வது என்பது இந்திய மக்களுக்காக வெல்வது போன்றது தான். கோப்பையை வென்று சச்சின் கையில் ஏந்துவதை பார்க்க இந்திய மக்கள் அனைவரும் விரும்புகின்றனர். அதை நினைவாக்கும் தகுதி தோனிக்கு உண்டு என்பதும் எங்கள் நம்பிக்கை.



நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதையும் மறக்காமல் பதிவு செய்யுங்கள்.

Tuesday, February 8, 2011

ராமதாசும் கங்குலியும்...!!

மீண்டும் ஒரு மக மெகா ஊழல் குறித்து செய்திகள் அடிபடுகிறது. ராசாவிற்கு இப்போது புது தெம்பு வந்திருக்கும். கல்மாடிக்கு வந்தது போல..

அரசியல் நாகரீகம் குறித்து பேச கலைஞருக்கு எந்த அருகதையும் இல்லை. முரசொலி கட்டுரைகளே அதற்க்கு சாட்சி. இப்போதெல்லாம் நிருபர்கள் மீது எரிந்து விழுவது போல் பேசுவது எந்த வகை நாகரீகம் என்று தெரியவில்லை. அம்மையாரை குறித்த விமர்சனங்கள் எல்லாம் எந்த மாதிரி நாகரீகம். இன்றைய தினசரியில் கூட அம்மையாரை "வெத்துவேட்டு" என்று செல்லமாகத்தான் அழைத்திருக்கிறார்

தலித்தியம் பேசுவது என்பது பிராமணர்களை எதிர்ப்பது மட்டும் தானா....? ரொம்ப நாளா இந்த சந்தேகம் இருக்கு..?

தாவுவதில் எத்தனை வகைகள் உண்டோ அத்தனையும் ராமதாசிற்கு அத்துபடி போல...அ தி மு காவிற்கு கெட்ட நேரம் வந்தால் பா ம க கூட்டு சேருவதை தடுக்க முடியாது. கங்குலியும் நம்ம ராமதாஸ் ரேஞ்சிற்கு இறங்கி வந்துவிட்டார். யாரவது கவனிங்கப்பா.. இருந்த இருப்பென்ன...வாழ்ந்த வாழ்க்கையென்ன

சுப்பிரமணியம் சாமி மீது நடவடிக்கை என்பதெல்லாம் சும்மா பேத்தல்..சாமியிடம் இருக்கும் ஆதாரங்கள் அப்படி..

வெளியுறவு துறை அமைச்சராவது ரொம்ப எளிது போல...கண்டனம் தெரிவிக்கவும், வருத்தம் தெரிவிக்கவும் தெரிந்தால் போதும். கிருஷ்ண வேறு என்ன செய்கிறார்.

கூகிள் செய்திகள் - பொழுது போக்கு தலைப்பின் கீழ் வரும் செய்தி - ராசாவிற்க்கு மேலும் இரண்டு நாட்கள் காவல் நீட்டிப்பு - என்னடா கொடுமை சார் இது. கூகுளுக்கு கூட தெரிந்திருகிறது தமிழர்களின் ஒரே பொழுதுபோக்கு ஊழல் விசாரணைகள் தான் என்று.


யோகா என்பது - Its tool of reducing or increasing our body weight. ஒரு இளைஞர்கள் கூட்டத்தில் ஒட்டு கேட்டது. நல்லவேளை பதஞ்சலி இன்று உயிருடன் இல்லை.
யோகா பிறந்த தேசம் இது என்று "சொல்லிகொல்லவே" வெட்கபடுகிறேன்.

அவ்வளவு தான்..மறுபடியும் சந்திப்போமா..வந்தது வந்தீங்க எதாவது சொல்லிட்டு போங்க...

Wednesday, February 2, 2011

புரட்சிக்கு புதிய பெயர் நாம்..!! இணையதள குப்பைகளை உற்பத்தி செய்பவர்கள் மட்டுமல்ல..!

இன்னும் பலரின் கவனத்தை சென்றடைய வேண்டும் என்பதால் மறுபதிவு செய்கிறேன்

ஒரு அரசின் ஊழலை எதிர்த்து சாமானிய மக்கள் கிளர்ந்தெழுந்தால் என்ன நடக்கும் என்பதற்கு ஒரு உதாரணம் தான் இப்போது எகிப்தில் நடந்து கொண்டிருக்கும் ஒரு வித்தியாசமான புரட்சி, ஆளுங்கட்சியின் அராஜகம், பொது சொத்தை கொள்ளையடித்தல், எகோபத்திய அதிகாரம், அதனால் விளையும் வன்முறைகள் என ஒரு காட்டாச்சி தான் நடந்து கொண்டிருந்தது எகிப்தில். கிட்டத்தட்ட நமக்கு இது எதுவும் புதியதல்ல. முனை மழுங்கி போன கோடாரியாய் நாமிருக்கிறோம், எகிப்து இளைஞர்கள் துணிந்து விட்டார்கள் எதிரிகளின் மீது கூர்தீட்டி கொள்ள. அவ்வளவு தான் வித்தியாசம்.
தலைவர்கள் இல்லை. உணர்ச்சி பொங்கும் வார்த்தை ஜாலங்கள் இல்லை. கட்சி இல்லை, கொடியும் இல்லை ஆனாலும் அங்கு வெடித்திருக்கும் புரட்சி நம் எல்லோருக்கும் பொதுவானது. என்ன புரியவில்லையா...நண்பர்களே ஆம் இது நமக்கான ஒரு முன்னுதாரணம்.

இலக்கியம் என்ற பெயரில் வெத்து குப்பைகளை உற்பத்தி செய்பவர்கள் என்று தான் பதிவர்களுக்கு இங்கு செல்ல பெயருண்டு. இதோ இப்போது எகிப்தில் கிளர்ந்திருக்கும் இந்த புரட்சிக்கு, எரியும் தீயில் எண்ணையாக இருப்பது எது தெரியுமா Facebook, Twitter மற்றும் இணையதள ப்ளாகுகள் தான். முகம் தெரியாத பலரின் உணர்சிகளுக்கு வடிகாலாக இருந்த இணையதளங்கள் இவர்களை ஒருங்கிணைத்து போராடவும் வைத்திருக்கிறது. வழக்கம் போல் முரட்டு அரசாங்கம் மக்களின் எண்ணங்களை புரிந்து கொள்ளாமல், மக்கள் புரட்சியை, கலவரம் என்ற பெயரில் வன்முறையாலும் கொடூர அடக்கு முறையாலும் தண்டிக்க நினைக்கிறது. அவர்கள் முதலாவதாக செய்தது இணையதள சேவை மற்றும் தொலை தொடர்பு சேவைகளை முடக்கியது தான். மக்களை இணைக்கும் இவற்றை முடக்கிவிட்டால் புரட்சி செயலிழந்து போகும் என்று நினைத்தார்கள். ஆனால் அது காலம் கடந்து விட்ட செயல் என்று அவர்களுக்கு புரியவில்லை. இணையதளத்தால் இணைத்தவர்கள் இதயத்தாலும் இணைந்தவர்கள் என்று அரசு இப்போது தான் புரிந்துகொண்டிருக்கிறது.

முபாரக் ஆட்சியை விட்டு விலக சம்மதித்து விட்டதாக தகவல்கள் வருகிறது.

இதில் நமக்கான செய்தியும் இருக்கிறது நண்பர்களே...மாறி மாறி ஆட்சி கட்டிலில் ஏறியவர்கள் செய்யும் ஊழல்களை கண்டும் காணாமல் இருப்பதால் தான் எவர் வந்தாலும் அவர்களின் கொள்ளையடிக்கும் கொள்கைகள் மட்டும் மாறவில்லை. ஆட்சியாளர்களின் இவ்வளவு அட்டுழியங்களுக்கு மத்தியிலும் நாம் வளர்வதற்கு காரணம். இந்தியாவின் இயற்கை வளம், மக்கள் வளம், இவர்களை எதிர்த்து ஒவ்வொரு இந்தியனும் போரட்ட நினைத்தாலும் பயம் நம்மை தடுக்கிறது. ஒருவன் வீதியில் நின்றால் பயம் வரும் ஒர்ரயிரம் பேர் திரண்டு வந்தால்...??? வெள்ளையர்களின் தலைகளை பரங்கி காய்களாய் சீவியவன் நாம் தான் என்பது அவனக்கு புரிந்தால் இங்கும் ஒரு புரட்சி சாத்தியம் தான்.

இந்த புரட்சிக்கு எந்த தலைவனும் தேவை இல்லை. எந்த அரசியல் கட்சியும் தேவை இல்லை. நாம் யார், நம் சக்தி என்ன என்பதை புரிந்து கொண்டால் போதும். நண்பர்களே, நம் எல்லா நண்பர்களுக்கும் இப்பதிவு சென்றடைய வேண்டும்...உங்களின் ஓட்டையும் கருத்தையும் மறக்காமல் பதிவு செய்யுங்கள்

புரட்சிக்கு புதிய பெயர் நாம்..!! இணையதள குப்பைகளை உற்பத்தி செய்பவர்கள் மட்டுமல்ல..!

ஒரு அரசின் ஊழலை எதிர்த்து சாமானிய மக்கள் கிளர்ந்தெழுந்தால் என்ன நடக்கும் என்பதற்கு ஒரு உதாரணம் தான் இப்போது எகிப்தில் நடந்து கொண்டிருக்கும் ஒரு வித்தியாசமான புரட்சி, ஆளுங்கட்சியின் அராஜகம், பொது சொத்தை கொள்ளையடித்தல், எகோபத்திய அதிகாரம், அதனால் விளையும் வன்முறைகள் என ஒரு காட்டாச்சி தான் நடந்து கொண்டிருந்தது எகிப்தில். கிட்டத்தட்ட நமக்கு இது எதுவும் புதியதல்ல. முனை மழுங்கி போன கோடாரியாய் நாமிருக்கிறோம், எகிப்து இளைஞர்கள் துணிந்து விட்டார்கள் எதிரிகளின் மீது கூர்தீட்டி கொள்ள. அவ்வளவு தான் வித்தியாசம்.

தலைவர்கள் இல்லை. உணர்ச்சி பொங்கும் வார்த்தை ஜாலங்கள் இல்லை. கட்சி இல்லை, கொடியும் இல்லை ஆனாலும் அங்கு வெடித்திருக்கும் புரட்சி நம் எல்லோருக்கும் பொதுவானது. என்ன புரியவில்லையா...நண்பர்களே ஆம் இது நமக்கான ஒரு முன்னுதாரணம்.

இலக்கியம் என்ற பெயரில் வெத்து குப்பைகளை உற்பத்தி செய்பவர்கள் என்று தான் பதிவர்களுக்கு இங்கு செல்ல பெயருண்டு. இதோ இப்போது எகிப்தில் கிளர்ந்திருக்கும் இந்த புரட்சிக்கு, எரியும் தீயில் எண்ணையாக இருப்பது எது தெரியுமா Facebook, Twitter மற்றும் இணையதள ப்ளாகுகள் தான். முகம் தெரியாத பலரின் உணர்சிகளுக்கு வடிகாலாக இருந்த இணையதளங்கள் இவர்களை ஒருங்கிணைத்து போராடவும் வைத்திருக்கிறது. வழக்கம் போல் முரட்டு அரசாங்கம் மக்களின் எண்ணங்களை புரிந்து கொள்ளாமல், மக்கள் புரட்சியை, கலவரம் என்ற பெயரில் வன்முறையாலும் கொடூர அடக்கு முறையாலும் தண்டிக்க நினைக்கிறது. அவர்கள் முதலாவதாக செய்தது இணையதள சேவை மற்றும் தொலை தொடர்பு சேவைகளை முடக்கியது தான்.

மக்களை இணைக்கும் இவற்றை முடக்கிவிட்டால் புரட்சி செயலிழந்து போகும் என்று நினைத்தார்கள். ஆனால் அது காலம் கடந்து விட்ட செயல் என்று அவர்களுக்கு புரியவில்லை. இணையதளத்தால் இணைத்தவர்கள் இதயத்தாலும் இணைந்தவர்கள் என்று அரசு இப்போது தான் புரிந்துகொண்டிருக்கிறது.
முபாரக் ஆட்சியை விட்டு விலக சம்மதித்து விட்டதாக தகவல்கள் வருகிறது.

இதில் நமக்கான செய்தியும் இருக்கிறது நண்பர்களே...மாறி மாறி ஆட்சி கட்டிலில் ஏறியவர்கள் செய்யும் ஊழல்களை கண்டும் காணாமல் இருப்பதால் தான்
எவர் வந்தாலும் அவர்களின் கொள்ளையடிக்கும் கொள்கைகள் மட்டும் மாறவில்லை. ஆட்சியாளர்களின் இவ்வளவு அட்டுழியங்களுக்கு மத்தியிலும் நாம் வளர்வதற்கு காரணம். இந்தியாவின் இயற்கை வளம், மக்கள் வளம், இவர்களை எதிர்த்து ஒவ்வொரு இந்தியனும் போரட்ட நினைத்தாலும் பயம் நம்மை தடுக்கிறது. ஒருவன் வீதியில் நின்றால் பயம் வரும் ஒர்ரயிரம் பேர் திரண்டு வந்தால்...??? வெள்ளையர்களின் தலைகளை பரங்கி காய்களாய் சீவியவன் நாம் தான் என்பது அவனக்கு புரிந்தால் இங்கும் ஒரு புரட்சி சாத்தியம் தான்.



இந்த புரட்சிக்கு எந்த தலைவனும் தேவை இல்லை. எந்த அரசியல் கட்சியும் தேவை இல்லை. நாம் யார், நம் சக்தி என்ன என்பதை புரிந்து கொண்டால் போதும். நண்பர்களே, நம் எல்லா நண்பர்களுக்கும் இப்பதிவு சென்றடைய வேண்டும்...உங்களின் ஓட்டையும் கருத்தையும் மறக்காமல் பதிவு செய்யுங்கள்

மம்தாவை பிரதமர் வேட்பாளராக....!

மிக நீண்ட நாட்களுக்கு பிறகு இன்று பதிவிட தோன்றியது. முதல் காரணம் தமிழகத்தை பிடித்திருந்த இருள் விலகுகிறது. கூடிய விரைவில் இந்தியாவை பீடித்தி...