Monday, March 1, 2010

உங்கள் வாரிசுகள் ஜாக்கிரதை...!!

சமீபத்திய ஒரு ஆஸ்திரேலிய மருத்துவர்களின் ஆராய்ச்சி குறிப்பு " உடற்பருமனான குழந்தைகள் தங்களது பெற்றோருக்கு முன்னரே இறக்க கூடும் " என்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்டிருக்கிறது. பொதுவாகவே நம் இந்திய தாய்மார்கள் தங்கள் குழந்தையை கொழு கொழு என்று வைத்திருப்பதையே பெரிதும் விரும்புகின்றனர். குழந்தையின் வயதிற்கு மீறிய, அவசியத்திற்கும் மேற்பட்ட அதிகமான சத்து நிறைந்த உணவு வகைகளை கொடுப்பதால் அவர்களின் எதிர்கால ஆரோக்கியம் முற்றிலும் கேள்விக்குறியாகிறது.

தவறான உணவு பழக்க வழக்கங்களுக்கு குழந்தைகள் அடிமையாக பல சந்தர்பங்களில் அவர்களின் பெற்றோரே காரணமாக இருக்கின்றனர். குழந்தைகளின் வாயை கட்டுவதை விட கடுமையான காரியம் பெற்றோர்களின் வாயை கட்டுவது என்ற நிலையில் Child Obesity தவிர்க்க முடியாததாகிறது.

எல்லாவற்றிலும் வேகம் வேகம் என்று ஓடிகொண்டிருக்கிறோம். வெந்ததை வேகாததை தின்றுவிட்டு கணினி முன் மணிகணக்கில் கழிகிறது வாழ்க்கை. பொறுமையாக ஆற அமர உண்பதோ, ஒரு நாளைக்கு அரைமணி நேரமாவது உடற்பயிற்சி என்பதோ சாத்தியமில்லாத வாழ்க்கைமுறையாக மாறிகொண்டிருக்கிறது.



குறைந்தபட்சம் உங்களின் வாரிசுகளையாவது கொஞ்சம் கன்ட்ரோல் செய்வது அவசர அவசியம். எப்படின்னா..

1 . சமச்சீர் உணவு அதாவது உங்கள் குழந்தையின் வயது, எடை, மற்றும் அதன் செயல்பாடுகளை (Physical Activities) பொறுத்து உணவுகளை தேர்ந்தெடுக்க உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டும்.

2 . ஆரோக்கியமான உணவு எவை என்பது குறித்து, (பாட்டி சொன்னது) அவ்வப்போது உங்கள் ஜூனியர் காதில் போட்டு வையுங்கள்.

3 . அதிக எடையுள்ள குழந்தைகள் பெரும்பாலும் தாழ்வுமனப்பன்மை கொண்டவர்களாக இருக்கிறார்கள் என்கிறது ஒரு ஆய்வு. எனவே எக்காரணம் கொண்டும் அவர்களை இளைக்க வைக்கிறேன் பேர்வழி என்று எதையும் வலுக்கட்டாயமாக திணிக்காதிர்கள்.

4 . குழந்தைகள் சாப்பாடு விஷயத்தில் அவர்களின் பிடிவாதத்திற்கு வளைந்து கொடுக்காமல், அவர்கள் ஆரோக்கியத்திற்கு ஏற்ற உணவு வகைகளை தேர்ந்தெடுங்கள்.

5 . ரொம்ப ரொம்ப முக்கியமான விஷயம், அவர்கள் பள்ளிகளுக்கு அருகாமையில் அல்லது வெளியிடங்களின் விற்கும் தரம் குறைந்த உணவுகளை சாப்பிட்டு பழகாமல் பார்த்து கொள்வது பெற்றோர்களின் தலையாய கடமை.

ஏதோ ஊதாரசங்கை ஊதிட்டேன். மற்றபடி ராசா உன் சமத்து.

9 comments:

  1. will it sales this kind of article?! nallathukku kalamille sir...

    ReplyDelete
  2. நல்ல பதிவு ஜீன்வன்சிவம், வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. நிஜம்தான்.. பல குழந்தைகளைப் பார்க்கும் போது மனசு கனக்கிறது..

    ReplyDelete
  4. அகலாது அணுகாது போலத்தான் குழந்தை சைஸ்ஸும் இருக்கணும்.! விளையாட்டுகள் குறைந்துவிட்ட இந்த காலத்தில் இது இன்னும் ஆபத்து..!

    ReplyDelete
  5. நன்றி சர்புதீன்
    நன்றி ரிஷிபன்
    நன்றி சைவகொத்துபுரோட்டா
    நன்றி சங்கர்
    இந்த மாதிரியான பதிவுகள் பரவலாக பிரபலமாவதில்லை.
    இது கொஞ்சம் வருத்தம் தான்.

    ReplyDelete
  6. தற்போதுள்ள சூழ்நிலைக்கு ஏற்ற பதிவு சார்

    ReplyDelete
  7. நன்றி வசந்த்
    மீண்டும் வாங்க

    ReplyDelete

உங்களின் வரவிற்கான முத்திரையை வைத்துவிட்டு போங்கள். உங்களின் ஒரு சில நிமிடத்தை இங்கு செலவளிததற்க்கு நன்றி. மீண்டும் நேரம் கிடைக்கும் போது வாங்க.

மம்தாவை பிரதமர் வேட்பாளராக....!

மிக நீண்ட நாட்களுக்கு பிறகு இன்று பதிவிட தோன்றியது. முதல் காரணம் தமிழகத்தை பிடித்திருந்த இருள் விலகுகிறது. கூடிய விரைவில் இந்தியாவை பீடித்தி...