Wednesday, April 6, 2011

அமைதி காக்கும் விஜய், அடங்கிப்போன சரத், ஆர்ப்பரிக்கும் விஜயகாந்த்

இன்றைய சூழ்நிலையில் மூன்று பேரும் தவிர்க்க முடியாத புள்ளிகள். சினிமா என்றாலும் சரி, அரசியல் என்றாலும் சரி. நடிகர் சங்க தலைவர், நாடார் இன மக்களின் முகவரி, திராவிட கட்சிகளுடனான தொடர்பு என சரத்திற்கு எப்போதும் செல்வாக்கு அதிகம். ஆனால் அவருக்கு கொடுக்கப்பட்ட இரண்டு தொகுதிகளுடன் திருப்தி அடைந்துவிட்டாலும் முதல்வர் கனவு அவருக்கும் உண்டு. காமராசர் ஆட்சி எனும் கோசத்துடன் ஆரம்பிக்கப்பட்ட கட்சி சாதி சங்கமாக சுருங்கிபோனதன் விளைவு தான் இரண்டு தொகுதி மட்டும் என திருப்தி பட வேண்டியதாகிவிட்டது. சினிமா அரசியல்வாதிகளில் கொஞ்சமாவது தெளிவாக பேசுவது தான் இவரது பலம். ஆனால் சபைக்கு வரவிடாமல் சாதி சங்க ஆட்கள் காலைவாரி விடுவது பலவீனம்.

தென்காசி தொகுதியில் வெற்றி வாய்ப்பு இருப்பதாகவே தெரிகிறது. சத்தமே இல்லாமல் தொகுதியை வலம் வருகிறார்கள் சரத்தும், ராதிகாவும். தென்காசி பிரசாரத்தின் போது சரத்தின் பெயரை உச்சரிக்காமல் விட்டதில் எந்த உள்குத்தும் இல்லையாம். பெயர் விடுபட்டுவிட்டது யதார்த்தமாக நடந்தது தான். பின்பு மறக்காமல் சரத்தின் பெயரையும் சொல்லி ஒட்டு போடா சொன்னது சரத்திற்கு ஆறுதலாக இருந்திருக்கும். அதிகமாக எந்த தொகுதிக்கும் பிரசாரத்திற்கு செல்லாத சரத், ஸ்ரீரங்கம் மட்டும் செல்ல போகிறார்.
தாங்கள் போட்டியிடும் தொகுதியில் யாரையும் வந்து பிரச்சாரம் செய்யுமாறு சரத் அழைக்கவில்லை. காரணம் ராதிகாவை வந்து மற்ற தொகுதிகளில் பிரச்சாரம் செய்ய கூப்பிடுவார்கள் என்பதை தவிர்க்கத்தான். என்னாதான் இன்று காட்சி மாறிவிட்டாலும் ராதிகாவிற்கு கலைஞர் மேல் பாசம் அதிகம், அவரை எதிர்த்து பிரச்சாரம் செய்ய யோசிக்கிறார்



தேர்தல் கூட்டணிக்கு முன்பே அம்மாவை துணிச்சலுடன் சந்தித்தவர் விஜய். ஏதோ நடக்கபோகிறது என்று நினைபதற்குள்ளாகவே விழுந்தது முதல் அடி. காவலன் படத்தை திரையிட விடாமல் சதி செய்தனர் ஆளுங்கட்சி புள்ளிகள். படாத பாடு பட்டுதான் படத்தை ரிலீசே செய்தார்கள். அப்படியும் சன், கலைஞர் விளம்பரம் செய்யாமல் இருட்டடிப்பு செய்ய படம் எதிர்பார்த்த அளவிற்கு போகவில்லை. பயம் காட்டினால் படிந்து விடும் என்று எதிர்பார்த்த நிலையில் மீண்டும் போயஸ் பக்கம் போனதும் உஷாரான தி மு க கோஷ்டி கொஞ்சம் அடக்கி வாசிக்க ஆரம்பித்தது.

இந்நிலையில் விஜய் அ தி மு காவை ஆதரித்து பிரச்சாரம் செய்ய போகிறார் என்று தெரிந்ததும், ஆடிப்போன ஆளுங்கட்சி தரப்பு சாம தான பேத தண்டங்களை பிரயோகித்து தடுக்க முயற்சி செய்தது. வழக்கம் போல் விஜய் பின் வாங்க ஆரம்பித்தும் சூடான சந்திர சேகர் தனியாகவே களம் இறங்கிவிட்டார். சந்திர சேகர் சூடானதற்கு சட்டபடி குற்றம் என்ற அவரின் படத்திற்கும் பஞ்சாயத்து பண்ணவேண்டி வந்ததால் தான்.

கட்சியில் சேரபோகிறார், பிரச்சாரம் செய்யபோகிறார், என்றெல்லாம் கசிந்த நிலையில் இன்று வெறும் அறிக்கை மட்டும் விடுவார் என்கிறார்கள். அம்மா தரப்பு அறிக்கை மட்டும் போதாது ஜெய டிவியில் தோன்றி அ தி மு க கூட்டணிக்கு அதரவு என்று ஓபன் ஸ்டேட்மென்ட் விடவேண்டும் என்று எதிர்பார்கிறார்கள். ஆனால் அடக்கி வாசித்தால் பெறப்போகும் பல நன்மைகளை பட்டியலிட்டிருகிறது தி மு க தரப்பு. (இழந்த பெட்டிகளை திருப்பி தருவதாகவும் பேச்சு)



ஒட்டுமொத்த ஆளுங்கட்சி கூட்டணி தலைவர்களும் கேப்டனை குறிவைத்து தாக்குவதற்கு காரணம் ஒன்றே ஓன்று தான் அது இந்த தேர்தலில் தி மு க கூட்டணி தோல்வி அடைந்தால் காரணம் தே தி மு காவின் ஒட்டு வங்கி அ தி மு காவை சேர இருப்பது தான். தே மு தி க 41 தொகுதிகளில் போட்டியிட்டு 5 அல்லது 10 தொகுதிகளில் கூட வெற்றி பெற முடியாமல் போகலாம். ஆனால் அ தி மு க போட்டியிடும் 160 தொகுதிகளிலும் தே மு தி காவின் ஓட்டுக்களால் ஆதாயம் அடைய போகிறது. கேப்டனின் இமேஜை காலி செய்ய என்ன என்ன சாக்கு கிடைத்தாலும் போட்டு தாக்கிறது. வடிவேலுவை கூட்டி வந்ததும் அதற்காக தான். ஆரம்பத்தில் கொஞ்சம் ஓவராகவே பேசிய வடிவேலு எதிர்கோஷ்டி சிங்கமுத்துவை இறக்கி விட்டதும் கொஞ்சம் சுருதி குறைந்து விட்டது. பாம்பின் கால் பாம்பறியும் என்பது தான். வடிவேலுவின் மொத்த குடுமியும் சிங்கமுத்துவிடம் இருக்கிறது.

புலி வாலை பிடித்த கதையாக போனது வடிவேலுவின் நிலைமை. பிரசாரத்தை கைவிட யோசித்த வடிவேலு அழகிரியின் ஒரே பார்வையில் அடங்கி போனதாக தெரிகிறது. வடிவேலு பேசும் இடங்களில் கூட்டம் சேர்வது உண்மை. ஆனால் அவரின் பேச்சில் தி மு காவை தூக்கி பிடிக்கும் அளவிற்கு வலுவில்லை. கொஞ்சம் உற்று நோக்கினால் மேடை தோறும் அவர் பாடும் பாடல்கள் எம் ஜி ஆர் பாடல்கள். கருணாநிதியின் உற்ற நண்பர் எம் ஜி ஆர் என்று வேறு சொல்லிகொள்கிறார். வெறும் ஒரு ரூபா அரிசி, இலவச மிகஷி, கிரைண்டர், அவசர உதவிக்கு 108 என்பதை தவிர வேறு ஒன்றையும் காணோம். ஏற்கனவே இந்த எல்லா திட்டங்களில் உள்ள ஓட்டையை பட்டி தொட்டியெல்லாம் பரவ செய்து விட்டார்கள் அம்மாவும், பாண்டியனும், சீமானும்.

விஜயகாந்தின் சினிமா இமேஜையும் காலி பண்ண முடியாமல், அரசியல் இமேஜையும் காலி பண்ண முடியாமல் கையை பிசைகிறது தி மு க அணி. என்ன வேணா சொல்லிக்கோ என்று தில்லாக தொகுதிகளை வலம் வருகிறார் கேப்டன். ஆர்ப்பரிக்கும் கூட்டத்தை கண்டு வயிறு எரிகிறது. கருப்பு எம் ஜி ஆர் என்று சொல்லிகொண்டாலும் பொறுமை, அமைதி, நிதானமாக திட்டமிட்டு காரியங்களை சாதிப்பது என்பதெல்லாம் கேப்டனிடம் இல்லை. இருக்கும் குறைகள் தெரிந்து அதை களைய வேண்டும். இல்லாமலல்லாம் சித்திக்காது முதல்வர் கனவு.


(ஒரே மேடையில் ஏறவில்லை என்ற ஏக்கம் தீர்ந்ததா..)

24 comments:

  1. அரசியல் நண்பா அரசியல்...

    ReplyDelete
  2. ///சத்தமே இல்லாமல் தொகுதியை வலம் வருகிறார்கள் சரத்தும், ராதிகாவும்.///

    அய் அய்... சித்தியும் சித்தப்பாவுமா என்ன மாதிரி தேறுமா... ?

    அன்புச் சகோதரன்...
    ம.தி.சுதா
    ஆணுறை பாவிப்போரே பெரும் ஆபத்து காத்திருக்கிறது (18+) condom

    ReplyDelete
  3. நல்ல காமெடியா எழுதுறீங்க தலைவர். நகைச்சுவை கை வருகிறது. இன்னும் முயற்சிக்கலாம். விகடன் குழுமத்துக்கும் பிடிபடாத செய்து உமக்கு கிடைப்பதில் ஆச்சர்யம்.

    விஜயகாந்த் மட்டுமில்லையென்றால் இந்த எலக்சன் உப்பு சப்பில்லாமல இருந்திருக்கும். வடிவேலின் காமெடியை விட விஜயகாந்த் காமெடி, அதையும்விட உங்கள் பதிவு.

    ReplyDelete
  4. ஆனால் அவருக்கு கொடுக்கப்பட்ட இரண்டு தொகுதிகளுடன் திருப்தி அடைந்துவிட்டாலும் முதல்வர் கனவு அவருக்கும் உண்டு.//

    ஆளாளுக்கு முதல்வர் ஆகும் எண்ணத்துடன் எல்லோரும் அலைந்தால் தமிழ் நாட்டின் எதிர்கால நிலமைக்கு என்ன ஆகும் சகோ?

    ReplyDelete
  5. தாங்கள் போட்டியிடும் தொகுதியில் யாரையும் வந்து பிரச்சாரம் செய்யுமாறு சரத் அழைக்கவில்லை. காரணம் ராதிகாவை வந்து மற்ற தொகுதிகளில் பிரச்சாரம் செய்ய கூப்பிடுவார்கள் என்பதை தவிர்க்கத்தான்.//

    ஆஹா... காரணமில்லாமல் தோரணம் ஆடாது என்பதன் அர்த்தம் இதுவோ..

    நல்லாத் தான் யோசிக்கிறாங்க நம்ம அரசியல்வாதிங்க.

    ReplyDelete
  6. புலி வாலை பிடித்த கதையாக போனது வடிவேலுவின் நிலைமை. பிரசாரத்தை கைவிட யோசித்த வடிவேலு அழகிரியின் ஒரே பார்வையில் அடங்கி போனதாக தெரிகிறது.//

    வடிவேலு கூட வைன் கொடுத்தால் ஆடும் பொம்மை போல ஆகி விட்டாரே!

    ReplyDelete
  7. சகோதரம், அதிமுகவின் சரத்குமாரின் அரசியல் பிரச்சார தந்திரங்கள், திமுகவினர் வடிவேலுவை வைத்து நடாத்தும் திருவிளையாடல்கள், கப்டனின் திட்டமிடாத அரசியல் நடவடிக்கைகள் என்பவற்றை அலசியிருக்கிறீர்கள்...

    பதிவு, ஒரு பயனுள்ள பதிவு- காரணம், தமிழ அரசியலின் உடனித் தகவல் அலசல்களை உங்கள் பதிவினூடாகத் தரிசித்த ஒரு திருப்தி.

    ReplyDelete
  8. நன்றி வேடந்தாங்கல் கருண்
    நன்றி சகோதர மதி. சுதா

    ReplyDelete
  9. நன்றி வி ஜே ஆர்,
    உங்களது புகழுரையா இகழுறையா என்று தெரியவில்லை
    வருகைக்கு நன்றி

    ReplyDelete
  10. இந்த சினிமாக் காரங்களே சுத்த மோசம் எஜமான்.. குத்துங்க எஜமான் குத்துங்க....

    ReplyDelete
  11. நன்றி நிரூபன்,
    முதல்வர் கனவு என்பது அரசியல்வாதிகளின் தீராத நோயாகிவிட்டது.ராதிகா பிரசாரத்திற்கு வரவேண்டும் என்ற வேண்டுகோளுடன் தான் ச ம க இணைத்து கொள்ளபட்டது. கேட்ட 5 தொகுதிகளுக்கு பதில் 2 மட்டுமே ஒதுக்கப்பட்டதால் ராதிகா பிரச்சாரத்திற்கு வரவில்லை. வடிவேலு தானே ஆப்பு வைத்துகொண்டிருகிறார். விரைவில் விளைவு தெரியும்

    ReplyDelete
  12. நன்றி இக்பால் செல்வன்

    ReplyDelete
  13. நன்றி oicravi ,
    முதல் முறையாக வருகிறீர்கள் என நினைக்கிறன். உங்கள் பதிவை நிச்சயம் படிக்கிறேன்

    ReplyDelete
  14. //ஒரே மேடையில் ஏறவில்லை என்ற ஏக்கம் தீர்ந்ததா///

    என்னது இந்தியாக்கு சுதந்திரம் கிடைச்சாச்சா ???

    ஓவர் கேப்டன் (ஜானி வாகர் - உபயம் சுப்பிரமணி சாமி ) ஜால்ராவா இருக்கே

    ReplyDelete
  15. நன்றி ராஜேஷ்,
    இதுக்கே அதிர்ச்சியா..? இன்னும் எவ்வளவோ இருக்கே

    ReplyDelete
  16. நாடு நல்ல தலைவரை எதிர்பாக்கிறது அடுத்த முதலவரை அல்ல

    ReplyDelete
  17. நேசன் நாடு நல்ல தலைவரை மட்டுமல்ல நல்ல முதல்வரையும் எதிர்நோக்கி உள்ளது.
    நல்ல தலைவர் கையாலாகதவராக இருந்துவிட்டால் எந்த பிரயோசனமும் இல்லாமல் போய்விடும்
    வாய்ப்பும் இருக்கிறது. ரஜினி அரசியலை கண்டு காத தூரம் ஓடுவது இதனால் தான்.

    ReplyDelete
  18. //ரஜினி அரசியலை கண்டு காத தூரம் ஓடுவது இதனால் தான்.//

    athu sari, neengalum ithai nambureengalaa?

    ReplyDelete
  19. அது தான் உண்மை என்பது என் எண்ணம் சர்புதீன்..
    வருகைக்கு நன்றி

    ReplyDelete
  20. Thalaiva..bayangara comedy a serious a elutha varuthu ungaluku..Namathu MGR ku muyarchi seinga..

    ReplyDelete
  21. இன்றைய அரசியல் நிலவரப்படி இவருக்குத் தான் வாக்களிக்க வேண்டும் என்று நடுநிலையாளர்களோ அல்லது சமூக ஆர்வலர்களோ எவரையும் சுட்டிக்காட்ட முடியாத சூழலில் தான் இருக்கிறனர். எவர் வரக்கூடாது என்பதற்காக இன்னாருக்கு வாக்களியுங்கள் எனக் கூறலாமே தவிர அப்படி சுட்டிக்காட்டபடுவர், அப்பழுக்கற்றவர் என்றோ தகுதியானவர் என்றோ எவரையும் கனவிலும் கூட மறந்து நினைத்துவிட முடியாது. பொது வாழ்வில் தூய்மை என்பது இருக்கட்டும், பொதுமக்களின் முன்பு தனி மனித ஒழுக்கம் கூட இல்லாமல், ஹாஃப் அடித்தால் தான் உனக்கு ஆப்பு வைக்கமுடியும் என்று கீழ்தரமான மலிவாக நடப்பவரை ஒரு இயக்கத்தின் தலைவராகவோ அல்லது மாற்றுச்சக்தியாகவோ நினைக்க துளியளவும் சாத்தியமில்லை. நெருக்கடியிலும் ஒத்துழைத்த தோழமையான வை.கோ.வை கழற்றியலிருந்தே ஜெயலலிதாவின் நம்பகத்தன்மையும், நம்பிக்கைத் துரோகமும் கண்முன்னே விரிகிறது. இவர்களாவது தமிழகத்தை சீரமைப்பாவது....

    ReplyDelete
  22. நன்றி கிரிஷ்,

    ஒரு எழுத்தனுக்கு எதோ ஒரு வகையில் தனது எழுத்து அங்கீகாரம் பெரும் போது தான் ஒரு படி மேலேறி எழுத்தன் என்பதிலிருந்து எழுத்தாளன் ஆகிறான் என்பது எனது எண்ணம். எனது எழுத்து எதோ ஒருவகையில் படிப்பவர்களை ஆக்ரமித்ததால் அது பெரிய விஷயம். நான் வளர்கிறேன்.

    ReplyDelete
  23. நெல்லி மூர்த்தி உங்கள் வருகைக்கு நன்றி
    எப்போதும் எதிர்மறையான விமர்சம் வைப்பது என்றொண்டு அல்லது எல்லாவற்றிலும் நல்லதை காண முயற்சிப்பது என்றொண்டு. இன்றைய அரசியல் வாதிகளிடம் எத்தகைய நல்ல விஷயத்தையும் எதிர்பார்க்க முடியாது தான். ஓன்று குறைந்தபட்சம் நல்லவர்காலக தன்னை காட்டி கொள்பவர்களை ஆதரித்தாகவேண்டிய கட்டாயத்தில் நாமிருக்கிறோம். அல்லது நாமே முன்னுதாரனமாக இருக்க வேண்டும். மற்றபடி வேறு எதையும் பேசி இங்கு பிரயோசனமில்லை.

    ReplyDelete
  24. hii.. Nice Post

    Thanks for sharing

    Celeb Saree

    For latest stills videos visit ..

    ReplyDelete

உங்களின் வரவிற்கான முத்திரையை வைத்துவிட்டு போங்கள். உங்களின் ஒரு சில நிமிடத்தை இங்கு செலவளிததற்க்கு நன்றி. மீண்டும் நேரம் கிடைக்கும் போது வாங்க.

மம்தாவை பிரதமர் வேட்பாளராக....!

மிக நீண்ட நாட்களுக்கு பிறகு இன்று பதிவிட தோன்றியது. முதல் காரணம் தமிழகத்தை பிடித்திருந்த இருள் விலகுகிறது. கூடிய விரைவில் இந்தியாவை பீடித்தி...