Sunday, January 30, 2011

என் வேலை முடிஞ்சது..உங்கள் கருத்தையும் சொல்லுங்க.

வெளியுறவு செயலர் நிருபமா ராவ் இலங்கை சென்றது வெறும் கண் துடைப்பு - நிதின் கட்காரி
தமிழக மீனவர்கள் மீது என்ன சார் உங்களுக்கு புது கரிசனம்...ஓ..!! தேர்தல் ஜுரமா..சும்மா பினாததீங்க சார்..!!

இலங்கை தமிழர்களை கொன்றவர்களை வரலாறு மன்னிக்காது - த. பாண்டியன்
இலங்கை தமிழர்களை கொன்றது யார் என்கிறீர்கள். ராஜா பக்ட்ஷேவா..அவர் வெறும் பிணங்களின் மீது தான் வன்முறை வெறியாட்டம் போட்டார். அவர்களை நட்டாற்றில் தவிக்க விட்டு கொன்றது தமிழகத்தை சேர்ந்த அரசியல் தலைவர்களும், முத்து குமரனின் தீக்குளிப்புக்கு பின்னரும் கூட, சொரணை கெட்டு எவன் செத்த நமக்கென்ன என்றிருந்த நாம் தான்...நம்மை தான் பெரும் பாவம் சூளும்

கருப்பு பணத்தை பற்றி தகவல் தந்தால் பொது மன்னிப்பு - அரசு

பொது மன்னிப்பு என்று அரசு தெரிவிக்கவில்லை, கருப்பு பணத்தை மீட்க ஐந்து அம்சம் திட்டம் - பிரணாப்

இந்த அரசால் எந்த முடிவை தான் திடமாகவும் தீர்க்கமாகவும் எடுக்க முடிகிறது. ஊழல் பெருச்சாளிகளின் ஓட்டு மொத்த கூடாரமாக காங்கிரஸ் இருக்கிறது. ஆதர்ஷ், காமன்வெல்த், ஸ்பெக்ட்ரூம் ஏதாவது ஒன்றிலாவது சம்பத்தபட்டவர்கள் மேல் நடவடிக்கை எடுக்கபடுகிறதா இல்லை அவர்களை காப்பதற்கான எல்லா நடவடிக்கைகளும் முடிக்கிவிட பட்டிருக்கிறதா என்று தெரியவில்லை. இந்த லட்சணத்தில் கருப்பு பணத்தை மீட்க ஐந்து அம்ச திட்டமாம்...

இளங்கோவன் அந்தர் பல்டி, ஆதரவாளர்கள் அதிருப்தி
தனி மரம் தோப்பாக்காது சார். தனியா கத்தி வீசினீங்க ஒண்ணும் வேலைக்கு ஆவாலே போல.. குறித்து வைத்து கொள்ளுங்கள் இது காங்கிரஸின் தோல்விக்கு ஆரம்பம். இந்த கூட்டணி சந்தர்ப்பவாத ஊழல் கூட்டணி என்று ஒவ்வொரு தமிழனும் தெரிந்தே இருக்கிறான்.

அரசியலின் ஒரு மாற்றம் கொண்டு வருவதே லட்சியம் - ராகுல்
அது நிச்சயம் ஒரு அரசியல் வாதியால் முடியாது. உங்களின் சாயம் எத்தனை நாளைக்கு என்று பார்ப்போம்.

பா ம க எந்த பக்கம் - செய்தி

பேரம் எங்கு படிக்கிறதோ அந்த பக்கம். ஆனால் ஒன்று உறுதி முன்பெல்லாம் பா ம க இடம் பெரும் கட்சி வெற்றி பெரும் என்ற ஒரு நிலை இருந்தது. இனி பா ம க சேர்ந்ததாலேய அந்த கட்சிகள் தோற்க்கும் பாருங்கள். என்ன ஒரு கொடுமை சார். இந்த மாதிரி வெறும் சுயநலத்திற்க்காகவே இருக்க கூடிய ஒரு கட்சியை எங்குமே பார்க்க முடியாது. தமிழனின் தலை விதி

என் வேலை முடிஞ்சது..உங்கள் கருத்தையும் சொல்லுங்க. எல்லாரும் பேசி ஒரு முடிவுக்கு வருவோம்

Friday, January 28, 2011

ப்ளாக்கில் தான் சாருவை பிழிகிறார்கள் என்றால் வெகுஜன பத்திரிக்கையிலுமா...

எல்லா தமிழ் ப்ளாக்கரும் இனைய குப்பையை உற்பத்தி செய்பவர்கள் என்று சமணன் கடந்த வார விகடனில் ஒரு சிறுகதை எழுதி இருக்கிறார். அது குறித்து யாரவது எழுதுவார்கள் என்று எதிர்பார்த்தேன். யாரும் கவனிக்க வில்லையா...சாதாரண விஷயத்துக்கெல்லாம் முஷ்டி மடக்குபவர்கள் இங்கு அதிகம் என்று கேள்விப்பட்டேன். எருமை மாடுமேல தானே மழை என்று ஒதுங்கி கொண்டார்களா..? தெரியவில்லை. (ஊதார சங்கை ஊதிட்டேன்)

அதுமட்டுமில்ல, புத்தக விழாவில் நடக்கும் எல்லா கேலி கூத்துகளையும் சேர்த்தே தான் கிழி கிழியென்று கிழித்திருந்தார். கண்டிப்பாக இவரும் ஒரு காலத்தில் ப்ளாக்கராக இருந்திருப்பார். ஒட்டு பிடிக்கும் கலாச்சாரத்தில் இவருக்கு உடன்பாடு இல்லாமல் வெளியேறி இருக்கலாம். ப்ளாக்கர் "ரசிகனிடம்" அதற்கான தந்திரங்கள் ஏராளம். கேட்டால் சொல்லிதந்திருப்பாரே... அதுக்குள்ளே same side கோல் போட்டுடீங்களே சமணன் சார்..!

ப்ளாக்கில் தான் சாருவை பிழிகிறார்கள் என்றால் வெகுஜன பத்திரிக்கையிலுமா... ஒருவேளை இது "எதிர்கட்சிகளின் சதியோ" என்று யோசித்தேன்..ஆனால் அடுத்த ரிவிட்டு அங்கேயும் விழுந்திருக்கிறது. சமணன் நல்லவரா..கெட்டவரா...நல்லி குப்புசமியையும் விட்டுவைக்கவில்லை. அவ்வளவு ஏன் புத்தக காட்சி கேண்டீன் வடையை கூட விட்டு வைக்கலையே...முதல்ல தயவு செய்து அந்த கதையே படிங்க சாமி..

Sunday, January 23, 2011

கேப்டனிடம் ஒரு வேண்டுகோள்...!!

இன்றைய நிலையில் தே மு தி க தவிர்க்க முடியாத அரசியல் சக்தியாக வளர்ந்திருப்பதை அரசியல் நோக்கர்கள் யாரும் மறுக்க முடியாது. கட்சி ஆரம்பித்த நாள் முதல் இந்த நாள் வரையில் எத்தனை விமர்சனங்கள், தோல்விகள் ஆனால் இன்று, அதுவும் சேலம் மாநாட்டிருக்கு பிறகு மூத்த கட்சிகளுக்கே கிலி பிடித்து விட்டது. கருப்பன் என்றும், சினிமாக்காரன் என்றும், குடிகாரன் என்றும் வாய்கிழிய பேசியவர்கள் எல்லாம், நான் அப்பவே நினைச்சேன் யா..அவரு யாரு..அடுத்த முதல்வருய்யா..என்று தட்டை திருப்பி போட்டு கொண்டிருக்கிறார்கள்..

எது எப்படியோ..இந்த கொடுங்கோல் குடும்ப ஆட்சியை அகற்ற வேண்டிய பொறுப்பு இன்று கேப்டன் கையில். அ தி மு க உடன் கூட்டணி என்ற முடிவு தான் இன்றைய நிலையில் ஒரு சரியான தீர்வாக இருக்கும். ஆனால் கடந்த கால கூட்டணி தலைவர்களின் நிலை கேப்டனுக்கும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் யோசித்து தான் முடிவெடுக்க வேண்டும்..

தொண்டர்கள் சோர்ந்து போய்விடாதபடிக்கும், கட்சியின் வளர்ச்சிக்கும், நிர்வாகிகளின் திறமைகளை அறிந்து கொள்ளும் வகையிலும் கேப்டனின் முடிவு இருக்க வேண்டும். 2016 - உங்களுக்கான ஆண்டு தான். பொறுமையாக இருங்கள். அதே சமயம் உங்களை வளர்த்து கொள்ளும் வழிவகைகளையும் அறிந்து கொள்ளுங்கள். உங்கள் கட்சிக்கு திறமையான பேச்சாளர்களை உருவாக்குங்கள். நீங்களும் உங்கள் மனைவி மட்டுமே கட்சியல்ல என்பதை மக்களுக்கும் தெரிய வேண்டும்.

தேனை எடுப்பவன் புறங்கையை நக்காமல் இருக்க மாட்டன் என்றொரு பழமொழி உண்டு. ஊழல் இல்லாத ஆட்சி என்பதெல்லாம் இனி பாழாய்ப்போன பழங்கனவு தான். முடிந்தவரை நல்லது செய்யுங்கள். இயற்கையை சுரண்டி சுரண்டி அவளை நிர்வானபடுத்தியது போதும், எதிகால மக்கள் தொகைக்கு உணவு தயாரிப்பு என்பது மிகபெரும் சவால், என் வேண்டுகோளெல்லாம் விரிவான, திடமான, ஆரோகியமான ஒரு விவசாயகொள்கை வேண்டும் என்பது தான். விவசாயத்தை காக்க வேண்டிய பெரும் பொறுப்பு உங்களுக்கு இருக்கிறது. எங்களுக்கு இலவசங்களே வேண்டாம், சொந்தமாக வாங்கிக்கொள்ள வசதியை ஏற்படுத்தி கொடுங்கள்.

வாழ்வதற்கு ஆரோக்கியமான சூழல் வேண்டும். அமைதி பூங்காவாக இருந்த தமிழ் நாட்டில் தான் தினம் தினம் எத்தனை கொலைகள், கொள்ளைகள், கற்பழிப்பு, சிறுவர்களை கூட விட்டு வைக்க மாட்டேன் என்கிறார்கள். சட்ட ஒழுங்கை மீட்டெடுத்தாலே போதுமய்யா..

தமிழக மீனவர்களை கொல்லும் சிக்னல் எது..?

தமிழக மீனவர்கள் ஜாக்கிரதையென்று நேற்று தான் "கோழி கிளறிய குப்பை" என்னும் தலைப்பில் ஒரு பதிவிட்டிருந்தேன். அதற்குள் நேற்று மாலையே மீண்டும் ஒரு தமிழக ஊனமுற்ற மீனவர் கொடூரமான முறையில் சிங்கள படையினாரால் கொல்லப்பட்ட செய்தியை பார்க்க நேர்ந்தது. இதற்கும் வழக்கம் போல் எல்லா தலைவர்களும் ஒருபாட்டம் அழுது தீர்க்க போகிறார்கள். கண்டனம், நடவடிக்கை உறுதி என்பதோடு களைந்து போக போகிறார்கள். அந்த நாட்டில் செத்தவனை தான் மீட்க வழியை காண்டோமில்லை. சொந்த நாட்டு சகோதரனை மீட்கவுமா ஜோதிடம் பார்க்க போகிறோம். என்ன கொடுமை அய்யா இது...!!

இவர்கள் எப்போதெல்லாம் தமிழக மீனவர்களை கொல்வதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. இலங்கை அரசுக்கு கடுமையான கண்டனம் என்கிறார்களோ..அப்போதெல்லாம் உடனே தமிழன் தாக்கபடுவது ஒரு வரலாறாகவே போய்விட்டது. ஒருவேளை இவர்கள் இங்கு இவ்வாறு செய்தி வெளிவிடும் போதெல்லாம் தமிழன் தாக்கப்பட வேண்டும் என்பது சிங்களனுக்கு இவர்கள் கொடுத்திருக்கும் சிக்னலோ என எண்ண தோன்றுகிறது. எத்தனை முறை...எத்தனை முறை.... இன்னமுமா கெஞ்சி கொண்டே இருக்க போகிறோம்..

அய்யா நல்லவர்களே விரைந்து நடவடிக்கை எடுங்களையா...!!!

தமிழினம் மீட்க கட்சி ஆரம்பித்தவர்களே...தமிழனை கொள்ளையடித்து கட்சி வளர்த்து வயிற்றை வளர்தோரே இன்னமும் தயக்கமா...? எல்லோரும் ஒன்றிணைந்து படையெடுத்து செல்ல வேண்டாம். நடவடிக்கை எடுக்கும் வரை, சிங்களனை ஒடுக்கும் வரை காலவரையற்ற உண்ணாவிரதம் என்று உட்காருங்களைய்யா...எல்லா தமிழனும் உங்கள் பின்னல் நிற்பான். ஐயோ பாவம்...!! ஒரு மணி நேர உண்ணாவிரதம் தான் உங்களுக்கு வசதியோ..



நம் தயவில் தானே மத்தியில் ஆட்சி நடக்கிறது. சிங்களனை கண்டிக்கும் வரை ஏன் நீங்கள் மீண்டுமொரு ஒத்துழையாமை இயக்கத்தை ஆரம்பிக்க கூடாது. தமிழன் வாழ்வை மீட்டெடுக்கும் வரை நாங்கள மத்தியரசிற்கு எந்த வகையிலும் ஒத்துழையோம் என்ற இயக்கம் ஆரம்பித்தால் என்ன..? அரசியல் வல்லுனர்கள் தான் இது சரியா என்று சொல்லவேண்டும்.

யாரவது தாக்கல் செய்தல் தான், தமிழன் தினம் தினம் சாவதை பொது நல வழக்காக எடுக்க முடியுமா..? உயர் நீதிமன்றமோ, உச்சநீதி மன்றமோ தானாக முன் வந்து வழக்கு பதிவு செய்து அரசை கேள்வி கேட்க கூடாதா..? மக்களின் உயிருக்கும், உடைமைக்கும் நீதிமன்றங்கள் பொறுப்பில்லையா..

தனி மரம் தோப்பாகாது..தமிழர்களே ஒன்றிணைந்து குரல் கொடுங்கள் நல்ல வழி பிறக்கும். எல்லோருக்கும் இதை கொண்டு செல்லுங்கள், இப்பதிவிற்கு ஓட்டளிப்பதன் மூலம்.

Saturday, January 22, 2011

கோழி கிளறிய குப்பை - அரசியல்

கலைஞர் பிரணாப் முகர்ஜி சந்திப்பு..
கலைஞர் தமிழக மீனவர்கள் மீதான தொடர் தாக்குதலுக்கு வழக்கம் போல் கவலை தெரிவித்திருக்கிறார். இம்முறையும் மீனவர்கள் மீதான தாக்குதல் தடுத்து நிறுத்தப்படும் என்று அதே வழக்கமான உறுதியை பிரணாப் முகர்ஜி தந்திருக்கிறார். தமிழக மீனவர்களே...ஜாக்கிரதையாக இருங்கள். இவர்கள் ஒவ்வொருமுறை உறுதியான நடவடிக்கை என்ற சில தினங்களுக்குள்ளாகவே தமிழர்கள் தாக்கபடுவது கடந்தகால வரலாறு.

பா ம க - தி மு க கூட்டணி உறுதியாகி விடும் போல் தெரிகிறது..ஏற்கனேவே ஸ்பெக்ட்ரம் ஊழல், விலைவாசி உயர்வு, சினிமா துறை கபளீகரம் போன்றவற்றால் கிட்டத்தட்ட தோல்வி உறுதியாகிவிட்ட நிலையில் பா ம க இணைப்பு எந்த வகையிலும் இவர்களுக்கு உதவி செய்யா போவதில்லை. இனியுமா ரமாதாசின் சந்தர்ப்ப அரசியலை மக்கள் புரிந்து கொள்ளாமல் இருக்க போகிறார்கள்..

காஸ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியா என்பதில் சந்தேகம் வருகிறது. ஒரு சுதந்திர நாட்டின் ஒரு பகுதியில், அந்த நாட்டின் தேசிய கொடியை ஏற்றுவதற்கு அரசிற்கும் தைரியம் இல்லை, ஏற்ற நினைக்கும் எதிர் கட்சிக்கும் அனுமதி இல்லை இல்லை என்றால், இது என்ன மாதிரி ஜனநாயகம் என்று புரியவில்லை. அருணாச்சல் பிரதேசம் எனது என்கிறான் சீனன். இலங்கையும் விரைவில் சீனாவின் பாதுகாப்பில் இந்தியாவிற்கு தனது எதிர்ப்பை காட்டுமோ என்ற அச்சம் நிலவுகிறது...இதனால் தான் இந்தியாவால் ஒரு உறுதியான முடிவை எடுக்க முடியவில்லை. ஒட்டு மொத்த உலக நாடுகளின் குறியில் இந்தியாவின் வியாபாரா சந்தை வேறு கண்ணை உறுதி கொண்டிருக்கிறது.. மத்தியில் ஒரு நிலையான தைரியமான முடிவுகளை எடுக்க கூடிய அரசு என்று அமையுமோ....?

கோழி கிளறிய குப்பையாகத்தான் இன்றைய அரசியலை பார்க்க முடிகிறது..

Friday, January 21, 2011

பகவான் ரமணரா இப்படி..அட கடவுளே...!!

இவர்கள் சாமியார்கள் அல்ல என்ற தலைப்பில் 2009 டிசம்பரில் ஒரு பதிவிட்டிருந்தேன். பதிவுலக நண்பர் திரு. ஜெயதேவ் அவர்கள் கடந்த வாரம் ஒரு பின்னூட்டம் போட்டிருந்தார். அதில் ரமணரை குறித்த கடுமையான வாசங்கள் இடம் பெறவே, ஆதாரம் இல்லாமல் அவ்வளவு பெரிய மகானை இழிவு படுத்துவது தவறு என்று எனது பின்னூட்டத்தில் மறுத்திருந்தேன். அதன் பின்னர் தமிழ் ஒவியாவில் வெளியான ஒரு பதிவின் லிங்கை எனக்கு கொடுத்து படித்து பார்க்க சொன்னார். அந்த லிங்க் இது தான் - http://thamizhoviya.blogspot.com/2009/08/blog-post_6427.html

அதில் இடம் பெற்றிருந்த ரமணரை பற்றிய செய்தியை அறிந்ததும் மிகுந்த அதிர்ச்சியும் துயரமும் அடைந்தேன். you too ...? என்று காத்த வேண்டும் போல் இருந்தது. இந்தியாவின் ஆன்மீக அடையாளங்களுள் அவரும் அவரது ஆசிரமும் தவிர்க்க முடியாதது. அவரை பற்றி தெரிந்த நிமிடம் முதல் நேற்று வரை அவரை மனதுள் இறைவனாகவே வைத்து போற்றி வந்தவன் நான். விமர்சனகளுக்கு அப்பாற்பட்டவர் என்றே இதுவரை எண்ணியிருந்தேன்.

எனக்கு தெரிந்த வரையில் மஹான்கள், சித்தர்கள் இருக்கும் வரை அவர்கள் சார்ந்த ஆசிரமங்கள் எல்லாம் ஒழுங்காகவே நடக்கும். அவர்கள் மறைந்த பின் தான் பொதுவாக சொத்து உரிமை பிரச்னையும், யார் நிர்வகிப்பது போன்ற பிரச்சனைகளும் வரும். ஆனால் ரமணர் உயிரோடு இருக்கும் போதே இங்கு சொத்து பிரச்னையும், அதற்க்கு அவரால் முன் வைக்கப்பட்ட வாதத்தையும் பார்க்கும் போது அருவருப்பாக இருக்கிறது. இவர் ஒரு சாதாரண தனி மனிதர் என்பதற்காக பொது மக்களால் கொடுக்கப்பட்டதல்ல அவரது சொத்தும், பணமும். இறைவனின் அவதாரமாகவே எண்ணி அவருக்கு பின்னும் அவரின் கருத்துகள் மக்களை சென்றடைய வேண்டும் என்ற நல்ல எண்ணத்தினால் தான் மக்களிடம் இருந்து பெற்ற சொத்துகளாகவே அது இருக்கும். ரமணரின் மரண தருவாயில் அவரின் விருப்பமின்றி சில விஷயங்கள் நடந்ததாக படித்த ஞாபகம். அவரது அறுவைசிகிச்சை உட்பட. ஒருவேளை அவர் சொத்துகள் தனது உறவினர்களின் பெயரில் எழுதி வைக்க நிர்பந்திக்க பட்டிருக்கலாமோ... உயில் எழுதிய பின் மறுக்க வழியில்லாமல் அந்த மாதிரி வார்த்தைகளை சொல்லியிருக்கலமோ..இதற்க்கு யாரால் விளக்கம் சொல்ல முடியும் தற்போது

ஏனோ தெரியவில்லை அவரின் முகத்தை பார்த்தால் - அவரின் இறைதன்மை குறித்து கேள்வி எழுப்ப தோன்றவில்லை. அந்தளவிற்கு நான் பெரியவனாகவும் நினைக்கவில்லை. உண்மை தெரிந்த பெரியோர்கள் இது குறித்து விளக்கம் தந்தால் நன்றாக இருக்கும். பிராமண எதிர்ப்பு என்பது வேறு..ஆன்மீக பெரியோர்களை இழிவுபடுத்துவது என்பது வேறு என்னை போன்ற எத்தனையோ ஆன்மீக தாகம் கொண்ட இளைஞர்களுக்கு உதவியாக இருக்கும்.நல்லவர்கள் எங்கிருந்தாலும் நல்லவர்கள் தான். கெட்டவர்கள் எங்கிருந்தாலும் நல்லவிதமாக சிந்திக்க முடியாது.

Thursday, January 20, 2011

கலைஞர், சீமான், சோ - விற்கு ஒரு கேள்வி..

கலைஞர் அய்யாவுக்கு ஒரு கேள்வி..

நாளுக்கு நாள் வன்முறை தலை விரித்தாடுகிறது. காவல் துறையை தன் கட்டுபாட்டில் வைத்திருக்கும் கலைஞருக்கு கூட்டணி கவலையும் 2G ஸ்பெக்ட்ரம் கவலையுமே பெரும்பாடாக இருக்கிறது. பொதுவாகவே தி. மு. க ஆட்சியில் ரவுடிகளின் அட்டகாஷம் தாங்க முடியாத எல்லைக்கு போகும். அதுவும் அட்சி முடிவில் சொல்ல தேவையில்லை. ஒரு வேலை அடுத்த ஆட்சி வந்தால் எதுவும் செய்ய முடியாது என்றோ என்னவோ ரவுடிகளின் பல பழிவாங்கும் அவலங்கள் அரங்கேறுகின்றன..

நேற்றைய தினமலர் செய்தியில் சென்னையில் மட்டும் கடந்த 17 தினங்களில் 13 கொலைகள் நடந்திருகிறது. இன்றைய செய்தியில் காஞ்சிபுரத்தில் 5 கொலைகள் நடந்திருப்பதாக செய்தி வந்திருக்கிறது...தமிழ் நாடு முழுவதும் கணக்கெடுத்தால் எவ்வளவோ.. அதுமட்டுமில்லாமல் எத்தனையோ கொள்ளை சம்பவங்கள் வேறு. கலைஞர் அய்யா குடியிருக்க வீடு கொடுக்கறேன் என்கிறீர்கள் சரி..குடியிருக்க மக்கள் உயிரோடும் உடைமயோடும் இருக்க வேண்டாமா... அதற்கான நடவடிக்கையும் உங்கள் வீடு வழங்கும் திட்டம் போல் 2010-2016-ல் தானா...

சீமானுக்கு ஒரு கேள்வி..

எங்கோ தொலை தூரத்தில் ஒரு வெளிச்ச புள்ளி தெரிவதை தமிழன் கண்கள் உணர்கின்றன... சீமான் தலைமையிலாவது தமிழினம் தலை நிமிர வேண்டும் என்பதே சராசரி (என் போன்ற) தமிழரின் பெருங்கனவு. மீனவனை அடித்தால் சிங்கள மாணவனை அடிப்பேன் என்றதற்காக சிறை சென்று மீண்ட தாங்கள், இப்போது ஒரு தமிழக மீனவனை சுட்டு கொன்றிருக்கிறார்கள், போதாகுறைக்கு நேற்றும் கூட வேதாரண்யம் மீனவர்கள் அடித்து, வலையை கிழித்து துரத்தியதை செய்தியில் பார்த்தேன். ஒரு எதிர்ப்பு குரல் கூட தங்களிடம் இருந்து வரவில்லையே எங்கே அய்யா போனீர்...? நீரும் சாயம் வெளுத்த நரியாக போய்விடாதீர்..

திரு. சோ அவர்களுக்கு ஒரு கேள்வி..

துக்ளக் 41 ஆண்டு விழாவில் ஆளுங்கட்சி அவலங்களை கிழி கிழியென்று வெளுத்து வாங்கினார்கள் ஆசிரியர் திரு. சோவும், குருமூர்த்தி அவர்களும். வாசர்களும் தங்கள் பங்கிற்கு கேள்விகனைகளை தொடுத்தார்கள். ஒரு தெளிவான திடமான தமிழர் கூட்டத்தை அங்கு பார்க்க முடிந்தது..(கண்டிப்பாக அங்கு கூடியிருந்தவர் அனைவரும் பிரமினர் மட்டுமல்ல..) அவர்கள் எல்லோரும் தவறாமல் சரியான நபர்களுக்கு ஒட்டு போட்டால் சரிதான். தலைமை தேர்தல்
ஆணையருக்கு இருக்கும் அதிகாரத்திற்கு எவ்வளோ பெரிய மாற்றங்களை தேர்தலில் கொண்டு வரமுடியும் என்று தோன்றுகிறது..குறைந்தபட்சம் கிரிமினல் வழக்குகளில் தொடர்புள்ள எவரையும் அனுமதி மறுப்பது, குறைந்தபட்ச கல்வி தகுதி போன்ற விஷயங்களிலாவது. என் கேள்வி - இந்நாட்டின் ஓட்டுரிமை பெற்ற குடிமகன் என்ற வகையில் வேட்பாளர்களின் இந்த குறைந்த பட்ச தகுதியோடுதான் தேர்ந்தெடுக்க வேண்டுமென்று பொதுநல வழக்கு தாக்கல் செய்ய முடியுமா...அரசு தங்களின் பணிக்காக பணியாளர்களுக்கு குறைந்தபட்ச தகுதியை நிர்ணயிக்கும் பொழுது அரசை நியமிக்கும் நாங்கள் ஏன் அவர்களுக்கு குறைந்தபட்ச தகுதியை நிர்ணயிக்க கூடாது...?

Tuesday, January 18, 2011

கலைஞரையும் மிஞ்சிய சாதனை...!!!

கலைஞர் சாதனையாக சொல்லப்படும் ஒரு ருபாய் அரிசி திட்டத்தையும் மிஞ்சிய ஒரு சாதனையை அண்மையில் ஒரு நண்பர் மின்னஞ்சல் செய்திருந்தார். ஒரு ரூபாய்க்கு நீங்கள் அரிசி தானே போடுகிறீர்கள் இங்கே இரண்டு ரூபாய்க்கு சாப்பாடே கிடைகிறது தெரியுமா... ஏதோ வெளிநாட்டு சமாசாரம் என்று நினைக்காதீர்கள், அதுவும் இங்கே தான் நமது இந்தியாவில் தான்.

ஏழைகள் இருக்கும் வரைக்கும் இலவசங்கள் தொடரும் என்று கலைஞர் சொன்னது போல, இந்த ஏழைகளின் கடும் உழைப்பை மனதில் கொண்டு எந்த நல்லவர் இந்த திட்டத்தை கொண்டு வந்தார் என்ற விபரம் தெரியவில்லை.

இந்தியாவிலேயே ( ஆசியாவிலேயே) இங்கு தான் உணவு பொருட்களின் விலை மிக மிக குறைவு என்று வேறு சொல்கிறார்கள்... இதோ அந்த பட்டியல்...
டீ - 1 ருபாய்
சூப் - 5 ருபாய்
தால் (பருப்பு கூட்டு) - 1 .50 ருபாய்
சாப்பாடு - 2 ருபாய்
சப்பாத்தி - 1 ருபாய்
சிக்கன் - 24 ருபாய்
தோசை - 4 ருபாய்
மீன் - 13 ருபாய்
வெஜ் பிரியாணி - 8 ருபாய்

அவர்களின் மாத சம்பளத்தை கேட்டால் இரத்த கண்ணீரே வரும் போல் இருக்கிறது. ஐயோ பாவம்...!!! வெறும் 1,20,000 (ஒரு லட்சத்து இருபதனாயிரம்)ருபாய் தான். இந்த சம்பளத்தை வைத்து எப்படித்தான் குடுப்பம் நடத்துகிறார்களோ..

இது எங்கு தெரியுமா.....இந்தியாவின் மிகப்பெரிய பாழுங்கிணறு பார்லிமெண்டின் காண்டீனில் தான். கொடுத்து வைத்த ஏழைகள் தான்.

மம்தாவை பிரதமர் வேட்பாளராக....!

மிக நீண்ட நாட்களுக்கு பிறகு இன்று பதிவிட தோன்றியது. முதல் காரணம் தமிழகத்தை பிடித்திருந்த இருள் விலகுகிறது. கூடிய விரைவில் இந்தியாவை பீடித்தி...