Tuesday, October 31, 2017

இதில் யார் புத்தி சாலி...!

உண்மையான அன்பும் அதீத நம்பிக்கையும் இறைவனையே பகடி ( கிண்டல்) செய்யும். மாணிக்கவாசகரின் அத்தகைய ஒரு பாடல்.


இதோ பார்..! சல்லிக்காசுக்குப் பிரயோசனமில்லாத என்னை நான் உனக்கு தந்தேன்.
என்னை நீ ஏற்றுக் கொண்டு, உன்னையே எனக்குத் தந்து விட்டாயே...?!


இதில் யார் புத்தி சாலி? நீயே சொல் — என்று சிவ பெருமானையே  நக்கல் செய்கிறார் மாணிக்க வாசகர்..!


 இதோ அந்த பாடல்..!


தந்தது  உன் தன்னைக் கொண்டதுஎன் தன்னைச்
சங்கரா ஆர்கொலோ சதுரர்..?
அந்தமொன் றில்லா ஆனந்தம் பெற்றேன்
யாது நீ பெற்றதொன்று என்பால்..!


கடவுள் மேல் வைத்த நம்பிக்கைக்கும் அன்பிற்கும் இதைவிட ஒரு நல்ல  பாடல் கிடைக்குமா...?



கலியுக முடிவு எப்படி இருக்கும்...!


மகாபாரத்தில் கலியுக முடிவு எப்படி இருக்கும் என்பது குறித்து சொல்லப்பட்ட தகவல்கள்.

ஆண்கள் ஸ்திரீகளுடன் மட்டுமே நட்பு கொள்ள விரும்புவார்கள்.

மக்கள் ஒருவருடன் ஒருவர் அடித்து கொள்வர். யாருமே கடவுள் பெயரை சொல்ல மாட்டார்கள். எல்லோருமே நாத்திகர்களாகவும் திருடர்களாகவும் மாறுவார்கள்.

பசுக்கள் உடல் மெலிந்து காணப்படும். இறுதியில் பசுக்களை காண்பதே துர்பலமாகும்.

ஆடு மாடுகள் இல்லாமல் போவதால் உணவு சங்கிலி அறுந்து போகும். உலகம் முழுவதும் சந்தோசம் இல்லாமலும், சுறுசுறுப்பு இல்லாமலும் போகும். மக்கள் ஒவ்வொருவரும்  எளியவர்கள், முதிய ஆதரவற்றவர்கள், விதவைகளின் சொத்துக்களை அபகரித்து கொள்வார்கள்.



ஆள்பவர்கள் மனித இனத்திற்கே இடையூறு செய்பவர்களாகவும், கர்வம் அகங்காரம் பிடித்தவர்களாகவும் இருப்பார்கள். குடிமக்களை காப்பாற்ற விட்டாலும் அவர்களிடம் இருந்து பணம் பறிப்பதிலேயே குறியாக இருப்பார்கள்.

ராஜா என்று சொல்லிக்கொள்பவர்கள் மக்களை தண்டிப்பதிலேயே ஆசை கொண்டிருப்பார்கள். நல்ல மனிதர்களை கூட இவர்கள் ஆக்ரமித்து அவர்களின் சொத்துக்கள் மற்றும் பெண்களை அபகரித்து, பலாத்காரம் செய்யும் கீழ்த்தரமான மனநிலை கொண்டிருப்பார்கள்.



ஒரு கை மற்றொரு கையை கொள்ளையடிக்கும். சாப்பிட கூடாதது கூடியது என்ற பாகுபாடின்றி எல்லோரும் எல்லாவற்றையும் சாப்பிடுவார்கள்.

கலியுக புதல்வர்கள், ஆண்களை பெண்களும் பெண்களை ஆண்களும் தாங்களே தேர்ந்தெடுத்து திருமணம் செய்து  கொள்வார்கள்.  ஸ்திரீகளும் புருஷர்களும் அவரவர் இச்சை படி நடந்து கொள்வார்கள். அவர்கள் மற்றவர்களின் எண்ணங்களையும் செயல்களையும் பொறுத்து கொள்ள மாட்டார்கள்.

சிரார்த்தமும் தர்பணமும் இல்லாமல் போகும். யாரும் யாருடைய உபதேசத்தையும் கேட்க மாட்டார்கள். ஆசான்  இருக்கமாட்டான்.  எல்லோரும் அஞ்ஞானத்தில் மூழ்கியிருப்பார்கள். அந்த சமயம் மனிதர்களின் ஆயுள் வெகுவாக குறைந்து போகும்.

கணவனிடம் மனைவியும் மனைவியிடம் கணவனும் திருப்தியடைய மாட்டார்கள். இருவரும் அதிருப்தியடைந்து அந்நிய ஸ்திரீகளை அந்நிய புருஷர்களை நாடுவார்கள்.



வியாபாரத்தில் கொள்வினை கொடுப்பினை செய்யும் பொழுது பேராசையின் காரணமாக ஏமாற்றுவார்கள். செய்யும் தொழிலை பற்றி ஏதும் தெரியாமலேயே தொடர்ந்து செய்வார்கள்.

மக்கள் தோட்டங்களையும் மரங்களையும் வெட்டிவிடுவார்கள். எல்லோரும் இயற்கையிலேயே கொடூரமனம் படைத்தவர்களாகவும் மற்றவர்கள் மேல் பழி போடுபவர்களாகவும் இருப்பார்கள். உலக விவகாரங்கள் எல்லாம் எதிர்மறையாகவே நடக்கும்.

எலும்பாலான இந்த உடலையே பூசிப்பார்கள். இறைவனை பூசிக்க மாட்டார்கள். கோவில்களே இருக்காது. இதுவே யுகம் முடிவதற்கான அடையாளம் ஆகும். எப்போது பெரும்பான்மையான மனிதர்கள் சுயநலவாதிகளாகவும், மது அருந்துபவர்களாகவும், மாமிசம் சாப்பிடுபவர்களாகவும் இருக்கிறார்களோ அப்போது யுகம் முடிந்து போகும்.

வேண்டாத சமயத்தில் மழை பொழியும் மாணவர்கள் ஆசிரியர்களை அவமதிப்பர்.ஆசிரியர்கள் ஏழைகளாவர். அவர்கள் மாணவர்களின் கதைகளை கேட்க நேரிடும்.



சமயத்தில் மழை பொய்க்கும். பருவம் தவறி மழை பெய்யும். விதைகள் முளைக்காது. பெண்கள் எப்போதும் அழுது கொண்டே இருப்பார்கள். அவர்கள் கொடூர மனம் படைத்தவர்களாக மாறுவார்கள். கணவனுக்கு கட்டுப்பட மாட்டார்கள். பிள்ளைகளை பெற்று அவர்களை கொலை செய்வார்கள். மனைவிகள் பிள்ளைகளுடன் சேர்ந்து கணவனை கொலை செய்வார்கள்.

 யாத்ரீகர்கள், பிச்சைக்காரர்களுக்கு ஆகாரம் தண்ணீர் தங்குமிடம் கிடைக்காது. எல்லா இடத்திலும் இல்லை இல்லை என்ற சொல் கேட்டு நம்பிக்கை இழந்து வழியிலேயே இறப்பார்கள்.

யுகம் முடிவடையும்   போது எல்லா உயிரினங்களும் அழிந்து விடும். எல்லா திசைகளும் பிரகாசிக்கும். பெரும்பாலும் குண்டு முதலிய நெருப்பு மழைகளால் நட்சத்திரம் ஒளியிழந்து காணப்படும். நட்சத்திரங்களின் போக்கு விபரீதமாகும். மக்களை துன்புறுத்த கூடிய பயங்கர புயல் வீசும். மக்களுக்கு பயத்தை ஏற்படுத்த கூடிய நட்சத்திரங்கள் வானில் திடீர் திடீரென்று தோன்றும். மின்னல்கள் சூழும். எல்லா திசைகளிலும் தீ எரியும். அப்போது உதயத்திலும் அஷ்தமனத்திலும் சூரியன் ராகுவால் பீடிக்க படுவான்.




யுகம் முடியும் தருவாயில் உலகம் இப்படித்தான் இருக்கும். யுகம் அழிந்து சில காலம் கழித்து மீண்டும் உயிர்கள் துளிர்க்கும்.

கலியுகம் குறித்து கிருஷ்ணர்...!


ஒருமுறை பாண்டவர்களில் நால்வர் பகவான் கிருஷ்ணரிடம் கலியுகம் எப்படி இருக்கும் என்று கேட்டனர். சொல்வதென்ன நேரிலேயே காட்டுகிறேன் என்று சொல்லி தன் வில்லை எடுத்து திசைக்கொன்றாக நன்கு திசையிலும் எய்தான். பின் தான் எய்த அம்புகளை எடுத்துவர பணித்தான். நால்வரும் திசைக்கொருவராக சென்றனர்.



பீமன் ஒரு அம்பை எடுக்கும் பொழுது அங்கு ஐந்து கிணறுகள் இருப்பதையும் அவற்றில் நான்கில் சுவை மிகுந்த நீரும் ஓன்று மட்டும் வெற்றியிருந்ததையும் கண்டான். ஒரே இடத்தில இருக்கும் ஐந்தில் ஓன்று மட்டும் நீரின்றி இருப்பதின் விசித்திரம் என்ன என்று யோசித்து கொண்டே சென்றான்



அடுத்து அர்ஜுனன் சென்ற திசையில் குயிலின் இனிய இசை கேட்டது. இசை எங்கிருந்து வருகிறது கண்களால் தேடிய அர்ஜுனன் அங்கு கண்ட காட்சி கொடூரமாகவும் மனதை அறுப்பதாகவும் இருந்தது. ஆம் இனிய குரலை பெற்றிருந்தும் குயில் ஒரு முயலின் குடலை கிழித்து கொத்தி தின்று கொண்டிருந்தது. ஒருவித வருத்தத்தோடும் குழப்பத்தோடும் அம்பை எடுத்து சென்றான்.



நகுலன் சென்ற திசையில் ஒரு அழகான பசு ஓன்று  கன்று  ஈன்றதை கண்டான். ஈன்ற பசு கன்றை நாவல் நக்கி சுத்தம் செய்து கொண்டிருந்தது. கன்றை சுத்தம் செய்த பின்பும் நக்குவதை நிறுத்தவில்லை. அதை பார்த்த மக்கள் பசுவையும் கன்றையும் சிரம பட்டு பிரித்தனர். அப்படியும கன்று பசு நக்கியத்தில்  காயம் அடைந்தது. ஒரு தாய் தன்னுடைய குழந்தையை எப்படி காயப்படுத்த முடியும் என்ற கேள்வியோடு சிந்தித்தவாறே நகுலன் சென்றான்



சகதேவனும் ஒரு பெரிய மலையில் கிருஷ்ணனின்  அம்பு தரித்திருப்பதை  கண்டு அதை எடுத்துக்கொண்டு திரும்பும் பொழுது ஒரு பெரிய பாறை உருண்டு வருவதை கண்டான். வரும் வழியில் எதிர்ப்பட்ட பெரிய பெரிய மரங்களையும் அடித்து சாய்த்து கொண்டு கீழே உண்டு வந்த பாறை ஒரு சிறிய செடியில் சாய்ந்து நின்றதை அதிசயமாக பார்த்தான். இது எப்படி சாத்தியம் என்று யோசித்தவாறே கண்ணனிடம் விளக்கம் கேட்க நினைத்தான்.



நான்கு பேரும் கண்ணனை அடைந்து தாங்கள் வழியில் பார்த்த விசித்தர சம்பவங்களை விவரித்து விளக்கம் அளிக்க கோரினர். கிருஷ்ணனும் தனது வழக்கமான குறுப்பு சிரிப்புடன் விளக்கம் சொல்லலானார்



அர்ஜுனா, கலியுகத்தில் பெரிய பெரிய மதகுருமார்கள்  ஞான ஆசிரியர்கள் தோன்றி இறை தொண்டு செய்வார்கள்.  தங்களின் இனிய குரலாலும் புதிய புதிய கருத்துக்களால் மக்களை கவர்வார்கள்.  இருப்பினும் பக்தர்களை பொய் ஏமாற்று வேலை கொண்டு பெரும் துன்பத்தில் தள்ளுவார்கள். இவர்களால் மக்கள் பெரும் சிரமத்திருக்கும் சொல்லெனா துன்பத்திற்கும் ஆளாவார்கள் அந்த முயலை போல என்றார். 



பீமா, வரும் காலங்களில் ஏழைகள் செல்வந்தர்கள் இணைந்தே வாழ்ந்தாலும், செல்வந்தர்களால் ஏழைகள் எந்த பயனையும் அடைய மாட்டார்கள். செல்வந்தர்கள் பேராசை கொண்டு தவறான வழிகளில் மேலும் மேலும் சொத்தை சேர்க்க நினைப்பார்கள். ஒருபோதும் ஏழைகளுக்கு கொடுத்தது உதவ மாட்டார்கள். ஏழைகள் ஏழைகளாகவே இருப்பார்கள் அந்த வறண்ட கிணற்றை போல.



நகுலா, கலியுகத்தில் பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகள் மேல் மிகுந்த பாசம் வைத்திருப்பார்கள். இதனால்  அவர்கள்  தவறு செய்தாலும் பொருட்படுத்தாமல் நெறியற்ற செயலையும்  ஆதரிப்பார்கள்.  பல கெட்ட பழக்கங்களுக்கு ஆளாகுவார்கள் அதனால் தங்களின் குழந்தைகள் வாழ்வுதான் பாதிக்கும் என்பதை உணராமல் அவர்களின் அழிவுக்கு அவர்களே காரணமாக இருப்பார்கள். பிள்ளைகளும் ஊழ்வினையால் துன்பம் அனுபவிப்பார்கள் அந்த பசுவின் கன்றை போல.



அருமை சகாதேவ, கலியுகத்தில் மக்கள் தங்களின் நல்ல குணங்களையும், நல்ல சுபாவங்களையும் வேகமாக இழப்பார்கள் அந்த உருண்டு வரும் பாறை போல. யார் எடுத்து கூறினாலும் பொருட்படுத்தவும் மாட்டார்கள். இறுதியில் இறைவன் ஒருவனே இருட்டில் ஒளிரும் சிறிய வெளிச்சமாக தங்களின் துன்பத்திலிருந்து காப்பற்றுவான் என்பதை மிக சிலரே உணருவர் அந்த பாறையை தடுத்த ஒற்றை செடியை போல.



இவைகளே கலியுகத்தின் அம்சங்கள் என கூறி முடித்தார் ஸ்ரீகிருஷ்ணர்.

மம்தாவை பிரதமர் வேட்பாளராக....!

மிக நீண்ட நாட்களுக்கு பிறகு இன்று பதிவிட தோன்றியது. முதல் காரணம் தமிழகத்தை பிடித்திருந்த இருள் விலகுகிறது. கூடிய விரைவில் இந்தியாவை பீடித்தி...