Thursday, August 29, 2013

கள்ளகாதல் தவறென்றால் கள்ள திருமணம் சரியா..

முக நூலில் காங்கிரஸை போட்டு கிழி கிழியென்று கிழிக்கிறார்கள். மானமுள்ளவன் தூக்கில் தான் தொங்கவேண்டும். அது இருந்தான் ஏன் அரசியலுக்கு வரபோகிறார்கள்.

முகநூலில் மோடிக்கான பிரசாரம் வெளுத்து வாங்குகிறது. தெரியாத்தனமாக லிங்க் கொடுக்க போக போட்டு தாளிக்கிறார்கள். எப்படி (Delink)
செய்வதென்று தெரியவில்லை. தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.

முஸ்லிம் சகோதரர்களை மிக கேவலபடுத்தி கமெண்ட் போடுகிறார்கள், பதிவிடுகிறார்கள். எங்கே இவர்கள் பிரசாரம் நெகட்டிவ் - ஆக போய்விடுமோ என்று பயமாக இருக்கிறது. இன்றைய அரசியல் சூழ்நிலையில் காங்கிரசிர்க்கு மாற்று அவசியம். அது மூன்றாவது அணியாக இருந்தால் இன்னும் பிரச்சனை தான். மோடி தான் சரியான தேர்வு என்று நினைக்கிறேன்.

மோடிக்கான பிராசார உத்தி மற்றும் மோடியை பிரோமோட் செய்யும் பொறுப்பு ஒரு அமெரிக்க நிறுவனத்திடம் ஒப்படைக்க பட்டிருக்கிறதாம். உண்மையா..? எது எப்படியோ இது வெறும் மோடி வித்தையா இல்லை மோடி வைத்தியமா என்று இன்னும் கொஞ்ச நாளில் தெரிந்து விடும்.


இன்னும் சில சுவாரசியமான பதிவுகள்..

*********
வெங்காயத்திற்கு ஏன் இந்த நிலை வந்ததென்று
விவசாயத் துறை அமைச்சருக்குத் தெரியாது.

நீர்மூழ்கி கப்பலுக்கு ஏன் இந்த நிலை என்று
பாதுக்காப்புத் துறை அமைச்சருக்குத் தெரியாது.

பாகிஸ்தானுக்கும் சீனாவுக்கும் நம்மகூட
என்ன தான் பிரச்சனைன்னு வெளியுறவுத் துறை அமைச்சருக்குத் தெரியாது

ஆந்திராவில் ஏன் இத்தனை குண்டுவெடிப்புகள், போராட்டங்கள்  என்று உள்துறை அமைச்சருக்குத் தெரியாது.

இந்திய ரூபாய்க்கு ஏன் இந்த நிலை என்று
நிதித் துறை அமைச்சருக்குத் தெரியாது.

நிலக்கரி ஒதுக்கீடு சம்மந்தமான ஒப்பந்த கோப்புகள்
(files) எங்கே சென்றன என்று நிலக்கரித்துறை அமைச்சருக்குத் தெரியாது

மேற்கண்ட எதுவுமே நம்ம பாரத பிரதமருக்குத் தெரியாது. நம் அன்றாட வாழ்வில் நாம் எப்படி சமாளிக்கறோம் என்பதும் தெரியாது .

இது தான் நம்ம இந்தியா

***************************

ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் தரை துடைக்கும் வேலைக்கு ஒருவன் விண்ணப்பித்திருந்தான்.

தரை துடைத்துக் காட்டச் சொன்னார்கள். நன்றாகத் துடைத்தான். அடுத்து சின்னதாய் ஒரு இண்டர்வியூ. கடைசியில் அவனிடம் தகவல் சொல்வதற்காக ஈமெயில் முகவரி கேட்டார்கள்.

‘ஈ மெயிலா? எனகக்கு ஈ மெயில் இண்டர்நெட்டெல்லாம் தெரியாதே’ என்றான் துடைக்க வந்தவன். ‘கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலை பார்க்க விரும்புகிறவனுக்கு ஈமெயில் முகவரி இல்லயா? ச்சே!’ என்று அவனை அனுப்பி விட்டார்கள்.

வேலை இல்லை என்றதும் அவனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்ல. கையில் 10 டாலர்கள் இருந்தன. அதைக் கொண்டு மார்க்கெட்டில் வெங்காயம் வாங்கினான். பக்கத்து குடியிருப்புப் பகுதியில் கூவிக் கூவி விற்றான் 10 டாலர் லாபம் கிடத்தது. மீண்டும் வெங்காயம் மீண்டும் விற்பன. இப்படியே கொஞ்சம் கொஞ்சமாய் விற்று சில வருடங்களில் பெரிய வெங்காய வியாபாரி ஆகிவிட்டார்.

இந்தச் சூழ்நிலயில் ஒரு வங்கிக் கணக்கு திறப்ப சம்பந்தமாக, ஒரு வங்கி ஊழியர் அவரிடம் பேச வந்திருந்தார். அவனுடய ஈமெயில் முகவரி கேட்டார்.

வியாபாரி, ‘ஈமெயில் முகவரி இல்லை’ என்று பதிலளிக்க, ‘ஈமெயில் இல்லாமலே இந்தக் காலத்தில் இவ்வளவு முன்னேறி விட்டீர்களா..? உங்களுக்கு மட்டும் ஈமெயில், இண்டர்நெட்டெல்லாம் தெரிந்திருந்தால்…?’ என்று ஆச்சர்யமாய்க் கேட்டார் வங்கி ஊழியர்.

‘அதெல்லாம் தெரிந்திருந்தால் ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் தரை துடைததுக் கொண்டிருப்பேன்’என்றார் அந்த வியாபாரி...!

நீதி: வாய்ப்புக்கள் விலகும் போது கவலைப்படாதே..எல்லாம் நன்மைக்கே என்று எண்ணி தொடர்ந்து முயற்சி செய்தால் மிகப்பெரும் வெற்றி உனக்காக காத்திருக்கும்...!

*********************

பத்து ஏக்கர் நிலத்தை வித்து படித்து பட்டம் பெற்று, அப்பறம் சம்பாதித்து பத்து சென்ட் இடம் வாங்குவது தான் இன்றைய தொழிற்கல்வியின் சாதனை.

*************************
திருமணம் முடித்த பின் அடுத்தவன் மேல் வருவது கள்ள காதல் என்றால், காதலித்தவனை மறந்து விட்டு வேறொரு திருமணம் செய்வது கள்ளதிருமணம் அல்லவா..

பத்து மணிக்கு மேல கள்ள சாவி போடறவன் எல்லாம் யோசிங்க..!

*****************

Monday, August 26, 2013

இன்னொமொரு கட்ச தீவு உதயமாகிறது...

வெள்ளையர்களால் அடிமை வேலைக்கும், விவசாய பணிகளுக்காகவும் பர்மாவில் குடியமர்த்த பட்டவர்கள் தான் பர்மா தமிழர்கள்.

எந்த ஒரு கலாசார உரிமையும் மறுதலிக்கபட்ட நிலமையில் தான் இன்னமும் அங்கே அவர்கள் வாழ்ந்து வருகிறார்கள். கால ஓட்டத்தில் பர்மிய கலாச்சாரதோடு கலந்து விட்டாலும், சிலர் இன்னமும் நமது பாரம்பரிய கலாசார மிச்சங்களை சுமந்து கொண்டு வாழ்ந்து வருகிறார்கள்.



பர்மாவில் உள்ள காளீ கோவில்


மணிப்பூர், பர்மிய எல்லையில் வாழ்ந்து வரும் தமிழர்களின் வாழ்வில் தான் இப்போது புயல் தாக்க தொடங்கியிருக்கிறது. இலங்கயில் சுழன்றடித்து லட்சோப  லட்சம் மக்களை கொன்றொழித்தும், வாழ்வை புரட்டி போட்டும் மகிழ்ந்த அந்நிய சக்திகள், இப்போது பர்மாவில் மையம் கொண்டிருக்கிறது.

அந்தோ பரிதாபம், இலங்கை தமிழர்களுக்காவது திராவிடர் கழகங்களும், சீமானும், போலிகண்ணீர் வடித்த காங்கிரஸ் பெருந்தலைகளும் வரிசைகட்டி நின்றனர். இவர்களுக்கு கேள்வி கேட்பாரே இல்லை.

மணிபூரின் மோரே நகர் தமிழர்கள் பெருவாரியாக  வாழும் பகுதியாக இருக்கிறது. மியான்மார் என்றழைக்கபடும் பர்மியர் நீண்ட நாட்களாகவே இப்பகுதியில் கண் வைத்திருக்கின்றனர். அண்மையில் சீனா, பாகிஸ்தான் ஊடுருவலை அடுத்து, இந்தியா தரப்பில் இருந்து எந்தவொரு கடுமையான நடவடிக்கயையும் இல்லை என்பதை புரிந்து கொண்ட பர்மியர்கள், இப்போது பகிரங்கமாக இந்தியா எல்லை பகுதியை அபகரிக்க முயல்கிறார்கள்.



மோரே நகரில் உள்ள பிரசித்தி பெற்ற அங்காளம்மன் கோவில்.


காங்கிரஸ் அரசு இருக்கும் போதே கால் வைத்து விட்டால் நல்லது என்று நினைக்கிறார்களோ என்னவோ (ரொம்ப நல்லவன் எவ்வளவு அடிச்சாலும் தாங்குவான்), பின்னால் ஆட்சி மாறினாலும் கலகம் செய்வதற்கு ஏதுவாக இருக்கும். தும்பை விட்டு வாளை பிடிப்பது தானே நாம் வேலை..

இப்போதே விழித்து கொள்ளாவிட்டால் இதுவும் ஒரு கட்ச் தீவாக பின்னாளில் பெரிய தலைவலியாக இருக்க போகிறது. தமிழன் உண்மையிலேய அடிவாங்கவே பிறந்தவனா..?

சீமான்களே, கழக கண்மணிகளே இனி ஒரு மாமாங்கம் அரசியல் நடத்த ஒரு அருமையான வாய்ப்பு. ஜாமாய்..!!

பிரதமர் வாய்ப்பை தவறவிடும் பி‌ஜெ‌பி

திரு பொன். ராதாகிருஷ்ணன் சொல்வது போல் நாடு முழுவதும் மோடி ஆதரவு அலை பெருகி இருப்பது  உண்மை தான். ஆனால் அயோத்தியில் யாத்திரை என்ற பெயரில் இவர்களே தங்கள் தலையில் மண் வாரி போட்டுக்கொள்வார்களோ என்று தோன்றுகிறது.

வெற்றி பெறுவது முக்கியம் அல்ல. திரு.மோடி அவர்கள் சொல்வது போல் பெரும்பான்மையோடு வெற்றி பெறுவது ரொம்ப முக்கியம். மைனாரிட்டி அரசாக காங்கிரஸ் படும் பாடு  எல்லோருக்கும் தெரிந்தது தானே.

பி‌ஜெ‌பி யின் வாக்குறுதிகள், மோடி வந்தால் வல்லரசாக்கிவிடுவோம் என்ற பிரசாரங்கள்  எல்லாம் பெரும்பான்மை இல்லாமல் போனால் கானல்  நீராய் போகும்.

சமூக தளங்களில் மோடிக்கான பிராசரம் வலுத்து வருகிறது. இளைஞர்கள் மோடியை ஆதர்ச புருஷனாக நினைக்க தொடங்கிவிட்டார்கள். ஒரு கோழையான திருடனிடம் அகப்பட்டுக்கிடப்பதை விட, ஒரு வீரனிடம் அடிமையாக கூட இருக்கலாம்.

பி‌ஜெ‌பி என்பது பெரும்பான்மை இந்துகளுக்கான கட்சியே தவிர, இவர்கள் ஓட்டு மொத்த இந்துக்களின் பிரநிதிகள் அல்ல. அயோத்தியில் கோவில் வேண்டுமா என்பதை மக்கள் வாக்கெடுப்பிற்கு விட இவர்கள் தயாரா.. அதனால் அயோத்தி விஷயத்தில் கொஞ்சம் அடக்கி வாசிப்பது நல்லது.

காங்கிரஸ் நினைப்பது போல உணவு பாதுகாப்பு மசோதா இவர்களின் சாதனையாக சொல்லிக்கொள்ளலாமே தவிர வோட்டாக மாறும் என்று சொல்ல முடியாது.  மாநில கட்சிகளின் அரசியலை,  இமஜை தாண்டி இவர்களால் இதை ஓட்டுக்களாக மாற்ற முடியாது. இலங்கை விஷயத்தில் இவர்களின் நிலைப்பாடு ஒன்று போதும் தமிழகத்தில் மண்ணை  கவ்வ. இரண்டு லட்சம் தமிழர்களை கொன்றொழித்த ராஜபக்சே அரசுக்கு விளக்கு பிடித்தவர்கள் என்ற கரை இனி எப்போதும் போகபோவதில்லை.

பி‌ஜெ‌பி வெற்றி பெற செய்ய வேண்டியதெல்லாம், மிக தெளிவான திட்டமிடல். நாட்டின் கடைசி குடிமகனுக்கும் சென்று சேர வேண்டிய பிரசாரம்.

1. ஊழல் மலிந்த காங்கிரஸ் அரசின் அவலங்களை பிராந்திய மொழிகளில், மாநிலத்தில் செல்வாக்கு பெற்ற தலைவர்கள் அல்லது கலைஞர்கள் மூலமாக எடுத்து சொல்வது
2. இந்தியா எல்லைகளில் அந்நிய நாடுகளின் அச்சுறுத்தல் மற்றும் காங்கிரஸின் கையாலாகாதனதை பிரசங்கிப்பது
3. குடும்ப அரசியலும் அதனால் ஏற்பட்ட பொருளாதார தேக்கமும்.
4. ரூபாயின் மதிப்பு வீழிச்சி மற்றும் கட்டுபடுத்த முடியாத விலைவாசி
5. தோல்வியடைந்து விட்ட பொருளாதார கொள்கைகள்
6. செயலற்ற பிரதமர்
7. நிலம், நீர், ஆகாயம் என பரந்துபட்ட ஊழல் அமைச்சர்கள், அவர்களை அரவனைக்கும்  அரசு  என
மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டிய விஷயங்கள் ஏராளம்.



கோஷ்டி பூசலாலும், தேவையற்ற ஈகோ பிரச்சனையாளும் அருமையான வாய்ப்பை தவறவிடாமல் இருந்தால் சரி. 

Tuesday, August 20, 2013

கோர்ட்டா.. கோட்டையா..? ஏன் இந்த முரண்பாடு..

ஆவணங்கள் தொலைவது, அதுவும் குறிப்பாக ஊழல் சம்பந்தபட்ட ஆவணங்கள் தொலைவது இந்தியாவில் மட்டுமே நடக்கும் தொடர் நிகழ்வு. இல்லையென்றால், மின்சார கோளாறினால் அரசு ஆவணங்கள் வைக்கப்பட்டிருக்கும் அலுவலகமே தீப்பிடித்து எரியும். இது போன்ற சமயங்களில், இது மாதிரியான ஒரு சம்பவமே குற்றம் சாட்டபட்டவருக்கு எதிரான வலுவான சாட்சியமாக நீதிமன்றங்கள் ஏற்று கொள்ள வேண்டும்.
நீதிமன்றத்தால் பரிந்துரைக்கபட்டு, தேர்தல் கமிஷன் அறிவித்த இரண்டு யோசனைகளையும் ஆளும், எதிர் காட்சிகள் நிராகரித்திருக்கின்றன. இலவசங்கள் எங்களுக்கு தேவை இல்லை, வேலை வாய்ப்பிற்கு உறுதி செய்யுங்கள், கிரிமினல் வழக்கில் தண்டனை பெற்ற ஒருவர் தேர்தலில் போட்டியிட தடை செய்ய வேண்டும் என்ற இரு யோசனையும் ஒவ்வொரு மக்களும் விரும்புவது தான். மக்களின் விருப்பத்தை பிரதிபலித்த கோர்ட்டும், தேர்தல் கமிசனும், மக்களால் தேர்ந்தெடுக்கபட்ட பிரதிநிதிகள் நிராகரிக்கபட்டிருக்கிறது. ஏன் இந்த முரண்பாடு..?

மிஸ்டர் வைகோ, சீமான் அவர்களே


மிஸ்டர் வைகோ, சீமான் அவர்களே, மெட்ராஸ் கபே திரைப்படம், விடுதலை புலிகள் மற்றும் இலங்கை தமிழர்களை பற்றி தவறாக சித்தரிப்பதாலும், தமிழ் மக்களை, தமிழ் மக்களின் போராட்டத்தை இழிவு படுத்துவதாலும் படத்தை திரையிட்டால், தியேட்டரை முற்றுகை இட்டு போராட்டம் நடத்துவோம், படத்தை திரையிட விடமாட்டோம் என்கிறீர்கள். நிச்சயமாக ஒத்துக்கொள்ள வேண்டிய விஷயம் தான். ஆனால் படத்தை எடுத்தவன் வேண்டுமானால் ஹிந்தி காரணக இருக்கலாம், படத்தை வாங்குபவனும், வெளியிடுபவனும் தமிழன் தானே, முதலில் இவர்களுக்கு புரிய வையுங்கள், தன் இன மக்களை இழிவுபடுத்தும் இது போன்ற படங்களை வெளியீட்டு தானும் அசிங்கப்பட்டு, நம் சகோதரர்களின் உயிர் போராட்டத்தை வெறும் பணத்திற்காக கேவலபடுத்த வேண்டாம் என்று.

Saturday, August 17, 2013

ஏற்றுமதியாளர்களையும் தற்கொலையை நோக்கித் தள்ளும் மத்தியரசின் சாதனைகள்

சமீபத்தில் முகநூலில் வாசிக்க நேர்ந்ததை, அதிகம் பேரை சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் என் பிளாகில் பதிவு செய்கிறேன். சம்பந்த்தபட்டவர்கள் அனுமதிப்பார்கள் என்று நம்புகிறேன். மத்தியரசின் தோல்விடைந்து விட்ட பொருளாதார கொள்கைகள், நாட்டின் நான்கு திசைகளிலிருந்தும் விமர்சனங்களையும், அதிருப்திகளையும் கிளப்பி இருக்கிறது. இந்தியா பங்கு சந்தைகள் ஒரே நாளில் இரண்டு லட்சம் கோடி அளவிற்கு முதலீட்டாளர்களுக்கு நாட்டதை ஏற்படுத்திருக்கிறது. இன்றைய பொருளாதார சூழல் குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சி திருப்பூரில் செவ்வாயன்று நடைபெற்றது. கே.ஆர்.சி. சிட்டி சென்டரில் நடைபெற்ற கருத்தரங்கில் டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆலோசகர், பொருளா தாரப் பேரறிஞர் டாக் டர் வெங்கடேஷ் ஆத்ரேயா கூறுகையில் " மத்திய அரசு பின்பற்றும் தாராளமயக் கொள்கைகளால் நம் நாட்டில் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வதைப்போல, ஏற்றுமதியாளர்களையும் தற்கொலையை நோக்கித் தள்ளும் அபாயம் ஏற்பட் டுள்ளது என்று கூறினார். இந்த கலந்துரையாடல் நிக ழ்ச்சிக்கு முற்போக்கு வாச கர் வட்டத்தின் அமைப் புக்குழு உறுப்பினர் வே.தூய வன் தலைமை தாங்கி னார். அமைப்பாளர் எஸ். பொன் ராம் வரவேற்றார். இதில் பங்கேற்று, "இன்றைய பொருளாதார சூழல்" குறித்து டாக்டர் ஆத்ரேயா உரையாற்றினார். அப் போது அவர் கூறியதாவது: 1991ம் ஆண்டு, "நாடு கடும் நெருக்கடியில் சிக்கியிருக்கிறது. இந்த நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு வெளிநாட்டு கடன் வாங்குவதைத் தவிர வேறு வழியில்லை" என்று சொ ல்லித்தான் புதிய பொரு ளாதாரக் கொள்கையை ஆட்சியாளர்கள் அமல் படுத்தினர். தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்ற பெயரில் அந்த கொள் கைகள் பின்பற்றப்படும் நிலையில், 20 ஆண்டுகளுக் குப் பிறகு இப்போதும் அதே நெருக்கடி நீடித்துக் கொண்டுதான் இருக்கிறது. 1991ம் ஆண்டு பாடிய அதே பாட்டைத்தான் இப்போ தும் மத்திய ஆட்சியாளர்கள் பாடிக் கொண்டிருக்கின் றனர். உற்பத்தி செய்த சரக் குகளை ஏற்றுமதி செய்வ தன் மூலம் நம் நாட்டுக்கு கிடைக்கும் வருமானத்தை விட பொருட்களை இறக் குமதி செய்யும் செலவு அதி கமாக இருக்கிறது. அந்நியச் செலாவணி இருப்பு குறைந் துள்ளது. நிதி நெருக்கடியும் கடுமையடைந்திருக்கிறது. இந்தகாரணங்களால்தான் நமக்கு பற்றாக்குறை ஏற்படுகிறது.இதனால் நாட்டின் வரவு செலவு இடிக்கிறது. வளர்ச்சிப் பணிகளுக்குக் காசில்லை என்று அரசு கையை விரிக்கிறது. இந்த பற்றாக்குறை என்பது நம் நாட்டு மொத்த உற்பத்தியில்4.8சதவிகிதமாகவரலாறு காணாத அளவுக்கு உயர்ந் திருக்கிறது. பற்றாக்குறை யின் உண்மையான அளவு நம் மொத்த உற்பத்தியில் 11.8 சதவிகிதமாகும்.ஆனால்வெளி நாட்டிற்குச்சென்று கடுமையாக உழைத்து சம்பாதிக்கும் நம் உழைப்பாளர்கள் இந்தியா விற்கு பணம்அனுப்புவதால் தான் இந்த பற்றாக்குறை 4.8 சதவிகிதமாக உள்ளது.இந்தி யாவிற்கு அந்நியச் செல வாணி கொடுக்கக்கூடிய நம் நாட்டு உழைப்பாளிகளுக்கு மத்திய அரசு எந்த விருதும் தருவதில்லை. ஆனால் ஒரு பைசா கூட அந்நியச் செலா வணி தராத, பெப்ஸி நிறு வனத்தின் தலைமை அதிகா ரியாக பணியாற்றும் இந் திரா நூயிக்கு மத்திய அரசு விருது வழங்குகிறது.பற்றாக்குறையை சமாளிக்க அந்நிய நேரடி முதலீட்டை வரவேற்கிறது அரசு. ஆனால் பல்வேறு வரியினங்கள் மூலம் இந்நாட்டின் பெரும் பணக்கார நிறுவனங்கள் அரசுக்குச் செலுத்த வேண்டிய ரூ.5 லட்சத்து 22 ஆயிரம் கோடி யை வசூலிக்காமல் கடந்த பட்ஜெட்டில் சலுகையாக அவர்களுக்கு வழங்கிவிட் டனர். அதேசமயம் பொதுத் துறை நிறுவனங்களை விற் பனை செய்து பணம் பெறு வதற்கு முயற்சிக்கின்றனர். எப்போது பார்த்தாலும், நம் நாட்டின் வளர்ச்சி விகிதத் தை அதிகரிக்க வேண்டும் என்று ஆட்சியாளர்கள் சொல்லிக் கொண்டே இருக்கின்றனர். 2012 - 13ல் 8.5 சதவிகிதமாக ஜிடிபி உயரும் என்று ஆரம்பத்தில் சொன்னார்கள்,ஆனால் அது படிப்படியாகத் தேய் ந்து 5 சதவிகிதமாகக் குறைந்துவிட்டது. நடப்புக் கணக்குப் பற்றாக்குறை யைச் சமாளிக்க எப்பாடு பட்டாவது அந்நியச் செலாவணியை அதிகரிக்க வேண்டும் என்று அரசு நினைக்கிறது. வெளிநாட்டுக் கம்பெனிகளின் காலில் விழுந்தாவது, பட்டுக்கம்பளம் விரித்து நம் ஊருக்கு வரச் செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்கள். அந்நிய நேரடி மூலதனம் நம் நாட்டுப் பங்குச் சந்தைக்கு வர வேண்டும் என்று கண் மூடித்தனமாக ஆட்சியா ளர்கள் செயல்படுகின்றனர். அப்படி வரும் வெளிநாட் டுப் பணம் நம் உற்பத்தித் துறையில் ஈடுபடப் போவ தில்லை. லாபம் ஈட்டுவதை மட்டுமே குறியாகக் கொ ண்ட அந்நிய நேரடி மூல தனம் பங்கு சந்தையில் லாபம் கிடைத்தால் இருக் கும், இல்லாவிட்டால் வெளியேறிவிடும். இதனால் நாட்டுக்கு எந்த நன்மையும் கிடையாது. உள்நாட்டுச் சந்தையை பலப்படுத்தி விவசாயம், தொழில் ஆகியவற்றுக்கு ஊக்கம் கொடுத்தால் நம் பொருளாதாரம் ஆரோக்கியமாக வளரும். ஆனால் ஆட்சியாளர்கள் முழுக்க முழுக்க அந்நிய நேரடி மூலதனத்தை இங்கு வரவைப்பதை மட்டுமே குறியாகக் கொண்டு செயல்படுகின்றனர். விவசாயத்திற்கோ, தொழிலுக்கோ எந்த உதவியும் செய்வதில்லை. தாராளமயம் என்பது ஒரு நல்ல சொல். தா ராள மனம் என்பதைக் குறிக்கும். ஆனால் தாராளமயக் கொள்கை என்பது அப்படியல்ல, அதை "நெறி முறை நீக்கம்" என்று சொல் வதே பொருத்தமாக இருக்கும்.இதனால் தான் நாட்டில் விவசாயிகள் தற்கொ லை செய்யும் நிலை ஏற்பட் டுள்ளது. ஏற்றுமதியாளர் களுக்கும் அரசு எந்த உதவி யும் செய்வதில்லை. அவர் களையும் தற்கொலையை நோக்கித் தள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆனாலும் யாரும் அத்தகைய முடிவுக் குப் போகக்கூடாது, ஆட் சியாளர்களின் கொள்கை களை மாற்றுவதற்குப் போ ராட வேண்டும்.திருப்பூரைப் பொறுத்தவரை பின்னலாடை ஏற்றுமதி ஒன்றை மட்டுமே சார்ந்து இருக்கக்கூடாது. பன்முகமான தொழில் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுவதன் மூலம் திருப்பூரைப் பாதுகாக்க வேண்டும் என்று டாக்டர் வெங்கடேஷ் ஆத்ரேயா கூறினார்.இதைத் தொடர்ந்து கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முன்னாள் ஊராட்சித் தலைவர் வே.முத்துராமலிங்கம், பேராசிரியர் சுந்தரம், பார்க் கல்லூரி முதல்வர் திருமாறன், கவிஞர் சுப்ரபாரதிமணியன், ஆர்.ஏ.ஜெயபால், டிரிபிள் எக்ஸ் குப்புசாமி, பேண்டம் நடராஜன், எம்எல்எப் சம்பத், ஹரிஹரன் உள்பட பலர் பங்கேற்றனர். மேலும் இதில் பின்னல் புக் டிரஸ்ட் சார்பில் நிசார் அகமது, கே.காமராஜ், கே.உண்ணிகிருஷ்ணன், எம்.ராஜகோபால் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர். நிறைவாக ஆர்.ஈஸ்வரன் நன்றி கூறினார்

மம்தாவை பிரதமர் வேட்பாளராக....!

மிக நீண்ட நாட்களுக்கு பிறகு இன்று பதிவிட தோன்றியது. முதல் காரணம் தமிழகத்தை பிடித்திருந்த இருள் விலகுகிறது. கூடிய விரைவில் இந்தியாவை பீடித்தி...