Thursday, April 7, 2011

பொங்கி எழும் இந்தியா ஊழலுக்கெதிராக வெடிக்கும் அமைதி புரட்சி இளைஞர்களே அணி திரளுங்கள்

அக்கினி குஞ்சொன்று கண்டேன் - அதை அங்கோர்
காட்டிடை பொந்திடை வைத்தேன்
வெந்து தணிந்தது காடு - தழல் வீரத்தில்
குஞ்சென்றும் மூபென்றும் உண்டோ....?

பாரதியின் வீர வரிகள் உயிர்பெற்று வந்தது போல் இருக்கிறது. அன்னா ஹசரேவை பார்க்கும் போது. இந்த தழல் குஞ்சல்ல பழுத்த மூத்த அனல். 42 ஆண்டுகளாக சலிக்காமல் போராடும் இவரின் போராட்டம் இன்று வீதிக்கு வந்திருக்கிறது முதல் முறையாக. (வாழ்க ஊடகங்கள்). தென்னிந்திய ஊடகங்கள் முற்றிலுமாக குறிப்பாக தமிழகத்தில் இது குறித்து பெட்டிசெய்தி கூட காணோம். ஆனால் வடக்கில் கிழிகிறது கிழட்டு அரசியல் வாந்திகளின் முகத்திரை.



வந்து குவியும் இளைஞர் ஆதரவு அந்த முதியவரே எதிர்பாராதது. மத்திய கிழக்கு நாடுகளை மையம் கொண்ட ஊழலுக்கு அடக்குமுறை ஆட்சிகெதிரான புயல் முதல் முறையாக தெற்கத்திய நாடுகளில் மையம் கொண்டிருக்கிறது. ஒட்டு மொத்த இந்தியாவும் இப்போது அன்னா ஹசரவை மற்றொரு மகாத்மாவாக பார்க்கிறது. 16 வயது பெண் டெல்லி இந்திய கேட்டிலிருந்து பேசுகிறார் " காந்தியை நாங்கள் பார்த்ததில்லை. அன்னாவை நான் காந்தியாகவே உணர்கிறேன்."

என் அன்பு இளைஞர்களே இதை விட்டால் இன்னொமொரு சந்தர்ப்பம் கிடைப்பதரிது. கைகோர்ப்போம் வாருங்கள். ஊழலுக்கு எதிராய் கிளர்திருக்கும் இந்த புரசியை நாம் தவறவிட்டால் வருங்கால சந்ததிக்கும் நாம் மிகபெரும் பாவம் இளைத்தவர்கள் ஆவோம். வாயிற்று பசிக்கு 10 ரூபாய் திருடியவனை ஆசனவாயில் குச்சியை சொருகும் அதிகாரம் கோடிகணக்கில் கொள்ளையடிபவனுக்கு சலாம் போடுகிறது. ஊழல் செய்தது உறுதிபடுத்தவே 20 வருடங்களாகும், தண்டனையோ மிக சொற்பம் தான். கொள்ளையடித்தை மிக விமரிசையாய் அனுபவித்து சந்தோசமாய் செத்து போவான். நாமோ தினம் தினம் சாகிறோம்.

ஊழலுக்கு எதிரான லோக் பில் கமிசனை அமுல் செய்ய 42 ஆண்டுகள் கிட்டத்தட்ட 10 அரசாங்கங்களிடம் தணியாம மல்லு கட்டிவரும் இவரை நாம் ஆதரிக்கவேண்டியது காலத்தின் கடமை. தவிர்க்க படகூடாத நமது உரிமை. இத்தனை வருடங்கள் கழிந்தும் வழக்கம் போல் ஒரு குழுவை அமைத்து லோக் பில் கமிசனை ஆய்வுக்கு உட்படுத்த முயற்சிகள் எடுத்தது மத்திய அரசு. ஊழலுக்கு எதிரான இந்த சட்ட முன்வடிவை ஆய்வுக்கு உட்படுத்துவபர்கள் யார் தெரியுமா..? ஊழலின் மொத்த வடிவமான சரத்பவார் & கோ. மொத்த உறுப்பினர்களும் ஊழல் பெருச்சாளிகள்.

இதை எதிர்த்து தான் சாகும்வரை உண்ணாவிரத்தை தொடர்ந்தார் அன்னா. மொத்த உறுபினர்களின் 50 % பேர் மக்கள் பிரதிநிதிகளாகும், கண்ணியமான அரசு நிர்வாகிகளும் இடம் பெற வேண்டும் என்கிறார். ஊழல் செய்தவனுக்கு என்ன தண்டனை என்பதை ஊழல் செய்தவனே நிர்ணயிக்க வேண்டும் என்ற உயர்ந்த எண்ணம் மத்திய அரசிற்கு இருக்கும் வரை இந்தியாவில் ஊழலை ஒழித்து விடுவோம், கருப்பு பணத்தை மீட்டு விடுவோம் என்பதெல்லாம் வீண் பேச்சு தான். இந்த சந்தர்பத்தில் நாம் கர்கொர்க்க தவறினால் வரலாறு நம்மை மன்னிக்காது மட்டுமல்ல இனி எந்த தெய்வம் வந்தாலும் இவர்களிடம் இருந்து நம்மை காக்க முடியாது.


இந்திய இளைஞர்கள் சோம்பேறிகள், குறிப்பாக தமிழக இளைஞர்கள் தொடைநடுங்கிகள் அவர்களுக்கு சினிமாவையும், கிரிகெட்டையும் விட்டால் வேறு எதுவும் தெரியாது என்றொரு அவப்பெயர் நமக்குண்டு. அதை களைய இதுதான் சரியான சந்தர்ப்பம். நடிகர் ஆமிர்கான் கூட அன்னா ஹசரேவுக்கு ஆதரவு தெரிவித்து இருக்கிறார். உலககோப்பையின் இக்கட்டான தருணத்தில் இந்தியா வெற்றி பெற நாம் பிரார்த்தித்தோம், நமது ஆதரவை அவர்களுக்கு தெரிவித்தோம், இது அதைவிட முக்கியமான பிரச்னை. நாம் அன்னாவுடன் கைகோர்த்து போராடுவது மிக மிக அவசியம் என்று தனது ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் ஒட்டு மொத்த இளைஞர்களுக்கும் அழைப்பு விடுத்திருக்கிறார்.

டெல்லி, மும்பை, பெங்களூர், சென்னை மெரீனாவில் அன்னாவிற்கு ஆதரவு தரும் பொருட்டு உண்ணாவிரதம் கடைபிடிக்க படுகிறது. நீங்கள் உண்ணாவிரதம் இருக்காவிட்டாலும் பரவாயில்லை. ஒருமுறையாவது போய் உங்கள் ஆதரவை தெரிவியுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் எடுத்து சொல்லுங்கள்.



கதறும் வரை கதறிவிட்டேன். அப்பறம் என்ன படிச்சிட்டு இவனுக்கு வேற வேலை இல்லைன்னு சொல்லிட்டு போங்க...அதைதானே காலம் காலமா பண்ணிட்டு இருக்கோம். கொஞ்சம் Times Now சேனலை பாருங்க சார். டெல்லியில் திரண்டிருக்கும் இளைஞர் கூட்டத்தை பார்த்த பிறகாவது நமக்கு உரைக்கட்டும்

Wednesday, April 6, 2011

அமைதி காக்கும் விஜய், அடங்கிப்போன சரத், ஆர்ப்பரிக்கும் விஜயகாந்த்

இன்றைய சூழ்நிலையில் மூன்று பேரும் தவிர்க்க முடியாத புள்ளிகள். சினிமா என்றாலும் சரி, அரசியல் என்றாலும் சரி. நடிகர் சங்க தலைவர், நாடார் இன மக்களின் முகவரி, திராவிட கட்சிகளுடனான தொடர்பு என சரத்திற்கு எப்போதும் செல்வாக்கு அதிகம். ஆனால் அவருக்கு கொடுக்கப்பட்ட இரண்டு தொகுதிகளுடன் திருப்தி அடைந்துவிட்டாலும் முதல்வர் கனவு அவருக்கும் உண்டு. காமராசர் ஆட்சி எனும் கோசத்துடன் ஆரம்பிக்கப்பட்ட கட்சி சாதி சங்கமாக சுருங்கிபோனதன் விளைவு தான் இரண்டு தொகுதி மட்டும் என திருப்தி பட வேண்டியதாகிவிட்டது. சினிமா அரசியல்வாதிகளில் கொஞ்சமாவது தெளிவாக பேசுவது தான் இவரது பலம். ஆனால் சபைக்கு வரவிடாமல் சாதி சங்க ஆட்கள் காலைவாரி விடுவது பலவீனம்.

தென்காசி தொகுதியில் வெற்றி வாய்ப்பு இருப்பதாகவே தெரிகிறது. சத்தமே இல்லாமல் தொகுதியை வலம் வருகிறார்கள் சரத்தும், ராதிகாவும். தென்காசி பிரசாரத்தின் போது சரத்தின் பெயரை உச்சரிக்காமல் விட்டதில் எந்த உள்குத்தும் இல்லையாம். பெயர் விடுபட்டுவிட்டது யதார்த்தமாக நடந்தது தான். பின்பு மறக்காமல் சரத்தின் பெயரையும் சொல்லி ஒட்டு போடா சொன்னது சரத்திற்கு ஆறுதலாக இருந்திருக்கும். அதிகமாக எந்த தொகுதிக்கும் பிரசாரத்திற்கு செல்லாத சரத், ஸ்ரீரங்கம் மட்டும் செல்ல போகிறார்.
தாங்கள் போட்டியிடும் தொகுதியில் யாரையும் வந்து பிரச்சாரம் செய்யுமாறு சரத் அழைக்கவில்லை. காரணம் ராதிகாவை வந்து மற்ற தொகுதிகளில் பிரச்சாரம் செய்ய கூப்பிடுவார்கள் என்பதை தவிர்க்கத்தான். என்னாதான் இன்று காட்சி மாறிவிட்டாலும் ராதிகாவிற்கு கலைஞர் மேல் பாசம் அதிகம், அவரை எதிர்த்து பிரச்சாரம் செய்ய யோசிக்கிறார்



தேர்தல் கூட்டணிக்கு முன்பே அம்மாவை துணிச்சலுடன் சந்தித்தவர் விஜய். ஏதோ நடக்கபோகிறது என்று நினைபதற்குள்ளாகவே விழுந்தது முதல் அடி. காவலன் படத்தை திரையிட விடாமல் சதி செய்தனர் ஆளுங்கட்சி புள்ளிகள். படாத பாடு பட்டுதான் படத்தை ரிலீசே செய்தார்கள். அப்படியும் சன், கலைஞர் விளம்பரம் செய்யாமல் இருட்டடிப்பு செய்ய படம் எதிர்பார்த்த அளவிற்கு போகவில்லை. பயம் காட்டினால் படிந்து விடும் என்று எதிர்பார்த்த நிலையில் மீண்டும் போயஸ் பக்கம் போனதும் உஷாரான தி மு க கோஷ்டி கொஞ்சம் அடக்கி வாசிக்க ஆரம்பித்தது.

இந்நிலையில் விஜய் அ தி மு காவை ஆதரித்து பிரச்சாரம் செய்ய போகிறார் என்று தெரிந்ததும், ஆடிப்போன ஆளுங்கட்சி தரப்பு சாம தான பேத தண்டங்களை பிரயோகித்து தடுக்க முயற்சி செய்தது. வழக்கம் போல் விஜய் பின் வாங்க ஆரம்பித்தும் சூடான சந்திர சேகர் தனியாகவே களம் இறங்கிவிட்டார். சந்திர சேகர் சூடானதற்கு சட்டபடி குற்றம் என்ற அவரின் படத்திற்கும் பஞ்சாயத்து பண்ணவேண்டி வந்ததால் தான்.

கட்சியில் சேரபோகிறார், பிரச்சாரம் செய்யபோகிறார், என்றெல்லாம் கசிந்த நிலையில் இன்று வெறும் அறிக்கை மட்டும் விடுவார் என்கிறார்கள். அம்மா தரப்பு அறிக்கை மட்டும் போதாது ஜெய டிவியில் தோன்றி அ தி மு க கூட்டணிக்கு அதரவு என்று ஓபன் ஸ்டேட்மென்ட் விடவேண்டும் என்று எதிர்பார்கிறார்கள். ஆனால் அடக்கி வாசித்தால் பெறப்போகும் பல நன்மைகளை பட்டியலிட்டிருகிறது தி மு க தரப்பு. (இழந்த பெட்டிகளை திருப்பி தருவதாகவும் பேச்சு)



ஒட்டுமொத்த ஆளுங்கட்சி கூட்டணி தலைவர்களும் கேப்டனை குறிவைத்து தாக்குவதற்கு காரணம் ஒன்றே ஓன்று தான் அது இந்த தேர்தலில் தி மு க கூட்டணி தோல்வி அடைந்தால் காரணம் தே தி மு காவின் ஒட்டு வங்கி அ தி மு காவை சேர இருப்பது தான். தே மு தி க 41 தொகுதிகளில் போட்டியிட்டு 5 அல்லது 10 தொகுதிகளில் கூட வெற்றி பெற முடியாமல் போகலாம். ஆனால் அ தி மு க போட்டியிடும் 160 தொகுதிகளிலும் தே மு தி காவின் ஓட்டுக்களால் ஆதாயம் அடைய போகிறது. கேப்டனின் இமேஜை காலி செய்ய என்ன என்ன சாக்கு கிடைத்தாலும் போட்டு தாக்கிறது. வடிவேலுவை கூட்டி வந்ததும் அதற்காக தான். ஆரம்பத்தில் கொஞ்சம் ஓவராகவே பேசிய வடிவேலு எதிர்கோஷ்டி சிங்கமுத்துவை இறக்கி விட்டதும் கொஞ்சம் சுருதி குறைந்து விட்டது. பாம்பின் கால் பாம்பறியும் என்பது தான். வடிவேலுவின் மொத்த குடுமியும் சிங்கமுத்துவிடம் இருக்கிறது.

புலி வாலை பிடித்த கதையாக போனது வடிவேலுவின் நிலைமை. பிரசாரத்தை கைவிட யோசித்த வடிவேலு அழகிரியின் ஒரே பார்வையில் அடங்கி போனதாக தெரிகிறது. வடிவேலு பேசும் இடங்களில் கூட்டம் சேர்வது உண்மை. ஆனால் அவரின் பேச்சில் தி மு காவை தூக்கி பிடிக்கும் அளவிற்கு வலுவில்லை. கொஞ்சம் உற்று நோக்கினால் மேடை தோறும் அவர் பாடும் பாடல்கள் எம் ஜி ஆர் பாடல்கள். கருணாநிதியின் உற்ற நண்பர் எம் ஜி ஆர் என்று வேறு சொல்லிகொள்கிறார். வெறும் ஒரு ரூபா அரிசி, இலவச மிகஷி, கிரைண்டர், அவசர உதவிக்கு 108 என்பதை தவிர வேறு ஒன்றையும் காணோம். ஏற்கனவே இந்த எல்லா திட்டங்களில் உள்ள ஓட்டையை பட்டி தொட்டியெல்லாம் பரவ செய்து விட்டார்கள் அம்மாவும், பாண்டியனும், சீமானும்.

விஜயகாந்தின் சினிமா இமேஜையும் காலி பண்ண முடியாமல், அரசியல் இமேஜையும் காலி பண்ண முடியாமல் கையை பிசைகிறது தி மு க அணி. என்ன வேணா சொல்லிக்கோ என்று தில்லாக தொகுதிகளை வலம் வருகிறார் கேப்டன். ஆர்ப்பரிக்கும் கூட்டத்தை கண்டு வயிறு எரிகிறது. கருப்பு எம் ஜி ஆர் என்று சொல்லிகொண்டாலும் பொறுமை, அமைதி, நிதானமாக திட்டமிட்டு காரியங்களை சாதிப்பது என்பதெல்லாம் கேப்டனிடம் இல்லை. இருக்கும் குறைகள் தெரிந்து அதை களைய வேண்டும். இல்லாமலல்லாம் சித்திக்காது முதல்வர் கனவு.


(ஒரே மேடையில் ஏறவில்லை என்ற ஏக்கம் தீர்ந்ததா..)

Tuesday, April 5, 2011

விஜயகாந்தால் டாஸ்மார்க் ஆண்டு வருமானம் 35 கோடி உயருகிறது..!!

ஆளுங்கட்சி மேடை தோறும் "ஆப்பை" பற்றி விஜயகாந்த் ஆப்படித்ததை முழங்குகிறார்கள். கலாசார சீர்கேடு என்று முழங்கும் இவர்கள் ஒரு விஷயத்தை சொன்னால் வாயை மூடிக்கொண்டு போய்விடுவார்கள். அது விஜயகாந்தால் டாஸ்மார்கிற்கு வரும் ஆண்டு வருமானம் பற்றிய கணக்கு. "ஆப்பை" பற்றி அவர் பேசியதன் மூலம் தெரிய வரும் உண்மை உங்கள் பார்வைக்கு.

ஒரு நாளைக்கு ஒரு "ஆப்பு" அடிப்பதாக வைத்து கொண்டால் அதன் விலை தோராயமாக ரூபாய் 150. வழக்கம் போல அல்லக்கைகள் இல்லாமல் தலைவர்கள் சரக்கை கையில் தொடுவதில்லை. அது நமது பண்பாடு ஆயிற்றே. அதனால் கூட ஒரு 5 பேர் வைத்து கொள்வோம். அவர்களுக்கும் சேர்த்து ரூபாய் 1000 சரக்கிற்கு மட்டும். ஊறுகாயில் இருந்து முந்திரி, ஓடறது, பறக்றது, பறக்றது போடறது என செலவு ஒரு 500 ஆக ஒரு நாளைக்கு சரக்கிற்கு 1000 , சைடு டிஷிற்கு 500

வருடத்திற்கு இரண்டும் சேர்த்து 547500. தலைவரே சொல்லிவிட்டார் என்று தே தி மு க தொண்டர்களும், கூட்டணி கட்சியில் உள்ளவர்களும் "ஆப்படிக்க, குவாட்டர் அடிக்க ஆரம்பித்தால் தோரயமாக அவர்களுக்கு இருக்கும் ஓட்டு வங்கியின் சதவிகித அடிப்படையில் (32 % + 8.5 %) இவர்களில் இருந்து ஒரு 10 % சதவிகிதத்தை எடுத்து கொண்டால் 3500000 பேர். சராசரியாக ஒரு நாளைக்கு ஒருவர் 100 செலவு செய்தால் கூட 35 கோடி வருகிறது. டாச்மார்கின் ஆண்டு வருமானம் 40 ஆயிரம் கோடியை நெருங்குகிறது என்று அறிகிறோம். கிட்டத்தட்ட 10 % ஆண்டு வருமானம் கேப்டனால் உயர போகிறது.



இலவசங்களை மாறி மாறி அறிவித்தால் போதுமா..? இதை என்ன உங்கள் அப்பன் வீட்டு சொத்தில் இருந்தா கொடுக்க போகிறீர்கள். டாஸ்மார்க் வருமானத்தை நம்பிதானே ஆட்டு புளுக்கையில் இருந்து அம்மிக்கல் வரை தரபோகிறீர்கள். எந்த வித மார்கெட்டிங் செலவும் இல்லமால் கேப்டனால் ஏற்பட்டிருக்கும் நன்மைகளை உணராமல் அவரை மேடை தோறும் வதைப்பது எந்த வகையில் நியாயம். போதாதற்கு எச்சி சோறு வடிவேலு வேறு, ஒரு நாளாவது வடிவேலு தன்னியடிகாமல் செட்டிற்கு வந்ததுண்டா...? என்ன தகுதி அய்யா இருக்கு புறமுதுகில் ஓடும் சாக்கடையை முதலில் கழுவுமையா... அப்பறம் வரலாம் சபைக்கு.

எனது வலைபதிவிற்கு வரும் நண்பர்களுக்கு நன்றி. கிடைக்கும் மிக குறுகிய நேரத்தில் என்னால் முடிந்ததை எழுதுகிறேன். பிற நண்பர்களின் பதிவுகளையும் மிக குறைந்த அளவே என்னால் படிக்க முடிகிறது. என்னை பின் தொடர்பவர்களுக்கு கூட என்னால் ஒரு நன்றியை சொல்ல முடிவதில்லை என்ற வருத்தம் எனக்குண்டு. விரைவில் எனக்கான நேரத்தை அதிகபடுத்தி கொள்ள முயற்சிக்கிறேன். உங்களின் அன்பிற்கு நன்றி.

Monday, April 4, 2011

காசு கொடுப்பவன் ஒன்றும் கக்கனோ, காமராசரோ அல்ல - தேர்தல் வியாபாரம்

தேர்தல் களம் கோடை வெயிலையும் தாண்டி சூடு பிடிக்க ஆரம்பித்துவிட்டது. மானாவாரியாக போட்டு தாக்குகிறார்கள். ஒருவர் கூட கொள்கை விளக்க கூட்டமோ, தேர்தல் அறிக்கையின் சாராம்சம் குறித்தோ, அதன் எதிர்கால நலன்கள் குறித்தோ பேசுவதில்லை. இலவசங்கள் மட்டும் தான் தேர்தல் அறிக்கையா...? அது மட்டுமே ஒட்டு மொத்த தமிழகத்தின் எதிர்காலத்திற்கும் நலம் பயக்குமா...? பதில் சொல்லவும் ஆளில்லை, எதிர் கேள்வி கேட்கவும் இங்கு நாதியில்லை.

சாராயம் குடித்ததை பற்றியே பேசியும், தொலைகாட்சியில் ஒளிபரப்பியும் நேரத்தை விரயமாக்குகிறார்கள். சாராயம் விற்ற காசில்தானே நீ இலவசங்களை அள்ளி கொடுக்கிறாய் அப்பறம் என்ன "ம...த்துக்கு" அவன் தண்ணியை போட்டுட்டு ஒளரான்னு சொல்ற. தைரியம் இருந்தா இனி மதுக்கடைகளை திறக்க மாட்டோம் என்று சொல்லு...பிரச்சாராம் செய்வதில் எத்தனை பேர் தண்ணியடிகாமல் வருகிறார்கள் என்று எண்ணி பார்த்தால் கட்சிக்கு ரெண்டு பேர் கூட தேறமாட்டார்கள்.

அரசியல் நாகரீகம் கொஞ்சம் கூட இல்லாமல், கொத்தாவால் சாவடி மார்கெட்டில் பேசுவது போல் பேசிவிட்டு, தன் கட்சி காரர்களை பேசவிட்டு விட்டு, கலைஞர் அரசியல் நாகரீகம் செத்துவிட்டது என்று முதலை கண்ணீர் விடுவது அவரது வயதிற்கு ஏற்றதல்ல. சண் டிவியையும் உங்கள் தொலைக்காட்சியையும் கொஞ்சம் நீங்கள் பாருங்கள் அவர்களின் அத்துமீறல்கள் உங்களுக்கு புரியவில்லை என்றால் தயவு செய்து அரசியலில் இருந்து ஓய்வு பெற்று விடுங்கள். பொது மக்களிடம் இருந்தோ, எதிர்கட்சிகளிடம் இருந்தோ ஒரு புகார் கூட வராத நிலையில் தினம் தினம் தேர்தல் கமிசனை சாடுவதை மக்கள் பார்த்து சிரிக்கிறார்கள். பணம் பட்டுவாடா செய்து ஓட்டுகளை பெற்றுவிடலாம் என்ற கனவில் மண்ணை போட்ட தேர்தல் ஆணையத்தை எப்படியெல்லாம் கருவறுக்கலாம் என்று ஒரு கூட்டமே ஆலோசனை நடத்துகிறதாமே. அறுபதாண்டு கால அரசியல் ஒரு சாமானியனால் கேவலப்படும்படி ஆனதற்காய் வெட்கபடுங்கள் கலைஞரே.

சீமான் வேறு பணத்தை கொடுத்தால் வாங்கிகொள்ளுங்கள். அது அவர்கள் கொள்ளையடித்த உங்கள் பங்கு என்று விளக்க ஆரம்பித்துவிட்டார். அதுவும் சரிதான் கொடுக்கும் பணத்தை வாங்கி கொள்ளுங்கள். நீங்கள் வைத்துகொண்டாலும் சரி இல்லை உங்கள் அருகிலுள்ள ஏழைகளுக்கு கொடுத்துவிட்டாலும் சரி. கொடுத்ததை வேண்டாம் என்று சொல்லாதீர்கள். பணத்தை வாங்கிகொண்டு உங்களுக்கு நல்லவர் என்று தோன்றும் வேட்பாளர்களுக்கு ஒட்டு போடுங்கள். நியாயம், நேர்மை பார்க்க காசு கொடுப்பவன் ஒன்றும் கக்கனோ, காமராசரோ அல்ல.



எந்த தேர்தலிலும் கேவலபடாத அரசியல் கட்சிகள் இம்முறை தொடர்ந்து மாறி மாறி சேற்றை பூசிகொள்கின்றன. உபயம் ஊடக வளர்ச்சி. கலாநிதி மாறனின் வியாபார தந்திரம் உலகறிந்த விஷயம். வடிவேலுவை வைத்து இவர்கள் செய்யும் காமெடி மக்களுக்கு அதிர்ச்சி மட்டுமல்ல, சன் டிவிக்கு எதிராகவே அது திரும்புகிறது என்பதை இந்த வியாபார காந்தம் உணரவில்லை. ஒரு 500 பேருக்கு மத்தியில் பேசியதை 6 கோடி மக்களுக்கும் கொண்டு சேர்ப்பது நாகரீகமான விஷயமாக இருந்தால் சரி. அவன் தண்ணி அடிச்ச என்ன, தொண்டனை அடிச்ச என்ன அதை நொடிக்கொரு தரம் போட்டு ஏன்யா உயிரை எடுக்கற..? அவ்வளவு அறிவு இருக்கறவன், கலாச்சாரத்தின் மீது மரியாதை வைக்கறவன் அய்யாவிடம் சொல்லி மதுவை ஒழிக்க வேண்டியது தானே..இது எந்த வகையில் சமூக அக்கறை என்று..? சாமான்யன் கேட்கிறான்.

சுபவீ , திருமாவளவன், ராமதாஸ் இவர்கலெலாம் 3 நிமிடம் 5 நிமிடம் பேசிவிட்டு செல்ல, 40 நிமிடம் பேசும் வடிவேலு தனி மனித தாக்குதலை தானே செய்கிறார். இதில் எங்கே உங்கள் கட்சியின் கவுரவம் காப்ற்ற படுகிறது. கூட்டணி தலைவர்களை, காலம் காலமாக கழகத்தின் பேச்சாளர்களாக இருப்பவர்களை அசிங்கபடுத்த இது போதாதாத..?

எவ்வளுதான் சேற்றை வாரி இறைத்தாலும், தன் பிரசாரத்தில் மட்டுமே முழு கவனமும் செலுத்திக்கொண்டு வலம் வரும் அம்மா அரசியல் நடுநிலையாளர்களை கவரவே செய்கிறார். தனது கூட்டணி கட்சி தலைவர்கள் பற்றி கூட சிந்திக்காமல் கிடைத்த இந்த வாய்ப்பை விட்டுவிட கூடாது என்பதில் தான் அவரது முழு கவனமும். 160 -ல் எப்படியும் 118 பெற்று விட வேண்டும் என்று ஒற்றை ஆளாய் கிளம்பிவிட்டார். தே தி மு காவின் கூட்டணி, தான் போட்டியிடும் இடங்களில் வெற்றி பெற உதவும் என்ற நம்பிக்கை அவருக்கு இருக்கிறது. பெரும்பான்மை பெற்று விட்டால் மற்ற கூட்டணி கட்சிகளின் நிலை கவலைக்கிடம் தான். இது அவர்களுக்கும் தெரியாமல் இல்லை. கட்சி சார்பாக எம் எல் ஏக்களை பெறுவது தான் அவர்களின் அதிகபட்ச ஆசை.


(இவங்க என்ன செய்ய காத்திருகாங்களோ..!!? அடுத்த ஸ்டாலினும் அழகிரியுமா...!!)

மம்தாவை பிரதமர் வேட்பாளராக....!

மிக நீண்ட நாட்களுக்கு பிறகு இன்று பதிவிட தோன்றியது. முதல் காரணம் தமிழகத்தை பிடித்திருந்த இருள் விலகுகிறது. கூடிய விரைவில் இந்தியாவை பீடித்தி...