Friday, March 11, 2011

கெட்டபடமா..சிலுக்குவின் வாழ்க்கை

சிலுக்குவின் வாழ்க்கை திரைப்படமாகிறது. சிலுக்குவின் வாழ்க்கை ஒரு மிகப்பெரிய மர்ம புத்தகமாவே விரிகிறது.ஒட்டுமொத்த திரையுலகையும் ரசிகனையும் தன் ஒரு கிறக்க பார்வையாலேய கவர்ந்திழுக்கும் சக்தி அந்த காந்த கண்களுக்கு மட்டுமே உண்டு. அதன் பிறகு எத்தனையோ பேர் வந்தார்கள் போகிறார்கள்..இவரளவு நின்றவர்கள் யாருமில்லை.

சிலுக்குவின் பெயருக்கு ஒரு Brand Maker அந்தஸ்து இருந்தது. திரையுலகில் வெகு சிலருக்கே வாய்க்கும் வரம் அது. நதியா, ரேவதி, ரஜினி போல் ஐவரும் ஒரு காலத்தில் அசைக்க முடியாத வியாபார சக்தியாகவும் இருந்தார். ரஜினியின் சில படங்கள் கூட சிலுக்கின் நடனத்திற்காக காந்திருந்த காலம் அது.

அவரின் உடலசைவும், கவர்ச்சியான கிறக்க பார்வையும் வலிந்து அவராக திரைபடதிற்காக ஏற்றுகொண்டவை. உடலின் குலுக்கல்கள், அவரின் நடன அசைவுகள் எல்லாம் சரோஜா மாஸ்டரின் திறமைக்கு கிடைத்த பரிசுகள் தான். சமீபத்திய பேட்டியில் கூட எங்கோ வீட்டு வேலை செய்துகொண்டிருந்த பெண்ணை, கொண்டு வந்து தங்க வைத்து, உணவு கொடுத்து, நடிக்க கற்று கொடுத்து பெரிய ஆளாகிவிட்டது நான் தான், என்னை ஒரு வார்த்தை கேட்காமல் எப்படி சிலுக்குவின் வாழ்க்கையை படமாக எடுக்கலாம் என்று பொரிந்து தள்ளியிருந்தார் வண்டிச்சக்கரம் படத்தின் மூலம் சிலுக்குவை அறிமுகபடுத்திய வினுசக்கரவர்த்தி.

சிலுக்குவின் வேடத்தில் நடிப்பதற்கு யாரையும் மனத்தால் டிக் செய்துவிட முடியாது. ஒரு புதுமுகத்தை கூட ஏற்று கொள்ள முடியும். ஏற்கனவே வேறு ஒரு இமேஜில் பார்த்து பழகி விட்ட யாரும் சிலுக்கின் இடத்தை நிரப்பி விட முடியாது. அதுவும் வித்யாபாலன் அந்த வேடத்திற்கு ரொம்ப நெருடலாகவே இருக்கிறது. கவர்ச்சியை யார் வேண்டுமானாலும் காட்ட முடியும், அதற்கு சிலுக்கிவின் சாயத்தை பூசமுடியாது என்பது தான் உண்மை. பார்ப்போம் எப்படி காட்ட sorry நடிக்க போகிறார் என்று.



யாரும் அறிந்திராத விஜிஎன்ற விஜியலசுமியை அவரை அறிந்திராதவர்களே இல்லை என்னும் அளவிற்கு வளர்த்து விட்டதில் வினுச்சகரவர்த்திக்கும் பங்குண்டு. இவருடன் நடித்த பலரும் வெளிப்படையாக இவரை பற்றி பேச தயாரில்லை என்றாலும் ஒருசிலர் அவளை போல ஒருத்தியை இனி பார்ப்பது கடினம் என்கிறார்கள். அவள் ஒரு நெருப்பு மாதிரி இருந்தாள், ஆரம்ப காலங்களில் அவள் பட்ட துயரம் கொஞ்சநஞ்சமல்ல...ஒரு கிராமத்தில் அடுத்த காட்சிக்காக உடை மாற்றும் போது மரத்தின் மீது ஏறி நின்று அந்த கிராமமே வேடிக்கை பார்த்ததை மனவேதனையோடு ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார். அவரால் உதவி பெற்றவர்கள் பலர், கதாநாயகியை விட அதிகம் சம்பளம் பெற்றும் பெரிய அளவில் அவர் சொத்து சேர்க்கவில்லை என்பதில் இருந்தே இது தெரிகிறது. அதுமட்டுமல்ல நம்பிய பலரால் அவர் ஏமாற்றப்பட்டும் இருக்கிறார். இதனாலெலாம் வெறுத்து போய் தான் தன்னை சுற்றி ஒருவரையும் அவர் நெருங்க விடவில்லை. அதையும் மீறி அவர் தற்கொலை செய்துகொள்ளும் அளவிற்கு என்ன நடந்தது என்பது ஆண்டவன் மட்டுமே அறிந்த ரகசியம்..

மனோரமா, வடிவுக்கரசி, வினுச்சரகவர்த்தி போன்ற ஒருசிலர் தான் அவரின் இறுதி ஊரவலத்தில் கூட கலந்துகொண்டார்கள். ஆனால் ஒரு காலத்தில் இரவு நேரங்களின் அவரின் வீட்டுகதவை தட்டாத கைகள் மிகவும் குறைவு.



இப்படி நடிக்க வந்தவரை...???



இப்படி மாற்றியது யார் குற்றம்..??

ஒரு கவர்ச்சி நடிகை என்பதையும் தாண்டி, அவருக்குள் ஒரு மனித நேய முகம் இருந்ததை அவரின் ஒரே பதில் உலகிற்கு சொல்லியது. ஆனால் அவரின் உடல் கவர்ச்சியை தாண்டி எதையும் சிந்திக்க அவரின் ரசிகர்கள் தயாரில்லை. "அது நடிக்க வராவிட்டால் நான் ஒரு நக்சல் ஆகியிருப்பேன் என்று ஒரு பேட்டியில் சொன்னது"
ஒருவேளை இந்த பதிலிற்கு பின்னிருந்த வேதனைகளையும் திரையுலகமும், ரசிகனும் புரிந்து கொண்டிருந்தால் அவர் ஒருவேளை இன்றும் நம்மோடு வாழ்ந்து கொண்டிருந்திருக்கலாம். ஒரு கௌரவமான மனுசியாக..!!

இப்போது சொல்லுங்கள் சிலுக்குவின் வாழ்வையொட்டி தயாராகும் படத்திற்கு கெட்டபடம் என்று பெயர் வைக்கலாமா..?!!இந்த சமூகத்தால் கெட்டு போனவளின் படம் என்பதுதான் பொருத்தமாக இருக்கும்

4 comments:

  1. சிலுக்கு இட‌த்தில் இன்னும் யாரும் வ‌ர‌வில்லை. க‌தா நாய‌கிக‌ள்தான் சிலுக்கு இட‌த்திற்கு போய் விட்டார்க‌ள்

    ReplyDelete
  2. சில்க் ..சில்க் ...அவர் விட்ட இடத்தை பிடிக்க இனி யாரும் இல்லை ...

    ReplyDelete
  3. நன்றி ஜோதி,

    கதாநாயகிகள் சிலுக்குவின் இடத்தை பிடிக்க நேர்வது காலத்தின் கோலம். அதில் தேர்ந்தவர்கள் யாரும் இல்லை.

    ReplyDelete
  4. சிலுக்குவின் திறமை குறித்து யாருக்கும் சந்தேகம் இருக்க முடியாது, அவரின் மறைக்கப்பட்ட இன்னொரு முகம் கடைசி வரை வெளியே தெரியவில்லை

    ReplyDelete

உங்களின் வரவிற்கான முத்திரையை வைத்துவிட்டு போங்கள். உங்களின் ஒரு சில நிமிடத்தை இங்கு செலவளிததற்க்கு நன்றி. மீண்டும் நேரம் கிடைக்கும் போது வாங்க.

மம்தாவை பிரதமர் வேட்பாளராக....!

மிக நீண்ட நாட்களுக்கு பிறகு இன்று பதிவிட தோன்றியது. முதல் காரணம் தமிழகத்தை பிடித்திருந்த இருள் விலகுகிறது. கூடிய விரைவில் இந்தியாவை பீடித்தி...