Wednesday, March 2, 2011

கலைஞரின் ஆச்சர்யமும், ஜெயலலிதாவின் ஆதங்கமும்..

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது. தேர்தல் திருவிழா குறித்த செய்திகள் வர ஆரம்பித்து சாமான்யனின் பொழுது போக்கிற்கு தினம் தினம் புது புது அறிக்கைகளை தரபோகிறது ஆளும் / எதிர் கட்சிகள். பெட்ரோல் விலை குறைப்பு என்று கலைஞர் பிள்ளையார் சுழி போட்டிருக்கிறார். பாவம் அவருக்கு ஆட்சி முடிவிலாவது மக்கள் படும் துயரங்கள் கண்ணில் பட்டதே என்று ஒருவகையில் நாம் ஆசுவாசபட்டுகொள்வோம்.

பா ம க - தி மு க கூட்டணி சந்தர்ப்பவாதத்தின் உச்சம் என்று ஒவ்வொரு தமிழனும் தெரிந்தே இருக்கிறான் என்பதை கலைஞர் மறந்து விட்டார். சு.சாமி கட்சி போல் இந்த தேர்தலுக்கு பிறகு பா ம கவும் தனி நபர் கட்சியானால் ஆச்சர்யபடுவதற்கொன்றுமில்லை. அவர்கள் தனிமை படுத்தப்பட வேண்டும், வெறும் வாய்சவடால் பேர்வழிகளால் மக்களுகென்று எதுவும் நடக்கபோவதில்லை. சுகாதாரதுறை அமைச்சராக இருந்தபோது மதுவை / சிகரெட்டை தடை செய்ய முயற்சி எடுக்காமல் இப்போது கூப்பாடு போடுவது இவர்களின் கையாலாகத்தனம் தான். சாதிவாரி கணக்கெடுப்பு எந்த வகையில் மக்களுக்கு உதவுமென்று தெரியவில்லை. இதுவே பெரிய சாதனையென்று மார்தட்டி கொள்கிறார்கள்.

அ தி மு க மேல் பெரிய எதிர்பார்ப்பு விழுந்திருக்கிறது. இம்முறை இவர்கள் வெல்ல நிறைய வாய்ப்புகள், காரணங்கள் இருக்கின்றன. அதை சரியான முறையில் மக்களுக்கு கொண்டு சேர்க்க முடிந்தாலே போதும். தே மு தி க கூட்டணி ஒருவகையில் இவர்களுக்கு பலம் தான். மக்கள் தீர்மானம் என்ன என்பது போக போக தான் தெரியும். கலைஞரின் தேர்தல் கால அறிக்கைகள் எப்போதுமே மிக கவர்ச்சியானவை. இந்திய அளவில் மிக பிரசித்தி பெற்றவை. இவர் என்ன சொல்ல / செய்ய போகிறார் என்பது தான் தற்போது அம்மாவை தூக்கம் தொலைக்க வைக்கிறது.

இவர்கள் சொல்லுவது இருக்கட்டும் நாம் என்ன நினைக்கிறோம், எதிர்பார்க்கிறோம் என்பது இவர்களுக்கு தெரியுமா..யாராவது இதுவரை இவர்களுக்கு நமது தேவைகளை சொல்லி இருக்கிறார்களா..? அதை தேர்தல் வாக்குறுதிகளாக பெற்றிருக்கிறோமா..? பெற்றதை இவர்கள் நிறைவேற்றி இருகிறார்களா..? நிறைவேறாத தேர்தல் அறிக்கைகளுக்காக, தேர்தல் ஆணையமோ, நீதிமன்றங்களோ நடவடிக்கை எடுக்க முடியுமா..? இந்த அமைப்புகள் அரசியல் வாதிகளின் சட்டையை பிடித்து கேள்வி கேட்க என்ன செய்ய வேண்டும்..? நிறைவேற்றபடாத தேர்தல் அறிக்கைகளுக்கு பொது நல வழக்கு தாக்கல் செய்ய முடியுமா..? பதில் தெரியாத / கிடைக்காத எத்தனையோ கேள்விகள் தோன்றும் நேரம் இது தான். தேர்தல் முடிந்ததும் வழக்கம் போல மறந்து விடுவோம்.. யாருக்காவது விடை தெரிந்தால் சொல்லுங்க சார்...!! மச்சான் நீ கேளேன்..கதை தானா..?

இந்த லட்சணத்தில் தேர்தல் முடிவு வேறு ஒரு மாதம் தள்ளிதானாம். அப்பறம் எதுக்கு சாமி ஓட்டு இயந்திரம். பட்டனை தட்டினால் முடிவு தெரியும் என்கிறார்கள். பட்டனை தட்ட ஒரு மாதமா. நீ ஆணியே புடுங்க வேணாம் போ..!! இதில் ஆச்சர்யம் என்னவென்றால் கலைஞர் இதற்க்கு எதிர்ப்பு தெரிவிப்பது தான். தொட்டிலையும் ஆட்டிவிட்டு புள்ளையையும் கிள்றது இது தானா...எத்தனை கள்ளவோட்டோ...எத்தனை ஓட்டு இயந்திரங்கள் கொள்ளை போகுமோ..பெரியாருக்கே வெளிச்சம்.

13 - பேயை விரட்டும் நம்பராம். கேப்டன் சொல்கிறார். பேயை ஆட்சியை விட்டு விரட்டுங்க...தப்பில்லை ஆனால் அது உங்கள் மனசில இடம் தராம பார்த்துகங்க.

வரப்போகும் ஜூன் மாதம் மீண்டும் ஒரு நாள் நள்ளிரவில் "என்னை கொல்றங்கோ..காப்பாத்துங்கோ.."என்ற அலறல் எல்லா டிவி சேனல்களிலும் ஒளிபரப்பபட்டாலும் படும். கெடுவான் கேடு நினைப்பான்...!!

இரண்டு வருடங்களாக நடந்து வரும் ஒரு வழக்கில் முக்கிய ஆவணங்கள் தொலைந்து போய்விட்டதாக சி பி ஐ தெரிவித்திருப்பது மகா கேவலம். ராசா மிக விரைவில் வெளியே வந்து தேர்தல் பிரச்சாரம் செய்வதும் நடக்கும். கூட்டணி உறுதியாகிவிட்டால் போதும் காங்கிரஸ் பிடி தளர்ந்து விடும். சி பி ஐ என்பது என்ன..ஆளுங்கட்சியின் அல்லக்கை தானே..!! இந்த கலோபரங்களுகிடையில் ஆதர்ஷ் ஊழலை சுத்தமாக மறக்கடித்து விட்டது தான் காங்கிரசின் தந்திரம். நாம என்ன தான் தலைகீழ நின்னாலும் இந்த தொகையை மிஞ்ச முடியாதே... குழந்தையா குட்டியா..தஞ்சாவூர் வாரிசுகள் ஒன்னு சேர்ந்தாலும் கஷ்டம் தான் என்பது தான் அம்மாவின் எதிர்கால ஆதங்கம்.

அமாம் ஒரு சந்தேகம்...? ஏன் இந்த நாசமா போன அரசு கல்லூரி மாணவர்கள் மட்டும் பஸ் டே கொண்டாடுகிறார்கள். தனியார் கலை / பொறியியல் கலோரிகள் தங்கள் மாணவர்களுக்கென்று பிரத்தியோகமான பஸ்கள் வைத்திருந்தும் அவர்கள் எல்லாம் பஸ் டே கொண்டாடுவதில்லையே...!!? ஓஹோ...வடிவேல் கணக்கு போல...இது உங்கள் சொத்து...!!

அமைதிக்கும் குளுமைக்கும் பெயர் பெற்ற கோவை நகரம் வர வர காமகொடூரங்களின் கூடாரமாகிவிட்டது. 7 வயதே நிரம்பிய பெண் குழந்தை கொலை செய்யப்பட்டு கற்பழிக்கபட்டிருக்கிறாள். ஆள்பவர்களை பொறுத்தவரை சட்டம் ஒழுங்கு மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் சிறப்பாக தான் இருக்கிறது. எப்படி இந்த அம்மா ஆட்சியில் மட்டும் ரவுடியிசம் கட்டுபடுத்தபடுகிறது என்பது கலைஞரின் நிரந்தர ஆச்சர்யங்களுள் ஓன்று. அதுக்கு காவல் துறையை தன பொறுப்பில் வைத்திருந்தால் மட்டும் போதாது. அவர்களை கொஞ்சம் வேலை செய்ய விடவேண்டும் அய்யா. கடவுளே...உலகம் எப்போ அழியும்...!!?

11 comments:

  1. //சுகாதாரதுறை அமைச்சராக இருந்தபோது மதுவை / சிகரெட்டை தடை செய்ய முயற்சி எடுக்காமல் இப்போது கூப்பாடு போடுவது இவர்களின் கையாலாகத்தனம் தான்.//

    என்னது

    சிகரெட்டை தடை செய்ய முயற்சி எடுக்கலையா

    உங்க அறிவு இவ்வளவுதானா

    ReplyDelete
  2. //சாதிவாரி கணக்கெடுப்பு எந்த வகையில் மக்களுக்கு உதவுமென்று தெரியவில்லை//

    இந்த குறைந்த பட்ச அரசியல் அறிவு இல்லாதவர்கள் தான் அந்த குடிகாரன் -கூத்தியா கூட்டனிக்கு சொம்பு தூக்குகிறார்கள்

    ReplyDelete
  3. அம்மா நெடி ரொம்ப தூக்கலா இருக்கு!?

    ReplyDelete
  4. யாருய்யா இந்த அதிரடி...சிகரட்டை தடை செய்ய போவதாக மிரட்டி, சிகரட் கம்பனிகளிடம் பொட்டி பொட்டியாக பணத்தை கொள்ளையடிச்சதை தவிர என்னத்தை கிழிச்சாங்க இவங்க...

    ReplyDelete
  5. நன்றி கொக்கரக்கோ,
    அம்மா நெடி தூக்கலாக இருப்பதற்கு காரணம், அம்மாவின் அலை தான் எங்கும் பரவி கிடக்கிறது என்பதே.

    ReplyDelete
  6. வருகைக்கு நன்றி சர்புதீன்

    ReplyDelete
  7. இன்று தான் உங்கள் வலைத்தளம் வந்தேன்...அருமை காரசாரா அரசியல் பதிவு... எனக்கு மிகவும் பிடித்தது..இந்த அம்மா ஆட்சியில் மட்டும் ரவுடியிசம் கட்டுபடுத்தபடுகிறது என்பது கலைஞரின் நிரந்தர ஆச்சர்யங்களுள் ஓன்று. அதுக்கு காவல் துறையை தன பொறுப்பில் வைத்திருந்தால் மட்டும் போதாது. அவர்களை கொஞ்சம் வேலை செய்ய விடவேண்டும் உண்மைதான்... . ஒரு நல்ல பதிவுக்கு பின்னூட்டம் இட்ட மகிழ்ச்சி....வாழ்த்துக்கள் நண்பரே...

    ReplyDelete
  8. நல்லாத்தான் எழுதி இருக்கிறிர்கள் நண்பா.... அப்படியே உங்கள் ஊர் தேர்தல் ட்ரெண்ட் என்ன என்றும் எழுதவும்....

    ReplyDelete
  9. நன்றி ரேவா,
    உங்களின் பின்னூட்டத்தில் ஒரு துள்ளல் தெரிகிறது

    ReplyDelete
  10. அதைப்பற்றியும் எழுத உத்தேசம்..விரைவில்

    ReplyDelete

உங்களின் வரவிற்கான முத்திரையை வைத்துவிட்டு போங்கள். உங்களின் ஒரு சில நிமிடத்தை இங்கு செலவளிததற்க்கு நன்றி. மீண்டும் நேரம் கிடைக்கும் போது வாங்க.

மம்தாவை பிரதமர் வேட்பாளராக....!

மிக நீண்ட நாட்களுக்கு பிறகு இன்று பதிவிட தோன்றியது. முதல் காரணம் தமிழகத்தை பிடித்திருந்த இருள் விலகுகிறது. கூடிய விரைவில் இந்தியாவை பீடித்தி...