Tuesday, March 22, 2011

2011 தேர்தல் - சில புதிர்கள்

புதிர் 1
பரபரப்பு கொஞ்சம் ஓய்ந்தது போல் தெரிந்தாலும் சொல்லி வைத்தது போல் அடுத்து அடுத்து பரபரப்புக்குரிய செய்தி வந்து விடுகிறது. தி மு க, அ தி மு க, தே மு தி க அடுத்து இப்போது காங்கிரஸ் வட்டாரத்தில் வேட்பாளர் குளறுபடி ஆரம்பித்துவிட்டது. போன வாரம் கட்சிகளின் பிரச்னை இந்த வாரம் கட்சி கோஷ்டிகளின் பிரச்னையில் பரபரப்புக்கு பஞ்சமில்லை. எதைவேண்டுமானாலும் தீர்க்கமுடியும் காங்கிரஸ் கோஷ்டி பிரச்சனையை தீர்க்க முடியுமா..?

புதிர் 2
நேற்றைய வரை 35000 புகார்களுக்கு மேல் தேர்தல் நடைமுறைகளை மீறியதாக பல்வேறு கட்சிகளின் மீது பதிவு தேர்தல் ஆணையத்தால் செய்யபட்டிருகிறது. இதே வேகத்தில் போனால் எப்படியும் ஒரு 3 புகார்களும் ஒரு குறைந்தது 1 லட்சம் வழக்குகளாவது தொடரப்படும். இதனால் என்ன பயன்..? தேர்தல் வழக்கு பதிவு செய்வதால் மட்டும் கட்சிகளின் நடவடிக்கையில் மாற்றம் வரபோகிறதா..? இதன் விசாரணை, அதன் முடிவுகள் தேர்தல் முடிந்த பிறகு தானே வெளிவரும். அதனால் வெற்றி பெற்ற கட்சிகள் எதவகையிலும் பாதிக்கப்பட போவதில்லை. வெற்றி பெற்றபின் இந்த புகார்களுக்கும், விசாரணைகளுக்கும் என்ன மரியாதை இருக்கும்..?

புதிர் 3
வை கோ வெளியேற்றப்பட்டதற்கு எவ்வளவோ காரணங்கள் முன் வைக்கபடுகிறது. ராசியில்லாத கட்சி, அவர் கேட்பது போல் 22 தொகுதி கொடுத்தால் தனி பெரும்பான்மை கிடைப்பதில் அ தி மு காவிற்கு ஏற்படும் சிக்கல், விடுதலை புலிகள், ஈழ தமிழர் விவகாரத்தில் அவருக்கும், ஜெயாவிற்கும் இருக்கும் முரண்பாடு, விஜய் மல்லையாவின் வேண்டுகோள், ராஜ பக்செவின் விருப்பம் என பட்டியல் நீள்கிறது. இதில் எது உண்மை..? தினமலர் வை கோவை பற்றி தவறான முடிவுகள் எடுக்கும் சரியான மனிதர் என வர்ணித்திருப்பது யாரை திருப்தி படுத்த...? தி மு க ஆதரவு ஊடகங்கள் வை கோவின் நிலை குறித்து முதலை கண்ணீர் வடிப்பது எதற்காக..? வை கோவின் தேர்தல் புறகணிப்பு ஒருக்காலும் ம தி மு காவிற்கு நன்மை தரபோவதில்லை. மாறாக அவர்களின் முதுகில் குத்திய ஜெயாவிற்கும், கலைஞருக்கும் தான் சாதகமாக மாறபோகிறது.

புதிர் 4
ஒட்டு மொத்த திரையுலகமும் குடும்ப ஆட்சியால் பாதிக்கபட்டிருகிறது என தகவல்கள் வருகிறது. தேர்தல் கூட்டணி உறுதியாகி பிரசாரத்திற்கும் வண்டி கிளம்பி விட்டது ஆனால் எதிர்பார்த்த பரபரப்பு கோடம்பாக்கத்தில் காணோமே..? என்ன சமாசாரம்..? மீண்டும் இவங்க ஆட்சியை பிடித்துவிட்டால் என்ன பண்ணி தொலைவது என்ற பயமா..? விஜய் இன்னும் பகிரங்கமாக வெளிவர தயங்குவது ஏன்..?

புதிர் 5
இலவசங்கள் குறித்து எத்தனை விமர்சனங்கள் வந்தாலும், இலவசங்களை காட்டி எப்படியும் ஆட்சியை பிடித்துவிட முடியும் என நினைக்கும் கலைஞரின் தைரியம், தமிழனின் அறியாமை தானே. பதிலுக்கு அ தி மு காவும், பா ஜா காவும் இலவச கோதாவில் இறங்காமல் நரேந்திர மோடியை போல் தைரியமாக இலவசங்கள் இல்லாத ஒரு தேர்தல் அறிக்கையை வெளியிடுமா...? இலவசங்கள் ஒரு மோசடி திட்டம் என்பதையாவது மக்களிடம் கொண்டு சேர்க்குமா..?

புதிர்கள் இன்னும் இருக்கு..உங்களின் பங்கிற்கு நீங்களும் சொல்லுங்கள்

6 comments:

  1. புதிர்: ஆமா, விஜயகாந்த் ஏன் விருத்தாசலத்தில் போட்டியிடலைன்னு தெரியுமா?
    புதிருக்கான விடை: விருதகிரி தோல்வி எதிரொலி...


    எனது வலைபூவில் இன்று: தனபாலு...கோபாலு.... அரட்டை மூணு!

    ReplyDelete
  2. வாங்க பிரகாஷ்
    வருகைக்கு நன்றி

    ReplyDelete
  3. //பதிலுக்கு அ தி மு காவும், பா ஜா காவும் இலவச கோதாவில் இறங்காமல் நரேந்திர மோடியை போல் தைரியமாக இலவசங்கள் இல்லாத ஒரு தேர்தல் அறிக்கையை வெளியிடுமா...?//



    இதற்கு பதில் வந்து விட்டது.. தி மு க விட டபுள் மடங்கு இலவசம்.. அண்ட் கட் அண்ட் பேஸ்ட் தேர்தல் அறிக்கையை சுரத்தே இல்லாமல் , தேமே என்று வெளியிட்டார் ஜெ .. அருகில் கட்சியின் முக்கிய இரண்டாம் கட்ட தலைவர்கல் கூட இல்லாமல்.. அகம்பாவம் போகவில்லை போல ..

    இவர் தோற்க தான் வேணும்

    ReplyDelete
  4. வாங்க ராஜேஷ்,
    தி மு காவின் அனுதாபியாக உங்களை காட்டிகொண்டதற்கு வாழ்த்துகள்

    நொடிக்கு நொடி மாறும் கட்சிகளால் பெரிய பெரிய அரசியல் தலைவர்களே மண்ணைகவ்வும் நிலையில் நான் வெறும் வாக்காளன் தான். என் பார்வையும் கணக்கும் தவறுவது அதிசயம் ஒன்றுமல்ல. அதற்காக நான் மண்ணை கவ்வபோவதுமில்லை.

    ஆடையில்லாதவன் ஊரில் ஆடையணிந்தவன் முட்டாள் தான். அம்மா இதுவரை முட்டாளாக இருந்தது போதும் என்ற முடிவுக்கு வந்துவிட்டார். இப்போதுதான் சரியான போட்டி ஆரம்பித்திருக்கிறது. எதிரியை அவன் தந்திரத்தை வைத்தே முறியடிப்பது போரில் ஒரு வகை தான்.

    ReplyDelete
  5. என்னத்த சொல்றது காது கிழிஞ்சி போச்சி ஹிஹி!

    ReplyDelete
  6. வருகைக்கு நன்றி விக்கி

    ReplyDelete

உங்களின் வரவிற்கான முத்திரையை வைத்துவிட்டு போங்கள். உங்களின் ஒரு சில நிமிடத்தை இங்கு செலவளிததற்க்கு நன்றி. மீண்டும் நேரம் கிடைக்கும் போது வாங்க.

மம்தாவை பிரதமர் வேட்பாளராக....!

மிக நீண்ட நாட்களுக்கு பிறகு இன்று பதிவிட தோன்றியது. முதல் காரணம் தமிழகத்தை பிடித்திருந்த இருள் விலகுகிறது. கூடிய விரைவில் இந்தியாவை பீடித்தி...