Friday, March 18, 2011

17 வயது பெண்..! 13 இரவுகள்..! வில்லங்க பிரதமர்...!

தமிழக அரசியலில் கடந்த ஒரு வாரமாக சூடு கிளப்பும் காட்சிகள், கொதித்து போன வேட்பாளர்கள், வீறுகொண்டு எழுந்த தொண்டர்கள், செய்வதறியாது திகைத்து சுதாரித்த தலைவர்கள் என ஒரே போராட்ட களம். கொஞ்சம் ஆறுதாலாக இருக்கட்டுமே என்று தான் இந்த பதிவு. இதுவும் அரசியல் பதிவு தான் ஆனால் கொஞ்சம் வில்லங்கமான பதிவு. ஒரு ஆறுதல் இது நம்மவர்களை பற்றியது அல்ல.

இத்தாலியின் பிரதமர் சில்வியோ பெர்லூஸ்கோணி, பெரிசுக்கு வயது 72 ஆனால் ஆடிய ஆட்டமோ சிறிசுகளும் தாக்குபிடிக்க முடியாது. இந்த வயதிலும் சின்ன பெண்கள் பக்கத்தில் இல்லயென்றால் பெரிசுக்கு தூக்கம் வரதாம். கோடிகளில் புரளும் கிழட்டு சிங்கம் அந்தரங்க அழகிகளுக்கு பரிசு கொடுத்து அசத்துவதில் கில்லாடி. பிடித்த பெண்கள் படிந்து விட்டால் எதைக்கேட்டாலும் கொடுப்பாராம். பரிசுகளும் கோடியில் தான்.

ஆட்டம் போட்ட பெரிசு இப்போது ஒரு சிறிசு விஷயத்தில் மாட்டிகொண்டு முழி பிதுங்கிறது. இத்தாலி நாட்டு சட்டப்படி 18 வயதிற்கு குறைந்த பெண்ணுடன் உறவு வைத்துகொண்டால் கடுமையான தண்டனை உண்டு. ஒரு திருட்டு வழக்கில் மாட்டிய 17 வயது பெண்ணை போலீசார் விசாரிக்க போக மேலிடத்திலிருந்து விடுவிக்க சொல்லி உத்தரவு வந்திருகிறது. அவர்கள் தமிழ் நாடு போலிசை போல் இல்லை. நொண்டி நோங்கெடுத்ததில் பாப்பா, தாத்தாவின் லீலைகளை பட்டியல் போட்டிருக்கிறது.17 வயது விபசார பெண்ணுடன் 13 முறை உறவு கொண்டது அம்பலமாகிவிட்டது. வழக்கம் போல் பிரதமர் சார்பில் மறுப்பு தெரிவிக்கபட்டிருகிறது. வரும் ஏப்ரல் மாதம் 6 -ம் தேதி வழக்கு விசாரணைக்கு பிரதமர் ஆஜராகிறார். ஏற்கனவே பல "கேஸ்களை" இது போல் சந்திதிருபதால் பெரிசுக்கு இது மேட்டரை இல்லை. இப்ப விஷயம் என்னன்னா...? மண் பொன் பெண் - இந்த மூன்றும் தான் மனிதனை சோரம் போகவைக்கும் சமாச்சாரங்கள். இதுவரை மண்ணையும், பொன்னையும் நம்மாளுக இஷ்டத்துக்கு சுருட்டி விட்டார்கள். அப்படின்னா..இந்தமுறை பெண்களின் வலையில் அரசியல் தலைகள் உருளபோகிறதா...!!?!! தமிழக அரசியலில் அப்படி மாட்ட போவது யாராக இருக்கும்...நீங்களே சொல்லுங்க..

8 comments:

 1. வாங்க கருண்
  நன்றி செய்தி புதியது அல்ல, இடம்பெற்ற களம் தான் புதியது

  ReplyDelete
 2. ஸ்டாலின், இவர் அடிய ஆட்டம் ஊருகே தெரயுமே

  ReplyDelete
 3. அது தனி கதை, செத்து புதைச்ச கதை அதை ஏன் தோண்டுவானேன்...?

  ReplyDelete
 4. ராசா கனிமொழி ஆட்டமா? கருணாநிதியே நல்லா ஆடியவர் தானே கண்ணதாசனின் வனவாசம் வாசிக்கவும். செல்வி ஜெயலலிதாவும் புரட்சித்தலைவரும் ஆடாத ஆட்டங்களா?

  ReplyDelete
 5. இது அங்கு ஒன்று இங்கு ஒன்று என்று இருப்பது இல்லை, எல்லா நாட்டிலும், எல்லா ஊரிலும், எல்லா மதத்திலும், எல்லா இடதிலும் இருப்பது தான்.....

  ReplyDelete
 6. இங்கு பந்திக்கு வராத ஆட்டங்கள் தான் எல்லாமே...சாமியார்களின் சல்லாபங்கள் வெளியே வந்தது போல் இந்த அரசியல் சாக்கடைகளின் சரசங்கள் பெரிதாக வந்தது இல்லை. கண்ணதாசனின் வனவாசம் படிக்கவில்லை, படித்துவிட்டு பதிவை பந்தியில் ஏற்றுகிறேன் கூடிய விரைவில்.

  ReplyDelete

உங்களின் வரவிற்கான முத்திரையை வைத்துவிட்டு போங்கள். உங்களின் ஒரு சில நிமிடத்தை இங்கு செலவளிததற்க்கு நன்றி. மீண்டும் நேரம் கிடைக்கும் போது வாங்க.

LinkWithin

Related Posts with Thumbnails