Sunday, January 30, 2011

என் வேலை முடிஞ்சது..உங்கள் கருத்தையும் சொல்லுங்க.

வெளியுறவு செயலர் நிருபமா ராவ் இலங்கை சென்றது வெறும் கண் துடைப்பு - நிதின் கட்காரி
தமிழக மீனவர்கள் மீது என்ன சார் உங்களுக்கு புது கரிசனம்...ஓ..!! தேர்தல் ஜுரமா..சும்மா பினாததீங்க சார்..!!

இலங்கை தமிழர்களை கொன்றவர்களை வரலாறு மன்னிக்காது - த. பாண்டியன்
இலங்கை தமிழர்களை கொன்றது யார் என்கிறீர்கள். ராஜா பக்ட்ஷேவா..அவர் வெறும் பிணங்களின் மீது தான் வன்முறை வெறியாட்டம் போட்டார். அவர்களை நட்டாற்றில் தவிக்க விட்டு கொன்றது தமிழகத்தை சேர்ந்த அரசியல் தலைவர்களும், முத்து குமரனின் தீக்குளிப்புக்கு பின்னரும் கூட, சொரணை கெட்டு எவன் செத்த நமக்கென்ன என்றிருந்த நாம் தான்...நம்மை தான் பெரும் பாவம் சூளும்

கருப்பு பணத்தை பற்றி தகவல் தந்தால் பொது மன்னிப்பு - அரசு

பொது மன்னிப்பு என்று அரசு தெரிவிக்கவில்லை, கருப்பு பணத்தை மீட்க ஐந்து அம்சம் திட்டம் - பிரணாப்

இந்த அரசால் எந்த முடிவை தான் திடமாகவும் தீர்க்கமாகவும் எடுக்க முடிகிறது. ஊழல் பெருச்சாளிகளின் ஓட்டு மொத்த கூடாரமாக காங்கிரஸ் இருக்கிறது. ஆதர்ஷ், காமன்வெல்த், ஸ்பெக்ட்ரூம் ஏதாவது ஒன்றிலாவது சம்பத்தபட்டவர்கள் மேல் நடவடிக்கை எடுக்கபடுகிறதா இல்லை அவர்களை காப்பதற்கான எல்லா நடவடிக்கைகளும் முடிக்கிவிட பட்டிருக்கிறதா என்று தெரியவில்லை. இந்த லட்சணத்தில் கருப்பு பணத்தை மீட்க ஐந்து அம்ச திட்டமாம்...

இளங்கோவன் அந்தர் பல்டி, ஆதரவாளர்கள் அதிருப்தி
தனி மரம் தோப்பாக்காது சார். தனியா கத்தி வீசினீங்க ஒண்ணும் வேலைக்கு ஆவாலே போல.. குறித்து வைத்து கொள்ளுங்கள் இது காங்கிரஸின் தோல்விக்கு ஆரம்பம். இந்த கூட்டணி சந்தர்ப்பவாத ஊழல் கூட்டணி என்று ஒவ்வொரு தமிழனும் தெரிந்தே இருக்கிறான்.

அரசியலின் ஒரு மாற்றம் கொண்டு வருவதே லட்சியம் - ராகுல்
அது நிச்சயம் ஒரு அரசியல் வாதியால் முடியாது. உங்களின் சாயம் எத்தனை நாளைக்கு என்று பார்ப்போம்.

பா ம க எந்த பக்கம் - செய்தி

பேரம் எங்கு படிக்கிறதோ அந்த பக்கம். ஆனால் ஒன்று உறுதி முன்பெல்லாம் பா ம க இடம் பெரும் கட்சி வெற்றி பெரும் என்ற ஒரு நிலை இருந்தது. இனி பா ம க சேர்ந்ததாலேய அந்த கட்சிகள் தோற்க்கும் பாருங்கள். என்ன ஒரு கொடுமை சார். இந்த மாதிரி வெறும் சுயநலத்திற்க்காகவே இருக்க கூடிய ஒரு கட்சியை எங்குமே பார்க்க முடியாது. தமிழனின் தலை விதி

என் வேலை முடிஞ்சது..உங்கள் கருத்தையும் சொல்லுங்க. எல்லாரும் பேசி ஒரு முடிவுக்கு வருவோம்

3 comments:

 1. பொம்மலாட்டம் நடக்குது இங்கே புதுமையாகவா இது தெரியுது?

  ReplyDelete
 2. நன்றி ஜோதிஜி..நீண்ட நாட்களுக்கு பிறகு வருகிறீர்கள்

  ReplyDelete
 3. நியாய தீர்ப்புக்கு
  நாள் நெருங்கி கொண்டிருக்கிறது போல...
  பா ம க - தி மு க கூட்டணி
  உறுதியாகிவிட்டது

  ReplyDelete

உங்களின் வரவிற்கான முத்திரையை வைத்துவிட்டு போங்கள். உங்களின் ஒரு சில நிமிடத்தை இங்கு செலவளிததற்க்கு நன்றி. மீண்டும் நேரம் கிடைக்கும் போது வாங்க.

LinkWithin

Related Posts with Thumbnails