Saturday, March 13, 2010

பிடித்த பத்து பெண்கள்...மேனகா முதல் அனுஷ்கா வரை - தொடர் பதிவு

நண்பர் சைகொப "பிடித்த பத்து பெண்கள்" தொடர் பதிவிற்கு அழைத்திருந்தார். நன்றி..சைகொப

ஆனால் எனக்கு என்ன தெரியும் பெண்களை பற்றி...கண்டிப்பாக உறவினர்களாக இருக்க கூடாது என்ற கண்டிசன் தான் கொஞ்சம் வருத்தம். அம்மா, அக்கா தங்கச்சின்னு வேலை முடியும்...மற்றபடி நான் ஏதாவது சொல்ல போக, பெண் பதிவர்கள் கோபித்துகொண்டால் என்ன செய்வது. சரி சரி ஆனது ஆகட்டும் என்னை விரும்பிய ஐயோ..தப்பு தப்பு நான் விரும்பிய பெண்களை மட்டும் சொல்லிவிடுகிறேன். அவர்கள் பிரபலங்கள் அல்ல தான் ஆனாலும் ஒரு கலைஞனை உருவாக்கியவர்கள் என்ற வகையிலாவது...சரி சரி...ஒரு விளம்பரம் தான்...

என்னை முதன் முதல் இம்ப்ரெஸ் செய்தது என் பள்ளி தோழி மேனகா தான். ஒரு சாதாரண மாநகராட்சி பள்ளியில் படித்த அந்த காலங்களில் கொஞ்சம் அழகும் துரு துருவென்றிருந்த மேனகாவை எல்லோருக்கும் பிடிக்கும். ஏனோ தெரியவில்லை அந்த பெண் குழந்தையின் உருவம் இன்னும் மறக்கவில்லை. இப்போது எப்படி எங்கே இருக்கிறாளோ தெரியாது...ஆனால் என்னை கனவு காண வைத்த முதல் பெண் அவள்தான்.

கொஞ்சம் வளர்ந்து மேல்நிலை பள்ளியில் சேர்ந்த பின் ஏற்பட்ட முதல் காதல், எப்போதும் மறக்க முடியாதது...குஞ்சு குளுவான்கள் எல்லாம் காதலிப்பதாக இப்போது சினிமா வருகிறது..ஆனால் அப்போதே நான் ஒட்டிய சினிமா தான் என் முதல் காதல். அந்த பெண்ணின் பெயர் செல்வி. அப்போது 9 - ம் வகுப்பில் படித்தாள் என்று நினைக்கிறேன். நான் பதினொன்றாம் வகுப்பில். பாரதியார் தனது வாழ்வில் நேர்ந்த முதல் காதலை குறித்து தான் என்னுயிர் கண்ணம்மா என்ற பாடலை எழுதியதாக தமிழாசிரியர் சொல்லி கேள்விபட்டதும்...என் கண்ணம்மாவை குறித்து கவிதையாக எழுதி எழுதி குவித்தேன்.... இப்பவும் என் பெட்டியில் பத்திரமாக இருக்கும் அந்த கவிதைகள் எந்த கல்மிஷமும் இல்லாத என் காதலை மட்டுமே ( நம்புங்க சார்...)

இப்போ கல்லூரி வந்தாகிவிட்டது...முதலாமாண்டில் காயத்திரி என்ற பெண்ணை பார்த்ததும் ஈர்க்கப்பட்டு, பேசி பேசி மூன்றாமாண்டில் நான் காதலிப்பதாக சொன்னேன். சில பல சமூக காரணங்களால் இது ஒத்துவராது என்று என்னை விட்டு விலகி விட்டார். இப்போதும் அவ்வப்போது நினைத்து கொள்கிறோம் இரண்டுபேரும் மற்றபடி எதுவும் தெரியாது...

அடுத்து வேலை தேடி, பெங்களூர், கொச்சி என்று ஊர் ஊராக அலைந்தபின் இடையில் இரண்டு வருடம் துபாயில் இருந்தேன் மீண்டும் கோவை வந்து ஒரு தொழில் தொடங்கினேன்..
அப்போது ஷோபா என்றொரு பெண் அறிமுகமானார். தொழில் நிமித்தமாக அடிக்கடி சந்திக்க வேண்டி இருந்தது. ஒரு பெண்ணாலும் ஆண்கள் செய்யகூடிய எல்லா வேலையும் செய்ய முடியும் என்பது அவரை பார்த்த பின்பு தான் புரிந்தது. வெளிநாடுகளில் இது சகஜமென்றாலும் இங்கு இவள்தான் என் முதல் அனுபவம். அதுமட்டுமல்ல..தான் முன்னிலை பெறவேண்டுமானால் அவள் தன்னை தரவும் தயாராக இருந்தாள். அப்படியும் பல பேர் அவளை சுவைத்து தான் அவளோடு வியாபாரம் வைத்து கொண்டிருந்தார்கள். ஒரு பலவீனமான சூழ்நிலையில் நானும் தவறு செய்தேன் என்று சுற்றி வளைக்கவெல்லாம் இல்லை. நானும் தெரிந்தே தான் தவறு செய்தேன். அது ஒரு வயசு சார்....

அப்பறம் சினேகா. எனக்கு பிடித்த நடிகைகளில் ஒருவர். அவரின் புன்னகையும், சிரித்த முகமும் பார்த்துக்கொண்டே இருக்கலாம். எவனுக்கு கொடுத்து வச்சிருக்கோ....இந்திய பெண்களும் உலக அழகிகளாக தகுதியுடையவர்கள் தான் என்று நிரூபித்த ஐஸ்வர்யா, வெள்ளை தோலையும், கருத்த பெண்களையுமே பார்த்து பார்த்து சலித்து போன ஒரு கட்டத்தில் இந்திய பெண்களாலும் சாதிக்க முடியும் என்று நிரூபித்த, இன்று பல இளம் பெண்களுக்கு ரோல் மாடலாக இருக்கிற சானிய மிர்சா.

என் அலுவலகத்தில் வேலை பார்த்த ராஜேஸ்வரி, இந்த பெண் ஒரு வித்தியாசமான ஜந்து என்று தான் சொல்லவேண்டும். வேலையை தவிர வேறு எந்த விஷயமும் தெரியாது. அல்லது தெரிந்த மாதிரி காட்டிகொண்டதில்லை. 9 .10 இருக்கையில் அமர்ந்தால் சரியாக 1 மணிக்கு சாப்பாடு. ௦மீண்டும் 1 .30 க்கு அமர்ந்தால் 6 மணிக்கு தான் சீட்டை விட்டு எழுந்திருப்பார். அனாவசியமாக ஒரு பேச்சு கிடையாது....மொபைல் போனில் கால் வந்தாலும் முக்கியமான நபராக இருந்தாலொழிய அட்டன்ட் செய்யமாட்டார். இந்த மாதிரி பெண்கள் வேலை பார்க்க கிடைப்பது மிக அரிது.

அவ்வளுவு தான் சார். இதற்க்கு மேல் என்னால் யோசிக்க முடியவில்லை. எனக்கு தெரிந்த என்னை யோசிக்க, ஆச்சர்யப்பட வைத்த பெண்கள் லிஸ்ட் இது. இரத்த சம்பந்த உறவுகளை இதில் குறிப்பிடவில்லை. அதற்க்கு வாய்ப்பிருந்தால் என்னை பெற்றெடுத்த தாயும், நான் பெற்றெடுத்த என் குட்டி தேவதை அனுஷ்காவும் பட்டியலில் முதலில் வந்திருக்கும்.

என் தேவதை

15 comments:

 1. சரவெடி..... இந்த பதிவை சொன்னேன்.........மிக்க நன்றி ஜீவன் சிவம்.
  வித்தியாசமா இருக்கு, வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 2. நன்றி சைகொப...
  உங்க பேரை காப்பாற்றி விட்டேனா

  ReplyDelete
 3. நன்றி ஷங்கர்...
  குட்டி தேவதையிடம் உங்கள் அன்பை சொல்கிறேன்.

  ReplyDelete
 4. ஷங்கர் அன்பே சிவம் என்று ஒரு வரியில் விமர்சனத்தை முடித்து கொண்டார்.
  அந்த ஒரு வரிக்கு ஆயிரம் அர்த்தங்கள் உண்டென்று நினைக்கிறேன்...

  ReplyDelete
 5. neeum oru sabalakaran thanaa

  ReplyDelete
 6. இதையெல்லாம் சபலம் என்று சொன்னால் நாட்டில் ஒருவன் கூட
  யோக்கியமனவனாக இருக்க முடியாது தம்பி

  ReplyDelete
 7. மனதில் பட்டதை சொல்ல தைரியம் வேண்டும் சார்.. நல்லா இருக்கு.

  ReplyDelete
 8. நன்றி நாடோடி...
  மறுபடியும் வாங்க

  ReplyDelete
 9. அருமையான தேர்வு.

  நாம் அறிந்தவர்களைப்பற்றி எழுதுவது சுகமான அனுபவம்தான்.

  ReplyDelete
 10. உங்கள் பதிவு ரசிக்க வைத்தது.. வெளிப்படையாக சொன்ன விதம்.

  ReplyDelete
 11. நன்றி அக்பர்
  நன்றி ரிஷிபன்

  ReplyDelete
 12. தேவதைக்கு வாழ்த்துகள்

  ReplyDelete

உங்களின் வரவிற்கான முத்திரையை வைத்துவிட்டு போங்கள். உங்களின் ஒரு சில நிமிடத்தை இங்கு செலவளிததற்க்கு நன்றி. மீண்டும் நேரம் கிடைக்கும் போது வாங்க.

LinkWithin

Related Posts with Thumbnails