Monday, February 22, 2010

ரஜினி தலைமையில் அஜித் புதிய கட்சி துவக்கம்..!


போற போக்க பார்த்த வெகுவிரைவில் இது நடக்கும் போல தெரியுது...ரஜினியின் அமைதி யாரின் சிக்னலுக்காகவோ வெய்ட் பன்ற மாதிரி தெரியுது. சிக்னல் கிடைச்சிட்ட அப்பறம் அடி தூள் தான். ரஜினியின் ஆன்மிகம் மற்றும் அனுபவம் + அஜித்தின் இளமை கூட்டணி ஆட்சி கட்டிலை பிடித்தாலும் பிடிக்கும்.

அஜித் சொன்னது எந்த விதத்திலும் தவறில்லை. சொன்ன இடம் குறித்து நெருடல் ஏற்படத்தான் செய்கிறது. அதே சமயம் அந்த இடத்தை தவிர வேறு எந்த இடத்தில சொல்லியிருந்தாலும் இவ்வளவு பெரிய வரவேற்போ, விமர்சனமோ எழுந்திருக்காது. நேரிடையாக வீட்டில் சந்தித்து விளக்கமும் கொடுத்தாயிற்று..திரும்ப திரும்ப ஒரு நடிகரின் திருப்திக்காக இதை பெரிதுபடுத்தி, ரஜினி அஜித்க்கு ரெட் கார்ட் என்பதெல்லாம்
ஆளுங்கட்சிக்கே பிரச்சனையை கொடுத்தாலும் கொடுக்கும்.

ஊடகங்களின் வளர்ச்சி மக்களுக்கு எல்லா விஷயத்தையும் வெட்டவெளிச்சம் போட்டு காட்டிவிட்டது. எந்த விஷயத்தால் ஒரு சாதாரண வாக்காளன் உணர்ச்சி வசப்படகூடும் என்பது புரியாத புதிர். ஒருவேளை ரஜினியை அரசியல் கட்சிகள் கட்டம்கட்ட ஆரம்பித்தால் ரசிகர்கள் மட்டுமல்ல பொதுமக்களும் பொங்கிவிடுவார்கள். ரஜினியின் இமேஜ் அப்படி.

இதே மாதிரியான ஒரு கூட்டத்தில் தான் கலைஞருக்கும், எம்ஜியாருக்கும் மனஸ்தாபம் ஏற்பட்டதாக வரலாறு உண்டு. ஒருவேளை வரலாறு திரும்புதோ...

20 comments:

  1. தலைப்பை பார்த்துட்டு, கட்சி உதயம் ஆயிருச்சோன்னு நினைச்சிட்டேன் :))

    ReplyDelete
  2. நன்றி சைவ கொத்துபுரோட்டா
    விரைவில் உதயமானாலும் ஆகும்

    ReplyDelete
  3. கட்சிக்கு என்ன கொடி? என்ன பேர்? என்றும் ஒன்ன சொல்லவில்லையே சார்.

    ReplyDelete
  4. கணிப்பு நல்லாத்தான் இருக்கு..,


    சூழல் ஓ.கே..,

    ஆனால் நம்ம ஊரு அரசியல்ல காம்பினேஷன் பெரும்பாலும் வெற்றி அடைவதில்லை..,

    ReplyDelete
  5. மீண்டும் கண்கள் பனித்து, தயாநிதி போல இருவரையும் டம்மி ஆக்கப் போகிறார் பாருங்கள்.

    ReplyDelete
  6. நன்றி சுரேஷ்
    மீண்டும் வாங்க

    ReplyDelete
  7. சார் சங்க ஊதிடிங்க என்னா நடக்குதுன்னு பாப்போம் (ரெண்டு பேருமே குழப்ப வாதிகளே சார் strong ஆ முடிவு எடுக்க மாட்டாங்களே )

    ReplyDelete
  8. நன்றி அமைச்சரே..
    எதோ நம்மால் முடிஞ்சது...

    ReplyDelete
  9. "இதே மாதிரியான ஒரு கூட்டத்தில் தான் கலைஞருக்கும், எம்ஜியாருக்கும் மனஸ்தாபம் ஏற்பட்டதாக வரலாறு உண்டு. ஒருவேளை வரலாறு திரும்புதோ"

    ஐயா அது MGR , இது ரஜினி. அரசியல் நடத்த ரசிகர்கள் மட்டும் போதாது சற்று துணிவும் வேண்டும். அது எல்லாம் ரஜினியிடம் இருபது மாதிரி தெரியவில்லை. இன்று ஒரு பேச்சு நாளை ஒரு பேச்சு இது தான் ரஜினி. சும்மா வீர வசனம் பேசி ரஜினியை ரணகளம் ஆகிவிடாதீர்கள். மனிஷன் இந்த வயசிலும் 20 வயது குட்டிகளுடன் டூயட் பாடி சந்தோசமா இருக்கிறது உங்களுக்கு ப்டிகவிலையா?

    ReplyDelete
  10. "இதே மாதிரியான ஒரு கூட்டத்தில் தான் கலைஞருக்கும், எம்ஜியாருக்கும் மனஸ்தாபம் ஏற்பட்டதாக வரலாறு உண்டு. ஒருவேளை வரலாறு திரும்புதோ"

    ஐயா அது MGR , இது ரஜினி. அரசியல் நடத்த ரசிகர்கள் மட்டும் போதாது சற்று துணிவும் வேண்டும். அது எல்லாம் ரஜினியிடம் இருபது மாதிரி தெரியவில்லை. இன்று ஒரு பேச்சு நாளை ஒரு பேச்சு இது தான் ரஜினி. சும்மா வீர வசனம் பேசி ரஜினியை ரணகளம் ஆகிவிடாதீர்கள். மனிஷன் இந்த வயசிலும் 20 வயது குட்டிகளுடன் டூயட் பாடி சந்தோசமா இருக்கிறது உங்களுக்கு ப்டிகவிலையா?

    ReplyDelete
  11. இங்கு எதுவேண்டுமானாலும் நடக்கலாம் நண்பரே...!! எம்ஜியாருக்கு இருந்த அதே துணிச்சல், விவேகம் ரஜினியிடமும் உண்டு.
    ஆனால், வெளிபடுத்த கூடிய காலம் அது அவர் கையில் இல்லை. சூழ்நிலைகள் உருவாகும் போது யார் வேண்டுமானாலும் தலைவர்கள் ஆகலாம்

    ReplyDelete
  12. நடந்தா நல்லாத்தான் இருக்கும்/////என்ன ஒரு விஷயத்தை ஊதிஊதி பெருசாக்குவது இந்த பத்திரிக்கைதானே பார்ப்போம்.....

    ReplyDelete
  13. நன்றி நெகமம்.
    நெருப்பில்லாமல் புகையாது..பார்ப்போம்

    ReplyDelete
  14. ஐயா ரஜனி ரசிகனே, ரஜினிக்கு துணிவு இருக்கோ இலையோ, முதலில் உங்களுக்கு துணிவிருந்தால் என்னுடைய
    பின்னூட்டத்தை முதலில் வெளிபடையாக பதியும் பார்க்கலாம்.

    ReplyDelete
  15. உங்கள் பின்னூட்டத்தை பதிவிலிட எதற்க்கு தைரியம், என் கருணை தான் வேண்டும்

    ReplyDelete
  16. உங்களுக்கு எப்போ கருணை வரும் ஐயா? உங்களையும் ரஜினியையும் புளுகி எழுதினால் வருமா?

    சரி எழுதுகிறேன், வருங்கால முதல்வர் ரஜினி வாழ்க !!

    "ஏதோ பிறந்தோம், வளர்ந்தோம். வேறு என்ன சொல்ல. இதுவரை எதுவும் சொல்லிகொள்கிற அளவிற்கு சாதிக்கவில்லை. பார்ப்போம் எதுவரையோ.."

    ரஜினி சினிமா உலகிலாவது சாதித்தார், ஆனால் எதுவுமே சாதிக்காது ரஜினி எதாவது அரசியலில் சாதிப்பார் என்று பகல் கனவு காணும் ரஜினி ரசிகன் ஜீவன்சிவம் வாழ்க.

    வெட்கமாக இலையா ஐயா உங்களுக்கு 6 கோடி தமிழன் உள்ள தமிழ்நாட்டில் உங்களை ஆள்வதற்கு ஒரு தமிழன் இல்லை.

    ReplyDelete
  17. நீங்கள் தமிழரா என்று எனக்கு தெரியாது. நீங்கள் சாதித்த விவரங்களும் எனக்கு google search - ல் கிடைக்கவில்லை. தெரியபடுத்தினால் உங்களை பற்றியும் ஒரு பதிவை போட்டு அழகு பார்ப்பேன்.
    மற்றபடி நான் எதுவும் சாதிக்கவில்லை என்ற உங்கள் கவலை எனக்கு புரிகிறது. என்ன செய்ய...6 கோடி தமிழரில் எதுவே சாதிக்கத என்னை போன்ற ஒரு சிலரை உங்களை போன்ற பெரியவர்கள் பொருத்து கொள்ள தான் வேண்டும்.

    ReplyDelete
  18. எம்ஜியார் வந்தது அந்த காலம். தமிழன் உலகம் அப்போது மிக சிறியது. இன்றோ தமிழன் இனையதள உலகில் நீச்சலடிபவன், உலக அறிவு பெற்றவன். ரஜினி எம்ஜியார் போல் வரமுடியாது. He has to prove himself before public then only he could succeed in politics at TN. MGR is an accident to Tamilnadu Politics, Accidents never happens everytime.

    ReplyDelete
  19. எம் ஜி ஆர் அரசியலுக்கு வந்தது விபத்து என்றால் பத்து வருடங்கள் தொடர்ந்து அவர் ஆட்சி செய்திருக்க முடியாது. தமிழனின் இனைய அறிவு நடிகைகளின் தொடைகளுக்குள் மறைந்து கிடப்பதை தான் இன்றைய பதிவுகள் சொல்லுகின்றன..மற்றபடி அவன் அதே அறிவுஜீவி தான்.

    ReplyDelete

உங்களின் வரவிற்கான முத்திரையை வைத்துவிட்டு போங்கள். உங்களின் ஒரு சில நிமிடத்தை இங்கு செலவளிததற்க்கு நன்றி. மீண்டும் நேரம் கிடைக்கும் போது வாங்க.

மம்தாவை பிரதமர் வேட்பாளராக....!

மிக நீண்ட நாட்களுக்கு பிறகு இன்று பதிவிட தோன்றியது. முதல் காரணம் தமிழகத்தை பிடித்திருந்த இருள் விலகுகிறது. கூடிய விரைவில் இந்தியாவை பீடித்தி...