Saturday, January 2, 2010

எழுத்தாளன் கோடிஸ்வரனாக முடியுமா...

சாருவின் வலைதளத்தில் அவரது புத்தகத்திற்கு அவரே விளம்பரம் தருகிறார். விலையோ ரூ.௦௦1000 நீங்கள் ஒரு திரைப்படம் பார்க்க ஆகும் செலவு தான். அருமையான இந்த புத்தகத்தை வாங்கி படித்து பயன் பெற வேண்டுமென்று.

ஒரு எழுத்தாளராக, தமிழ் கூறும் நல்லுலகம் அறிந்த எழுத்தாளராக அறியப்பட்ட சாரு நிவேதிதாவின் நிலையே இன்றைக்கு இப்படிதான் இருக்கிறது...

50 வருட பாரம்பரியம் கொண்ட வார இதழ்களே இன்று நடிகைகளின் கலர் போடோக்களை நம்பி தான் ஓடிகொண்டிருக்கிறது..6 லட்சமோ, 3 லட்சமோ பிரதிகளை முடிவு செய்வது முன் பக்க நடிகையின் உடையளவு தான். (சில நடுப்பக்க பத்திரிக்கைகளும் உண்டு)

தமிழனின் ரசனையை என்னவென்று சொல்வது...

பெரியார், காமராசர் பற்றிய படங்கள் வந்தவுடன் பெவிலியன் திரும்புகின்றன..காமராசர் படம்
ஓடிய தியேட்டரில் என்னுடன் சேர்த்து ஒரு 100 பேர் தான் இருந்தனர்.. ஆனால் அருந்ததி புகழ் அனுஷ்காவின் தெலுங்கு படம் (டப் செய்யபடமாலேய..) கூட்டம் அலை மோத ஓடுகிறது..

தமிழனுக்கு காசு முக்கியமில்லை கவர்ச்சி தான்..

தமிழ் எழுத்தாளன் காசு பார்க்க ஒன்று தான் வழி...

மேல்மட்டதிலிருப்பவர்களை பற்றிய வண்டவாளங்களை கிசுகிசு எழுத வேண்டும். நடிகைகளின் அந்தரங்ககளை பட்டியலிடவேண்டும்... குறைந்த பட்சம் தரமான உங்கள்
படைப்புக்கு ரஜினியோ கமலோ முன்னுரை வழங்க வேண்டும்...அதை டபுள் டம்மி போஸ்டர் அடித்து தமிழ்நாடு முழுக்க ஓட்டினால் உங்கள் புத்தகம் குறைந்தது ஒரு 25000 விற்பதற்கு வாய்ப்புண்டு....

மற்றபடி எழுதி கோடிஸ்வரனவது என்பது....குதிரைகொம்பு தான்.

3 comments:

  1. //எழுதி கோடிஸ்வரனவது என்பது....குதிரைகொம்பு தான்.//

    யாருக்கு எழுதுகிறோம், எப்படி நல்ல விஷயங்களை எழுதி அனைவரையும் ஈர்க்க முடியும் என்று தெரிந்தவர்கள் குதிரைக் கொம்பாக இருப்பதால் அவர்கள் கோடீஸ்வரனாவதும் குதிரைக்கொம்பாக இருக்கிறது. காமராஜரைப் பேசும் போது வெறும் வரலாறு போலவும், அல்லது மிகச் சாதாரண ஆள் போலவும் பேசினால் பலருக்கும் பிடிக்காது. பெரியார் படம் எடுக்கிறேன் பேர்வழி என்று அவர் குத்தாட்டம் பார்ப்பதாக படம் எடுத்தால் பெரியார் பக்தன் மட்டுமல்ல சராசரி ரசிகன் கூட ஜீரணிக்கமாட்டான். இதுதான் எழுத்துக்கும்..,

    உண்மையை உண்மையாய் எழுதுவதை உண்மைகளில் தேவையானவைகளை மட்டும் எழுதினால் மக்கள் ரசிப்பார்கள்., சரக்கும் விற்பனை ஆகும். அதில் பொய் என்னும் போதை கலக்கும்போதும், எதிரணி அணியைத் தாக்கும் காரத்தைச் சேர்க்கும்போதும் அதிரடியாய் பெற்ற வரவேற்பு சில நாட்களில் இழக்க வேண்டியதாய் போய்விடும்.

    சில பல எழுத்தாளர்களின் வாழ்க்கையில் நடப்பது அதுதான்.

    சில ஆண்டுகளுக்கு முன் உலக அளவில் குழந்தைகளுக்கான புத்தகம் எழுதி மாபெரும் கோடீஸ்வரர்களான கதையெல்லாம் உங்களுக்குத் தெரியும் என்றே நினைக்கிறேன்

    ReplyDelete
  2. //சில ஆண்டுகளுக்கு முன் உலக அளவில் குழந்தைகளுக்கான புத்தகம் எழுதி மாபெரும் கோடீஸ்வரர்களான கதையெல்லாம் உங்களுக்குத் தெரியும் என்றே நினைக்கிறேன்//

    என் பதிவில் ஒரு வார்த்தையை சேர்க்க மறந்துவிட்டேன் தமிழ் எழுத்தாளன் கோடிஸ்வரனாக முடியுமா... என்று இருந்திருக்க வேண்டும்.

    ReplyDelete

உங்களின் வரவிற்கான முத்திரையை வைத்துவிட்டு போங்கள். உங்களின் ஒரு சில நிமிடத்தை இங்கு செலவளிததற்க்கு நன்றி. மீண்டும் நேரம் கிடைக்கும் போது வாங்க.

மம்தாவை பிரதமர் வேட்பாளராக....!

மிக நீண்ட நாட்களுக்கு பிறகு இன்று பதிவிட தோன்றியது. முதல் காரணம் தமிழகத்தை பிடித்திருந்த இருள் விலகுகிறது. கூடிய விரைவில் இந்தியாவை பீடித்தி...